ஈஸ்வர சந்திர வித்யாசாகர்

ஈஸ்வர சந்திர வித்யாசாகர்

ஈஸ்வரர் சந்திர பந்தோபாத்யாயா என்கிற ஈஸ்வர சந்திர வித்யாசாகர் (செப்டம்பர் 26, 1820 - சூலை 29, 1891) என்பவர் கல்வியாளர் மற்றும் எழுத்தாளர். பெண் கல்வி முன்னேற்றம், விதவைத் திருமணம் போன்ற சமூக மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் அதிக நாட்டமுடையவர். இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் மேட்னிபூர் ஆருகிலுள்ள பிரிசங் எனும் ஊரில் 26-09-1820 ஆம் நாள் பிறந்தார். 1839 ஆம் ஆண்டில் இந்து சட்டக்குழு தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1841 ஆம் ஆண்டில் “நியாயா” மற்றும் “ஜியோதிஷ்” தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்ற இவர் வேதங்களையும், சம்ற்கிருத இலக்கியங்களையும் ஆழ்ந்து படித்தார். இவருக்கு சமற்கிருதக் கல்லூரி “வித்யாசாகர்” எனும் பட்டத்தை அளித்தது.

கல்விப் பணிதொகு

  • 1841 ஆம் ஆண்டில் ஃபோர்ட் வில்லியம் கல்லூரியில் முக்கியப் பண்டிதராக நியமிக்கப்பட்டார்.
  • 1846 ஆம் ஆண்டில் சமற்கிருதக் கல்லூரியின் செயலாளரானார்.
  • 1850 ஆம் ஆண்டில் ஃபோர்ட் வில்லியம் கல்லூரியில் முதன்மைப் பண்டிதராக நியமிக்கப்பட்டார்.
  • 1851 ஆம் ஆண்டில் சமற்கிருதக் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டார்.
  • 1855 ஆம் ஆண்டில் வங்காளத்தின் தெற்குப் பகுதிக்கு சிறப்புப் பள்ளி ஆய்வாளராகக் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.
  • பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்கிற இவரது முற்போக்கு எண்ணத்தினால் 35 பெண்கள் பள்ளிகளை நிறுவினார்.

எழுத்துப் பணிதொகு

இவர் வங்காள மொழியில் 30 நூல்களும், சமற்கிருதத்தில் 17 நூல்களும், ஆங்கிலத்தில் 5 நூல்களும் என மொத்தம் 52 நூல்களை எழுதியிருக்கிறார். “விதவா விவாஹ்”, “பிரந்தி விலாஸ்”, “அக்யான் மஞ்சரி”, “சிதார் பான்பாஸ்”, “பீட்டல் பஞ்ச்வின் சாடி”, “வியாக்ரன் கௌமுதி”, “ஹிஸ்டரி ஆஃப் பெங்கால்”, “ஜீவன் சரித்”, “போதோதயா” என்கிற நூல்கள் இவர் எழுதியவற்றுள் மிகவும் சிறப்பு பெற்றவை.

சிறப்புகள்தொகு

  • 1864 ஆம் ஆண்டில் ராயல் ஏசியாடிக் சொசைட்டியின் சிறப்பு உறுப்பினராக ஆனார்.
  • 1880 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசியார் இவருக்கு சி. ஐ. ஈ எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தார்.

மறைவுதொகு

இவர் மேற்கு வங்காள மாநிலம், கல்கத்தா நகரில் 29-07-1891 ஆம் நாளில் மரணமடைந்தார்.