துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 2007

துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப்போட்டி 2007 (2007 Cricket World Cup Final, கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டி 2007) என்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் ஒன்பதாவது உலகக் கிண்ணத்துக்காக இடம்பெற்ற சுற்றுப் போட்டிகளின் இறுதிப் போட்டி பற்றியதாகும். இப்போட்டி 2007 ஏப்ரல் 28 ஆம் நாள் கரிபியன், பார்படோசு, கென்சிங்டன் ஓவல் துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் ஆத்திரேலிய அணி, இலங்கை அணியை வென்று நான்காவது தடவையாகவும் உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டது. ஆத்திரேலிய, இலங்கை அணிகள் 1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்குத் தெரிவாகி இலங்கை அணி வெற்றிபெற்றிருந்தது. இந்த ஒரு தோல்வியைத் தவிர இதற்கு முன்னர் ஆத்திரேலியா இலங்கை அணிக்கெதிராக விளையாடிய அனைத்து உலகக்கிண்ணப் போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. இந்த இறுதி ஆட்டம் இலங்கை பங்குபற்றிய இரண்டாவது உலகக்கிண்ண இறுதி ஆட்டமாகும். ஆத்திரேலியாவுக்கு இது ஆறாவது இறுதி ஆட்டமாகும்.

துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 2007
இறுதிப்போட்டி
நிகழ்வு2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
 ஆத்திரேலியா  இலங்கை
281/4 215/8
38 36
மழை காரணமாக ஒவ்வோர் அணிக்கும் 38 ஓவர்கள் கொடுக்கப்பட்டது. மேலும் பொழிந்த மழையால் இலங்கை அணியின் ஓவர்கள் 36 ஆகக் குறைக்கப்பட்டது.
நாள்28 ஏப்ரல், 2007
அரங்கம்கென்சிங்டன் ஓவல், பிரிட்ஜ்டவுன், பார்படோசு
ஆட்ட நாயகன்ஆத்திரேலியா ஆடம் கில்கிறிஸ்ட்
தொடர் ஆட்ட நாயகன்ஆத்திரேலியா கிளென் மெக்ரா
நடுவர்கள்ஸ்டீவ் பக்நோர், அலீம் டார்
பார்வையாளர்கள்20,108
2003
2011

நடைபெற்ற திகதி

தொகு
  • 28 ஏப்ரல், 2007

நடைபெற்ற அரங்கம்

தொகு

கரிபியன், பார்படோசு, கென்சிங்டன் ஓவல் துடுப்பாட்ட அரங்கம்

இறுதிப் போட்டி அணிகள்

தொகு

இலங்கை அணி

தொகு

ஆத்திரேலியா அணி

தொகு
  • அடம் கில்கிறிஸ்ட்
  • எம். எல். ஹெய்டின்
  • ரிக்கி பாண்டிங்
  • வொட்சன்
  • ஏ. சீமொன்
  • மைக்கல் கிளார்க்
  • மைக்கேல் ஹசி,
  • ஜீ.பி. ஹோக்,
  • என்.டப்ளியு. பிரேக்கன்,
  • எஸ்.டப்ளியு. டைட்,
  • கிளென் மெக்ரா

நாணயச்சுழற்சி

தொகு

இப்போட்டியில் நாணய சுழற்சியில் ஆத்திரேலியா அணி வெற்றியீட்டி துடுப்பெடுத்தாட முடிவெடுத்தது.

நடுவர்கள்

தொகு
  • நடுவர்கள்: ஸ்டீவ் பக்நோர், (மே.இ.தீ) அலீம் டார் (பாக்கித்தான்)
  • தொலைக்காட்சி நடுவர்: கொரஸ்டன் (தெ.ஆ)
  • போட்டி தீர்மானிப்பாளர்: ஜே.ஜே குரோ (நியுசிலாந்து)
  • மேலதிக நடுவர்: பீ.எப். போடிங் (நியுசிலாந்து)

இறுதிப் போட்டி

தொகு

இந்த இறுதி ஆட்டம் இலங்கை பங்குபற்றிய இரண்டாவது உலகக்கிண்ண இறுதி ஆட்டமாகும். ஆத்திரேலியாவுக்கு இது ஆறாவது இறுதி ஆட்டமாகும்.

ஆத்திரேலியா அணியின் துடுப்பாட்டம்

தொகு

மழை காரணமாக ஒவ்வோர் அணிக்கும் 38 ஓவர்கள் கொடுக்கப்பட்டது.

