தாராசங்கர் பந்தோபாத்தியாய்
சாகித்திய அகாதமி விருது பெற்ற வங்காள எழுத்தாளர்
தாராசங்கர் பந்தோபாத்தியாய் (வங்காள மொழி: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়) (23 சூலை 1898[1] – 14 செப்டம்பர் 1971) என்பவர் முன்னணி வங்காள எழுத்தாளர் ஆவார். இவர் 65 புதினங்களையும், 53 கதைகளையும், 12 நாடகங்களையும், 4 கட்டுரை நூல்களையும், 4 வாழ்க்கை வரலாறுகளையும், 2 பயணக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.[2] இவரின் சிறந்த எழுத்துப் பணிகளைப் பாராட்டி இரபிந்தர புரசுகர் விருது சாகித்திய அகாதமி விருது, ஞானபீட விருது, பத்ம பூசன் ஆகிய இந்திய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
தாராசங்கர் பந்தோபாத்தியாய் তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় | |
---|---|
பிறப்பு | 23 சூலை 1898 இலாப்புர், பைர்பூம் மாவட்டம், வங்காளம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு |
இறப்பு | 14 செப்டம்பர் 1971 கொல்கத்தா, மேற்கு வங்காளம் , இந்தியா |
தொழில் | புதின எழுத்தாளர் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | இரபிந்தர புரசுகர் விருது சாகித்திய அகாதமி விருது ஞானபீட விருது பத்ம பூசன் |
இவரது நூல்களில் சிலவற்றை த. நா. சேனாபதி மற்றும் த. நா. குமாரசாமி ஆகியோர் தமிழ் மொழியில் மொழிபெயர்த்துள்ளனர்.