சபினா பார்க் அரங்கம்
சபினா பார்க் மைதானம் யமேக்காவின் கிங்ஸ்டனில் அமைந்துள்ள துடுப்பாட்ட மைதானமாகும். இது கிங்ஸ்டன் துடுப்பாட்டக் கழகத்தின் மைதானமாகும். கிங்ஸ்டணின் உலர் காலநிலையைக் கொண்டப்பகுதியில் அமைந்துள்ள இம்மைதானம் கரிபியாவில் மிக வேகமான விளையாட்டரங்காக காண்ப்பட்டது.
1930 இல் மெல்போன் துடுப்பாட்டக் கழகம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பிரயானம் மேற்கொண்டப் போது இம்மைதானம் தேர்வுத் துடுப்பாட்ட மைதானமானது.துடுப்பாட்ட வரலாற்றின் முதல் மும்மைச் சதமான அண்டி சண்டமின் 325 ஒட்டங்கள் இம்மைதானத்தில் இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கிடையான போட்டியில் பெறப்பட்டது. இம்மைதானத்தில் பெறப்பட்ட சர் கார்பீல்ட் சோர்பசனின் 365 ஓட்டங்கள் 36 ஆண்டுகளாக துடுப்பாட்ட வீரர் ஒருவரால் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாக காணப்பட்டது. 30,000 பார்வையாளருக்கான வசதிகளைக் கொண்டுள்ளது. யமேக்காவின் மலைத்தொடர்கள் பின்னணியில் உள்ளதோடு இம்மைதானம் துடுப்பாட்ட மைதானங்களில் அழகிய மைதானங்களில் ஒன்றாகும். 2007 உலகக்கோப்பை துடுப்பாட்ட போட்டிகளின் போது பாகிஸ்தான்,அயர்லாந்து, மேற்கிந்தியத்தீவுகள், சிம்பாப்வே துடுப்பாட்ட அணிகள் பங்குபற்றிய குழு D யின் 6 போட்டிகளையும் ஒரு அரை-இறுதி போட்டியையும் இங்கு நடத்தப்பட்டது.
இவற்றையும் பார்க்க
தொகுவெளியிணைப்புகள்
தொகு