அங்கோர் (Angkor) (கெமர் பேரரசின்: អង្គរ, "தலைநகரம்)[1][2] என்பது கம்போடியாவில் கெமர் பேரரசு நீடித்திருந்த பகுதியைக் குறிக்கிறது. தோராயமாக ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பதினைந்தாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் இப்பேரரசு செழித்து இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மிகப்பெரிய நகரமாக விளங்கிய இந்நகரத்தில் 1010 முதல்1220 வரையிலான ஆண்டுகளில் வாழ்ந்த உலக மக்கள் தொகையில் 0.1% மக்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்றும் கருதப்படுகிறது.

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
அங்கோர்
Angkor
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
அங்கோர் வாட்ட்டில் அமைந்துள்ள முக்கியக் கட்டிடம்

வகைகலாச்சாரம்
ஒப்பளவுi, ii, iii, iv
உசாத்துணை668
UNESCO regionஆசியா-பசிபிக்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1992 (16th தொடர்)
ஆபத்தான நிலை1992–2004
அங்கோர் தோம்
அங்கோர் தோம் கோயில்

அங்கோர் என்ற சொல், "புனித நகரம்"[3]:350[4] என்ற பொருள் கொண்டுள்ள ”நகரா” என்ற சமசுகிருதச் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். கி.பி 1802 இல் அங்கோரியக் காலம் தொடங்கியுள்ளது. அப்பொழுது கெமர் இந்துமத மன்னன் இரண்டாம் செயவர்மன் தானே உலகளாவிய மன்னன் என்றும் மன்னர்களுக்கெல்லாம் தானே கடவுள் என்றும் அறிவித்து 14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 1351 ஆம் ஆண்டு அயூத்தியா இராச்சியம் தலையெடுக்கும் வரை ஆட்சி புரிந்துள்ளார். கெமர் கிளர்ச்சி மூண்டதைத் தொடர்ந்து அங்கோரை அயூத்தியா பேரரசு வசப்படுத்தியது. இதனால் மக்கள் லாங்வெக் நகருக்கு தெற்கே இடம்பெயர்ந்தனர்.

பெரிய ஏரியான தோனல் சாப்பிற்கு வடக்கிலும், குலென் குன்றுகளுக்குத் தெற்கிலும் தற்கால சீயெம் ரீப் மாகாணத்தின் சீயெம் ரீப் நகருக்கு (13°24′வ, 103°51′கி),அருகிலும் உள்ள காடுகள் மற்றும் விளைநிலங்களுக்கு இடையில் அங்கோர் நகரத்தின் இடிபாடுகள் கண்டறியப்பட்டன. அங்கோர் பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான கோவில்கள் , ஒழுங்கற்ற சல்லிகள் முதல் செங்கல் செதில்கள் வரையான பல்வேறு அளவுகளில் அற்புதமான அங்கோர் வாட் வரை பரந்து விரிந்து காணப்பட்டன. அங்கோர் உள்ள பல கோவில்கள் மீட்கப்பட்டன, மற்றும் அவை கெமெர் கட்டிடக் கலைக்குச் சான்றாக மிக முக்கியமான தளமாகவும் உள்ளது. யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியக் களம் என்று பாதுகாக்கப்படும் அங்கோர் வாட் மற்றும் அங்கோர் தோம் சின்னங்கள் உள்ளிட்ட பரந்த பரப்பை ஆண்டுதோறும் 2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுகின்றனர். சுற்றுலா பயணிகள் மத்தியில் இத்தளம் மிகவும் பிரபல்யம் அடைந்திருப்பதாலேயே இத்தளத்தைப் பாதுகாப்பதில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன.

உலகின் மிகப்பெரிய வரலாற்றுக்கு முந்தைய தொழில்துறை நகரமாக அங்கோர் சிறந்து விளங்கியிருக்கிறது. குறைந்தது 1,000 சதுர கிலோமீட்டர் (390 சதுர மைல்) பரப்பளவுக்கு விரிந்து, விரிவான உள்கட்டமைப்புத் திட்ட அமைப்புகள் மற்றும் நன்கு அறியப்பட்ட பல கோவில்கள் கொண்ட கூட்டுநகரமாக அங்கோர் இருந்திருக்கிறது. 2007 ஆம் ஆண்டில், சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழுவொன்று செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் பிற நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி ஆய்வு செய்தபின்னரே இம்முடிவை அறிவித்தது[5]. அங்கோர் நகரை ஒரு நீரியல் நகரம் எனலாம். ஏனெனில், இந்நகரம் முழுவதற்கும் ஒரு சிக்கலான நீர் மேலாண்மை வலையமைப்பின் மூலமாக தண்ணீரானது முறையாக நிலைப்படுத்தப்பட்டு, சேமிக்கப்பட்டு பின்னர் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது[6]. பெருகிவரும் மக்கள் தொகை [5] மற்றும் எதிர்பாராத பருவமழை காலம் ஆகியனவற்றை ஈடுசெய்யவும் பாசன வசதிக்காகவும் இத்திட்டமிட்ட வலையமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. குவாத்தமாலா, திக்கலினில் இருந்த மாயன் நகரம் அங்கோர் நகருக்கு போட்டி நகரமாக விளங்கியது. 100 முதல்150 சதுர கிலோமீட்டர் (39 மற்றும் 58 சதுர மைல்) பரப்பளவு கொண்ட நகரமாக இந்நகரம் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது[7]. அங்கோர் நகரின் மொத்தப் பரப்பளவு மற்றும் மக்கள் தொகை குறித்த ஆராய்ச்சிகளும் விவாதங்களும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தாலும், சமீபத்தில் கண்டறியப்பட்ட புதிய விவசாயத் திட்டங்கள் அங்கோர் நகரில் ஒரு மில்லியன் மக்கள் வாழ்ந்திருக்கலான் என்று தெரிவிக்கின்றன[8]

