பாபூன்
பாபூன் ( Baphuon ) என்பது கம்போடியாவில் அங்கோர் என்ற இடத்திலுள்ள ஒரு கோவிலாகும். இது பேயோனின் வடமேற்கில் உள்ள அங்கோர் தோமில் அமைந்துள்ளது. "தங்க மலை" (சுவர்ணாத்ரி) என்றும் அழைக்கப்படும் பாபூன் ஒரு செயற்கை மலையில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் முதலில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. பின்னர் தேரவாத பௌத்தக் கோவிலாக மாற்றப்பட்டது. கோயிலின் காலம் பற்றி அறிய இயலவில்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி இது இரண்டாம் உதயாதித்தவர்மன் ஆட்சியின் போது கட்டப்படவில்லை என்பதை சமீபத்திய ஆய்வுகள் காட்டுகிறது. 2015 ஆம் ஆண்டில், ஒரு பிரெஞ்சு குழு கட்டமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்ட நான்கு இரும்புத் துண்டுகளை நேரடியாக தேதியிட்டது. கட்டுமானம் நினைத்ததை விட மிகவும் முன்னதாகவே இருந்தது. மேலும் இப்போது முதலாம் சூரியவர்மனுடன் ( கி.பி.1010-1050) தொடர்புடைய பெரிய கோவிலாகக் கருதப்படுகிறது.[1]
பாபூன் | |
---|---|
தகவல்கள் | |
நாடு | கம்போடியா |
ஆள்கூறுகள் | 13°26′37″N 103°51′21″E / 13.44361°N 103.85583°E |
வரலாறு
தொகு11 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கட்டப்பட்ட இது மூன்று அடுக்கு கோயில் மலை[2]:103 இந்துக் கடவுளான சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சூரியவர்மனின் அரச கோயிலாக கட்டப்பட்டது. கிடைக்கும் ஒவ்வொரு மேற்பரப்பையும் உள்ளடக்கிய சிக்கலான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய பாபூன் பாணியின் தொன்மை வடிவமாக உள்ளது.[3] இக்கோயில் அரச அரண்மனையின் தெற்குப் பகுதிக்கு அருகில் உள்ளது. மேலும், அதன் அடிவாரத்தில் 120 மீட்டர் கிழக்கு-மேற்கு மற்றும் 100 மீட்டர் வடக்கு-தெற்கே அளவிடும் மற்றும் அதன் கோபுரம் இல்லாமல் 34 மீட்டர் உயரம் உள்ளது. இது தோராயமாக 50 மீட்டர் உயரமாக இருக்கும். அதன் தோற்றம் தெமுர் கானின் 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தூதர் சோவ் தகுவான் வருகையின் (1296 முதல் 1297 ) போது அவரை கவர்ந்தது. அவர் 'வெண்கல கோபுரம்... உண்மையிலேயே வியக்க வைக்கும் காட்சி, அதன் அடிவாரத்தில் பத்துக்கும் மேற்பட்ட அறைகள் உள்ளாது' என்று கூறினார்.
125 x 425 மீ சுவரால் சூழப்பட்ட மத்திய கோபுரம் அநேகமாக முலம் பூசிய மரமாக இருக்கலாம். ஆனால் அழிந்து போன நிலையில் காணப்படுகிறது.[4]:376
20 ஆம் நூற்றாண்டில், கோயிலின் பெரும்பகுதி இடிந்து விழுந்து விட்டது. 1970 இல் உள்நாட்டுப் போர் வெடித்த பிறகு கோயிலை அகற்றுவதற்கான ஒரு பெரிய அளவிலான திட்டம் கைவிடப்பட்டது. தொழிலாளர்கள் மற்றும் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கோயிலைச் சுற்றியுள்ள 10 ஹெக்டேர் பரப்பளவில் கவனமாக பெயரிடப்பட்ட மற்றும் எண்ணிடப்பட்ட 300,000 தொகுதிகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எவ்வாறாயினும், பத்தாண்டு கால மோதல்கள் மற்றும் அதைத் தொடர்ந்து வந்த கெமர் ரூச் ஆட்சியின் போது துண்டுகளை அடையாளம் காணும் திட்டங்கள் கைவ்டப்பட்டன.
கோவிலை மீட்டெடுப்பதற்கான இரண்டாவது திட்டம் 1996 இல் பிரான்சியக் கீழைத்திசை ஆய்வுக் கல்விக்கூடத்திலிருந்து வந்த கட்டிடக் கலைஞர் பாஸ்கல் ராயர் வழிகாட்டுதலின் கீழ் தொடங்கப்பட்டது.[5] "உலகின் மிகப்பெரிய முப்பரிமான புதிர்" என்று அறிய அணிக்கு மேலும் 16 ஆண்டுகள் ஆனது.[6] ஏப்ரல் 2011 இல், 51 ஆண்டுகால பணிகளுக்குப் பிறகு, பணி நிறைவடைந்து. கோவில் முறையாகத் திறக்கப்பட்டது. ஜூலை 3, 2011 அன்று நடந்த திறப்பு விழாவின் போது புனரமைக்கப்பட்ட கோவிலை முதன்முதலில் பார்வையிட்டவர்களில் கம்போடியாவின் மன்னர் நொரடோம் சிகாமொனி மற்றும் பிரான்ஸ் பிரதமர் பிரான்சுவா ஃபிலோன் ஆகியோர் அடங்குவர்.[7]
புகைப்படங்கள்
தொகு-
வாள் மற்றும் கேடயத்தை சுமந்து செல்லும் சிப்பாயின் சிற்பம்.
இதனையும் பார்க்கவும்
தொகுசான்றுகள்
தொகு- ↑ Leroy, Stéphanie; Hendrickson, Mitch; Delqué-Kolic, Emmanuelle; Vega, Enrique; Dillmann, Philippe (2015). "First Direct Dating for the Construction and Modification of the Baphuon Temple Mountain in Angkor, Cambodia". PLOS ONE 10 (11): e0141052. doi:10.1371/journal.pone.0141052. பப்மெட்:26535895.
- ↑ Coedès, George (1968). Walter F. Vella (ed.). The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8248-0368-1.
- ↑ "History of Khmer Art". Tevoda Galleria. Archived from the original on 2019-05-19. பார்க்கப்பட்ட நாள் 2018-01-09.
- ↑ Higham, C., 2014, Early Mainland Southeast Asia, Bangkok: River Books Co., Ltd., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9786167339443
- ↑ "Mort de Pascal Royère, responsable d'un grand chantier de restauration d'Angkor". Le Monde. 9 February 2014 இம் மூலத்தில் இருந்து 9 January 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180109235253/http://abonnes.lemonde.fr/disparitions/article/2014/02/09/mort-de-pascal-royere-responsable-d-un-grand-chantier-de-restauration-d-angkor_4363020_3382.html.
- ↑ Falby, Patrick (29 October 2009). "Cambodian temple puzzle nearly complete". news.com.au. http://www.news.com.au/travel/world-travel/cambodian-temple-puzzle-nearly-solved/news-story/e05514cc4999606e52c3fe0311a92331?from=public_rss.
- ↑ Suy Se (30 June 2011). "Solved puzzle reveals fabled Cambodian temple". Sin Chew Daily. http://www.mysinchew.com/node/59664.