அகாரிய மொழி
அகாரிய மொழி என்பது வடக்கு சத்தீஸ்கர் மற்றும் கிழக்கு மத்தியப் பிரதேசத்தில் உள்ள அகாரிய மக்களால் பேசப்படும் ஒரு மொழியாகும். பொதுவாக இந்த அகாரிய மொழி போலித்தன்மை கொண்டது என கருதப்படுகிறது. இம்மொழி முண்டா மொழியின் ஒரு கிளைப்பிரிவாக கருதப்பட்டு வருகிறது. ஐஎஸ்ஓ குறியீட்டுடன் எத்னொலோக்கினால் இம்மொழி பதிவு செய்யப்பட்டிருந்தாலும், உலகின் அதிகம் அறியப்படாத மொழிகளின் புத்தகத் தரவுத்தளமான குளோட்டோலாக் இந்த மொழியை 'போலியானது' என்று அறிவித்தது. [3] மேலும் இம்மொழியின் இருப்பை பழங்குடி மரபுகளின் புகழ்பெற்ற அறிஞர் வெரியர் எல்வின் என்று அழைக்கப்படும் ஹேரி வெரியர் ஹோல்மன் எல்வின் மற்றும் மொழியியலாளர்கள் பெலிக்ஸ் ராவ் மற்றும் பால் சிட்வெல் ஆகியோரால் வெளிப்படையாக மறுத்துள்ளனர். அசுரி மொழியை பேசும் முண்டா பழங்குடி மக்களின் பேச்சு வழக்கு மொழியாக அகாரிய மொழி இருக்கலாம் எனவும் அகாரியா' பழங்குடியினரை வெவ்வேறு பழங்குடியினரை பேச்சுவழக்குகளுடன் இணைக்கும் இணைப்பு மொழியாகவும் இது இருக்கக்கூடும் என சந்தேகத்தின் காரணமாகவே அப்படி மறுத்துள்ளனர். மேலும், சமீப கால மொழியியல் வரலாற்றில் மேல் கங்கை சமவெளியில் பேசப்படும் முண்டா மொழிகள் எதுவுமே சான்றளிக்கப்படவில்லை. [4]
அகாரிய | |
---|---|
நாடு(கள்) | இந்தியா |
இனம் | அகாரிய மக்கள் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 72,000 (2007)[1] |
ஆசுத்ரோ-ஆசிய மொழிகள்
| |
தேவநாகரி | |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | agi |
மொழிக் குறிப்பு | agar1251[2] |
மேற்கோள்கள்
தொகு- ↑ அகாரிய at Ethnologue (18th ed., 2015)
- ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Agariya". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
- ↑ . https://glottolog.org/resource/languoid/id/agar1251.
- ↑ Rau, Felix; Sidwell, Paul (2019-09-12). "The Munda Maritime Hypothesis" (in en). Journal of the Southeast Asian Linguistics Society 12 (2): 35–57. பன்னாட்டுத் தர தொடர் எண்:1836-6821. http://evols.library.manoa.hawaii.edu/handle/10524/52454.