முதன்மை பட்டியைத் திறக்கவும்

மகேல ஜயவர்தன

இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர்
(மகெல ஜயவர்தன இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தெனகமகே பிரபாத் மகேல தி சில்வா ஜயவர்தன அல்லது மகெல ஜயவர்தன (Denagamage Praboth Mahela de Silva Jayawardene (சிங்களம்: මහේල ජයවර්ධන;(பிறப்பு:மே 27, 1977), என்பவர் முன்னாள் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் மற்றும் தலைவர் ஆவார். இவர் அணியில் சிறப்பு மட்டையாளராக கருட்ர்ஹப்படுகிறார். இவர் 2006 ஆம் ஆண்டு பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையால் ஆண்டின் தலைசிறந்த அணித்தலைவராக தெரிவு செய்யப்பட்டார். இவர் களத்தடுப்பிலும் சிறந்த ஆற்றலைக் கொண்டுள்ளார்.[1] தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 374 ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த வலதுகை மட்டையாளர் எனும் சாதனையைப் படைத்தார்.[2] தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் மட்டையாளர்களின் மிகச் சிறந்த போட்டியாக இது கருதப்படுகிறது.[3]

மகேல ஜயவர்தன
Mahela Jayawardene.jpg
இலங்கையின் கொடி இலங்கை
இவரைப் பற்றி
முழுப்பெயர் தெனகமகே பிரபோத் மகேல டீ சில்வா ஜயவர்தன
பிறப்பு 27 மே 1977 (1977-05-27) (அகவை 42)
கொழும்பு, மேல் மாகாணம், இலங்கை
வகை மட்டையாளர்
துடுப்பாட்ட நடை வலக்கை
பந்துவீச்சு நடை வலக்கை மத்திம கதி
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 187) ஆகஸ்ட் 2, 1997: எ இந்தியா
கடைசித் தேர்வு டிசெம்பர் 26, 2011: எ தென்னாப்பிரிக்கா
முதல் ஒருநாள் போட்டி (cap 74) சனவரி 24, 1998: எ சிம்பாப்வே
கடைசி ஒருநாள் போட்டி நவம்பர் 20, 2011:  எ பாக்கித்தான்
சட்டை இல. 10
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒருமுதஏ-தர
ஆட்டங்கள் 143 412 230 501
ஓட்டங்கள் 11,319 11,512 17,297 14,001
துடுப்பாட்ட சராசரி 50.30 33.17 50.13 33.49
100கள்/50கள் 33/45 16/70 49/75 17/87
அதிகூடிய ஓட்டங்கள் 374 144 374 163*
பந்து வீச்சுகள் 553 582 2,965 1,269
வீழ்த்தல்கள் 6 7 52 23
பந்துவீச்சு சராசரி 49.50 79.71 31.07 49.60
ஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள் 0 0 1 0
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் 0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 2/32 2/56 5/72 3/25
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 194/– 202/– 294/– 247/–

மார்ச் 22, 2014 தரவுப்படி மூலம்: கிரிக் இன்ஃபோ

1997 ஆம் ஆண்டில்தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அறிமுகமானார். அதற்கு அடுத்த ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அறிமுகமானார். இலங்கையில் நடந்த தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 374 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த இலங்கைத் துடுப்ப்பாட்ட அணியின் வீரர் எனும் சாதனையைப் படைத்தார். தேர்வுத் துடுப்பாட்ட சராசரி 50 க்கும் சற்றுக் குறைவாகவும், ஒருநாள் துடுப்பாட்டத்தில் 30 ஆகவும் உள்ளது. இலஙகைத் துடுப்பட்ட வரலாற்றில் 10,000 ஓட்டங்களைக் கடந்த முதல்வீரர் எனும் சாதனையைப் படைத்தார். ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளில் குறைவான சராசரியைப் பெற்றிருந்தாலும் சிறப்பான வீரராகவே கருதப்படுகிறார்.

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில் 10,000 ஓட்டங்களைக் கடந்த நான்கு இலங்கை வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மற்ற மூன்று வீரர்கள் சனத் ஜயசூரிய, குமார் சங்கக்கார மற்றும் திலகரத்ன டில்சான் ஆவர். ராகுல் திராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் இணை 3 ஆவது இலக்கிற்கு 5826 ஒட்டங்கள் எடுத்து சாதனை புரிந்தனர். இந்தச் சாதனையை காலி பன்னாட்டு அரங்கத்தில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத்தில் இவரும் சகவீரரான குமார் சங்கக்காராவும் இணைந்து 5890 ஒட்டஙகள் எடுத்து தகர்த்தனர். இந்த மைதானத்தில் இவர் விளையாடிய இறுதிப் போட்டி இதுவாகும். இந்த இணையின் 222 ஓட்டங்களில் ஜயவர்தனே 56 ஓட்டங்கள் எடுத்தார்.

2014 ஐசிசி உலக இருபது20 தொடரில் இலங்கைத் துடுப்பாட்ட அணி கோப்பையை வெல்வதற்கு மிக முக்கியமான நபர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். மேலும் 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம், 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை மற்றும் 2009 ஐசிசி உலக இருபது20 ,2012 ஐசிசி உலக இருபது20 ஆகிய தொடர்களில் இறுதிப் போட்டிக்குச் சென்ற இலங்கை அணியில் இவர் இடம்பெற்றிருந்தார்

2006 ஆம் ஆண்டின் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட தலைவராக இவரைத் தேர்வு செய்தத்கு. மேலும் 2007 ஆம் ஆண்டின் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரருக்கான விருதிற்குப் பரிந்துரை செய்யப்பட்டார். ஒருநாள் போட்டிகளில் வீரர்களை ரன் அவுட் இ செய்தவர் எனும் சாதனையைப் படைத்தார்.[4]

ஆதாரங்கள்தொகு

  1. Basevi, Trevor (2005-11-08). "Statistics - Run outs in ODIs". பார்த்த நாள் 2007-02-05.
  2. [1] highest test score by a right handed batsman
  3. Tracking the misses, Charles Davies, thecricketmonthly.com
  4. Basevi, Travis (8 November 2005). "Statistics – Run outs in ODIs". கிரிக்இன்ஃபோ. பார்த்த நாள் 2007-02-05.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேல_ஜயவர்தன&oldid=2765889" இருந்து மீள்விக்கப்பட்டது