வரலாற்றுப் பார்வை

தொகு
 
அங்கோர் பகுதியின் வரைபடம்
 
சூரிய உதயத்தின் போது அங்கோர் வாட்

கெமர் பேரரசின் இருப்பிடம்

தொகு
 
அங்கோர் தோம் நகரத்தின் நுழைவாயில்

கி.பி 800 இல் அங்கோரியக் காலம் தொடங்கியிருக்கிறது. இரண்டாம் செயவர்மன் என்ற கெமர் அரசன் சாவகத்திலிருந்து கம்போடியாவிற்கு சுதந்திரத்தை அறிவித்தார். தொன்லே சாப் ஏரிக்கு வட கோடியில் இருந்த அரிகராலயாவில் தலைநகரை அமைத்தார். இராணுவத்தின் திட்டம், பிரச்சாரங்கள், கூட்டணிகள், திருமணங்கள் மற்றும் நில மானியங்கள் போன்ற திட்டங்கள் மூலம், அவர் நாட்டினை ஒருங்கிணைத்தார். வடக்கில் சீனாவும், தெற்கில் ஒரு கடலும், கிழக்கில் சம்பாவும் (இப்போது மத்திய வியட்நாம்), "ஏலக்காய் மற்றும் மாம்பழம் நிலம்" எனவொரு கல்வெட்டு மூலம் அடையாளம் அறிந்த நிலப்பகுதியை மேற்கிலும் இந்நாட்டின் எல்லைகளாக இருந்தன. 802 ஆம் ஆண்டில் மன்னர் செயவர்மன், தன்னைத்தானே உலகளாவிய மன்னர் என்று அறிவித்துக்கொண்டார். இவருடைய ஆதரவாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் விளைவாக இவர் சிவன் வழிபாட்டுடன் நாட்டம் கொண்டார். பின்னாளில் கடவுள் – இராசா என்றும் அழைக்கப் பட்டார்.[9] செயவர்மனுக்கு முன்பு அரசியல்ரீதியாக கம்போடியா சுயாட்சிமுறை கொண்ட பல சிற்றரசுகளைக் கொண்டிருந்தது. இவை அனைத்தையும் பூனான் மற்றும் சென்லா என்ற கூட்டுப் பெயர்களாக இணைத்து சீனாவால் அறியப்பட்டிருந்தது.[10]

படக்காட்சிகள்

தொகு
பிமீனகாஸ்
பிரசாத் சோர் பிராட்
கெலாங்
யானைகளின் மாடி

மேற்கோள்கள்

தொகு
  1. Headly, Robert K.; Chhor, Kylin; Lim, Lam Kheng; Kheang, Lim Hak; Chun, Chen. 1977. Cambodian-English Dictionary. Bureau of Special Research in Modern Languages. The Catholic University of America Press. Washington, D.C. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8132-0509-3
  2. Chuon Nath Khmer Dictionary (1966, Buddhist Institute, Phnom Penh)
  3. Higham, C., 2014, Early Mainland Southeast Asia, Bangkok: River Books Co., Ltd., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9786167339443
  4. Higham, The Civilization of Angkor, p.4.
  5. 5.0 5.1 Evans et al., A comprehensive archaeological map of the world's largest pre-industrial settlement complex at Angkor, Cambodia பரணிடப்பட்டது 2017-04-22 at the வந்தவழி இயந்திரம், Proceedings of the National Academy of Sciences of the USA, August 23, 2007.
  6. Evans, D., Pottier, C., Fletcher, R., Hensley, S., Tapley, I., Milne, A., & Barbetti, M. (2007). A comprehensive archaeological map of the world's largest pre-industrial settlement complex at Angkor, Cambodia. Proceedings of the National Academy of Sciences, 104(36), 14277-14282.
  7. "Map reveals ancient urban sprawl," BBC News, 14 August 2007.
  8. Metropolis: Angkor, the world's first mega-city பரணிடப்பட்டது 2008-09-23 at the வந்தவழி இயந்திரம், The Independent, August 15, 2007
  9. Higham, The Civilization of Angkor, pp.53 ff.; Chandler, A History of Cambodia, p.34 ff.
  10. Chandler, A History of Cambodia, p.26; Coedès, Pour mieux comprendre Angkor, p.4.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கோர்&oldid=3875038" இலிருந்து மீள்விக்கப்பட்டது