  • அடம் கில்கிறிஸ்ட் (பிடி) சில்வா (ப) பர்னான்டோ 149
  • எம். எல். ஹெய்டின் (பிடி) ஜயவர்தன (ப) மாலிங்க 38
  • ரிக்கி பாண்டிங் (த) (ஓடுகையில் ஆட்டமிழந்தமை) (ஜயவர்தன) 37
  • வொட்சன் (ப) மாலிங்க 3
  • ஏ. சீமொன் (ஆட்டமிழக்காமல்) 23
  • மைக்கல் கிளார்க் (ஆட்டமிழக்காமல்) 8

உதிரிகள் - 23

மொத்தம் - 4 விக்கட் இழப்புக்கு - 281 (38 ஓவர்கள்)

துடுப்பெடுத்து ஆடாதவர்கள்: மைக்கேல் ஹசி, ஜீ.பி. ஹோக்,என்.டப்ளியு. பிரேக்கன், எஸ்.டப்ளியு. டைட், கிளென் மெக்ரா

ஆட்டமிழந்த ஒழுங்கு: 1-172 (எம். எல். ஹெய்டின், 22.5), 2-224 (அடம் கில்கிறிஸ்ட், 30.3), 3-261 (ரிக்கி பாண்டிங் , 35.4), 4-266 (வொட்சன் 36.2)


இலங்கை அணியின் பந்து வீச்சு

  • சமிந்தவாஸ்: 8 - 0 - 54 - 0
  • லசித் மாலிங்க: 8 - 1 - 49 - 2
  • தில்லார பர்னான்டோ: 8 - 0 - 74 - 1
  • முத்தையா முரளிதரன்: 7 - 0 - 44 - 0
  • திலகரத்ன டில்ஷான்: 2 - 0 - 23 - 0
  • சனத் ஜெயசூரிய: 5 - 0 - 33 - 0

இலங்கை அணியின் துடுப்பாட்டம்

தொகு

மேலும் பொழிந்த மழையால் இலங்கை அணியின் ஓவர்கள் 36 ஆகக் குறைக்கப்பட்டது.

  • உபுல் தரங்க (பிடி) கில்கிறிஸ்ட் (ப) பிரேக்கன் 6
  • சனத் ஜெயசூரிய (ப)கிளார்க் 63
  • குமார் சங்கக்கார (பிடி) மெக்ரா (ப) ஹோக் 54
  • மகெல ஜயவர்தன (காலில் பந்துபடல்) (ப) வொட்சன் 19
  • சமர சில்வா (ப) கிளார்க் 21
  • திலகரத்ன டில்ஷான் (ஓடுகையில் ஆட்டமிழந்தமை) (கிளார்க் /மெக்ரா) 14
  • ரசல் ஆனொல்ட் (பிடி) கில்கிறிஸ்ட் (ப) மெக்ரா 1
  • சமிந்தவாஸ் (ஆட்டமிழக்காமல்) 11
  • லசித் மாலிங்க (ஸ்டம்ப்) கில்கிறிஸ்ட் (ப) சீமொன் 10
  • தில்லார பர்னான்டோ (ஆட்டமிழக்காமல்) 1

உதிரிகள் -15

மொத்தம் 8 விக்கட் இழப்புக்கு - 215 (36 ஓவர்கள்)

துடுப்பெடுத்து ஆடாதவர்: முத்தையா முரளிதரன்

ஆட்டமிழந்த ஒழுங்கு: 1-7 (உபுல் தரங்க 2.1), 2-123 (குமார் சங்கக்கார , 19.5), 3-145 (சனத் ஜெயசூரிய, 22.6), 4-156 (மகெல ஜயவர்தன , 25.5), 5-188 (திலகரத்ன டில்ஷான், 29.6), 6-190 (சமர சில்வா, 30.1), 7-194 (ரசல் ஆனொல்ட், 31.5), 8-211 (லசித் மாலிங்க, 33.6)

ஆத்திரேலியா அணியின் பந்து வீச்சு

  • என்.டப்ளியு. பிரேக்கன்: 6 - 1 - 34 - 1
  • எஸ்.டப்ளியு. டைட்: 6 - 0 - 42 - 0
  • கிளென் மெக்ரா: 7 - 0 - 31 - 1
  • வொட்சன்: 7 - 0 - 49 - 1
  • ஜீ.பி. ஹோக்: 3 - 0 - 19 - 1
  • மைக்கல் கிளார்க்: 2.5 - 0 - 33 - 2
  • ஏ. சீமொன் : 2 - 0 - 6 - 1

முடிவு

தொகு

இறுதி ஆட்டத்தில் அவுஸ்திரேலியா 53 ஓட்டங்களால் வென்று உலகக்கிண்ணத்தை 4 வது தடவையாகக் கைப்பற்றியது. அவுஸ்திரேலியா இப்போட்டித்தொடரை எந்த ஒரு ஆட்டத்தையும் இழக்காமல் விளையாடி வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

28 ஏப்ரல் 2007 1330 UTC
ஆத்திரேலியா  
281/4 (38 ஓவர்கள்)
  இலங்கை
215/8 (36 ஓவர்கள்)
  ஆத்திரேலியா 53 ஓட்டங்களால் வெற்றி (டலூ)
பார்படோசு
நடுவர்கள்: ஸ்டீவ் பக்நோர், அலீம் டார்
ஆட்ட நாயகன்: ஆடம் கில்கிறிஸ்ட்
  • மழை காரணமாக ஒவ்வோர் அணிக்கும் 38 ஓவர்கள் கொடுக்கப்பட்டது. மேலும் பொழிந்த மழையால் இலங்கை அணியின் ஓவர்கள் 36 ஆகக் குறைக்கப்பட்டது.