வெண்தொண்டை மீன்கொத்தி

வெண்தொண்டை மீன்கொத்தி
H. s. fusca (இலங்கை)
Call
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
Halcyonidae
பேரினம்:
Halcyon
இனம்:
H. smyrnensis
இருசொற் பெயரீடு
Halcyon smyrnensis
லின்னேயசு, 1758
     distribution (includes gularis)
வேறு பெயர்கள்

Alcedo smyrnensis Linnaeus, 1758

வெண்தொண்டை மீன்கொத்தி (Halcyon smyrnensis) என்பது ஒரு மர மீன்கொத்தி. இது வெண்மார்பு மீன்கொத்தி எனவும் அழைக்கப்படும். மேலும் தமிழில் விச்சிலி, சிச்சிலி, பெருமீன்கொத்தி முதலிய பெயர்களும் உண்டு. இது உலகில் மேற்கில் பல்கேரியா, துருக்கி முதல் கிழக்கில் தெற்காசியா, பிலிப்பைன்சு வரை பரவியுள்ளது. இம்மீன்கொத்திகள் இவை சிறிய ஊர்வன, நிலநீர் வாழிகள், நண்டுகள், சிறு கொறிணிகள் முதலிய பலதரப்பட்ட உணவுகளை இரையாகக் கொள்கின்றன. இனப்பெருக்க காலத்தில் கட்டிடத்தின் உச்சி, மின்கம்பிகள் உள்ளிட்ட எடுப்பான இடங்களில் இருந்து ஒலியெழுப்புகின்றன.

வகைப்பாட்டியல்

தொகு

இதில் ஐந்து துணையினங்கள் உள்ளன:[2]

  • H. s. smyrnensis (Linnaeus, 1758) – தெற்கு துருக்கி வடகிழக்கு எகிப்து, ஈராக் முதல் வடமேற்கு இந்தியா வரை
  • H. s. fusca (Boddaert, 1783) – மேற்கு இந்தியா மற்றும் இலங்கை
  • H. s. perpulchra Madarász, 1904 – பூட்டான் முதல் கிழக்கு இந்தியா, இந்தோசீனா, மலாய் தீபகற்பம் மற்றும் மேற்கு சாவகம் வரை
  • H. s. saturatior ஹியூம், 1874 – அந்தமான் தீவுகள்
  • H. s. fokiensis Laubmann & Götz, 1926 – தெற்கு மற்றும் கிழக்கு சீனா, தைவான் மற்றும் ஆய்னான்

விளக்கம்

தொகு

இது ஒரு பெரிய மீன்கொத்தி. 28 செமீ நீளம் வரை வளரும். நன்கு வளர்ந்த நிலையில் இப்பறவையின் முதுகு, இறக்கைகள், வால் ஆகியன பளிச்சென்ற நீலநிறத்தில் இருக்கும். இதன் தலை, தோள், அடிவயிறு பழுப்பு நிறத்திலும் தொண்டையும், மார்புப்பகுதியும் வெள்ளையாக இருக்கும். பறக்கையில் இதன் இறக்கையில் வெள்ளைப் பகுதிகள் தெரியும்.

வாழிடமும் பரவலும்

தொகு

இப்பறவை பல்வேறுபட்ட சூழல்களில் வாழ்கிறது. மரங்கள், கம்பிகள் உள்ள திறந்த சமநிலங்களில் பெரும்பாலும் காணப்படுகிறது. இது மரத்தில் கூடு கட்டாது. மாறாக, மண் பாங்கான இடத்தில், பொந்து போன்ற அமைப்பை ஏற்படுத்தி, அதற்குள் இவை முட்டையிடும்.[3] இது இந்தியாவிலுள்ள மேற்கு வங்காள மாநிலத்தின் மாநிலப்பறவையும் ஆகும்.

மேற்கோள்

தொகு
  1. "Halcyon smyrnensis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008.
  2. Gill, Frank; Donsker, David, eds. (2017). "Rollers, ground rollers & kingfishers". World Bird List Version 7.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 28 May 2017.
  3. ராதிகா ராமசாமி (11 ஆகத்து 2018). "மீன்கொத்தியே… மீன்கொத்தியே…". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 12 ஆகத்து 2018.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Halcyon smyrnensis
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:


"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்தொண்டை_மீன்கொத்தி&oldid=3790007" இலிருந்து மீள்விக்கப்பட்டது