நொரடோம் சிகாமொனி

நொரடோம் சிகாமொனி (Norodom Sihamoni, பிறப்பு: 14 மே, 1953) கம்போடியாவின் அரசர். இவர் முன்னர் யுனெஸ்கோவுக்கான கம்போடியாவின் தூதராகப் பணியாற்றியவர். 2004 ஆம் ஆண்டில் இவரது தந்தை நொரடோம் சிகானுக் முடி துறந்ததை அடுத்து மன்னராக முடிசூடினார்.

நொரடோம் சிகாமொனி
Norodom Sihamoni
នរោត្តម សីហមុនី
கம்போடிய அரசர்
ஆட்சிக்காலம்14 அக்டோபர் 2004 – இன்று
முடிசூட்டுதல்29 அக்டோபர் 2004
முன்னையவர்நொரடோம் சிகானுக்
பிறப்பு14 மே 1953 (1953-05-14) (அகவை 71)
நொம் பென், கம்போடியா
மரபுநொரடோம் அரண்மனை
தந்தைநொரடோம் சிகானுக்
தாய்நொரடோம் மொனினீத்
மதம்தேரவாத பௌத்தம்

வாழ்க்கைச் சுருக்கம்

தொகு

சிகாமொனி நொரடோம் சிகானுக்கின் ஏழாவது மனைவியான நொரடோம் மொனினீத் என்பவருக்குப் பிறந்தவர். தாயார் கம்போடியக் குடியுரிமையுள்ள ஒரு இத்தாலியரும் கெமர் வம்சத்தைச் சேர்ந்தவரும் ஆவார். சிகாமொனியின் இளைய சகோதரர் சாம்தேக் நொரடோம் நரீந்திரபொங் (பிறப்பு: 1954) 2003 ஆம் ஆண்டில் இறந்து விட்டார். தந்தையின் ஏனைய மனைவிகளிடம் இருந்து சிகாமொனிக்கு 14 சகோதரர்களும், சகோதரிகளும் உள்ளனர்.

சிகாமொனி தனது வாழ்நாளில் பெரும் பகுதியை கம்போடியாவுக்கு வெளியே கழித்துள்ளார். சிறுவயதிலேயே 1962 ஆம் ஆண்டில் செக்கோசுலவாக்கியாவுக்கு அனுப்பப்பட்டார். பிராக் நகரில் பள்ளிப் படிப்பை முடித்து, அங்குள்ள கலைக் கல்லூரியில் 1975 ஆம் ஆண்டு வரையில் நடனம் படித்தார். பிரெஞ்சு, செக் மொழி, ஆங்கிலம், மற்றும் உருசிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். 1975 இல் வட கொரியா சென்று அங்கு திரைப்படத் தயாரிப்பில் பயின்று, 1977 இல் நாடு திரும்பினார். அப்போது அங்கு ஆட்சி புரிந்த கெமர் ரூச் ஆட்சியாளர் அவரையும் அவரது அரச குடும்பத்தினரையும் வீட்டுக் காவலில் வைத்தனர். 1979 ஆம் ஆண்டு வியட்நாமிய ஊடுருவலை அடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். 1981 இல் பிரான்சு நாட்டுக்ச் சென்று அங்கு பாலே நடனப் பயிற்சியாளராகப் பணியாற்றினார். 20 ஆண்டுகள் பிரான்சில் வசித்தார்.

1993 இல் கம்போடியாவுக்கான யுனெஸ்கோ தூதுவராக நியமிக்கப்பட்டார். 2004 ஆம் ஆண்டில் அவரது தந்தை மன்னர் சிகானுக் திடீரென முடி துறந்ததை அடுத்து ஒரு வாரத்தின் பின்னர் 2004 அக்டோபர் 29 இல் மன்னராக முடி சூடினார். இவரது பதவி பிரதமர் ஹுன் சென்னினால் உறுதிப்படுத்தப்பட்டது[1].

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நொரடோம்_சிகாமொனி&oldid=2290014" இலிருந்து மீள்விக்கப்பட்டது