காளிம்பொங் மாவட்டம்


காளிம்பொங் மாவட்டம் (Kalimpong district) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்கில், ஜல்பைகுரி கோட்டத்தில் உள்ளது. இம்மாவட்டம் 14 பிப்ரவரி 2017ல், டார்ஜிலிங் மாவட்டத்தின் வடகிழக்குப் பகுதிகளைப் பிரித்து மேற்கு வங்காளத்தின் 20வது மாவட்டமாக நிறுவப்பட்டது.[2][3] இதன் தலைமையிட நகரம் காளிம்பொங் ஆகும். இதன் நிர்வாகத் தலைமயிட நகரம் காளிம்பொங் ஆகும். இம்மாவட்டம் வடக்கில் சிக்கிம் மற்றும் வடகிழக்கில் பூட்டான் எல்லையை ஒட்டியுள்ளது.

காளிம்பொங் மாவட்டம்
காளிம்பொங்மாவட்டத்தின் இடஅமைவு மேற்கு வங்காளம்
மாநிலம்மேற்கு வங்காளம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்ஜல்பைகுரி கோட்டம்
தலைமையகம்காளிம்பொங்
பரப்பு1,053.60 km2 (406.80 sq mi)
மக்கட்தொகை251642[1] (2011)
மக்களவைத்தொகுதிகள்டார்ஜிலிங் மக்களவைத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கைகாளிம்பொங் சட்டமன்றத் தொகுதி
மேற்கு வங்காளத்தின் வடக்கில், காளிம்பொங் மாவட்டம், எண் 20
காய்கறி வாங்கும் கூர்க்கா ஆண்கள்

1053.60 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டம், 23 வார்டுகள் கொண்ட காளிம்பொங் நகராட்சி, மூன்று ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 42 கிராமப் பஞ்சாயத்துகள் கொண்டது.[4]

மக்கள் தொகையியல் தொகு

2011ம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, காளிம்பொங் மாவட்ட மக்கள் தொகை 2,51,642 ஆகும். இம்மாவட்டத்தில் இந்திய கூர்க்கா மக்கள் அதிகம் வாழ்கின்றனர். மேலும் லெப்ச்சா மக்கள் மற்றும் பூட்டியா மக்கள் பிற இரு முக்கிய சமூகத்தினர் ஆவார்.

காளிம்பொங் மாவட்டத்தில் நியோரா சமவெளி தேசியப் பூங்கா 159.89 km2 (61.73 sq mi) பரப்பளவு கொண்டது. [5]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காளிம்பொங்_மாவட்டம்&oldid=3586595" இருந்து மீள்விக்கப்பட்டது