முதலாம் யசோவர்மன்
முதலாம் யசோவர்மன் (Yasovarman I ) பொ.ச. 889-910 வரை ஆட்சி செய்த கெமர் அரசனாவான். இவன் " தொழுநோய் மன்னன் " என்று அழைக்கப்பட்டான். [1]
முதலாம் யசோவர்மன் | |
---|---|
கம்போடியாவின் கெமர் அரசன் | |
ஆட்சிக்காலம் | பொ.ச.889 – 910 |
முன்னையவர் | முதலாம் இந்திரவர்மன் |
பின்னையவர் | முதலாம் ஹர்ஷவர்மன் |
இறப்பு | 910 |
துணைவர் | நான்காம் செயவர்மனின் சகோதரி |
குழந்தைகளின் பெயர்கள் | இரண்டாம் ஈசானவர்மன் முதலாம் ஹர்ஷவர்மன் |
மரபு | வர்மன் வம்சம் |
தந்தை | இரண்டாம் இந்திரவர்மன் |
தாய் | இந்திராதேவி |
மதம் | இந்து சமயம் |
ஆரம்ப ஆண்டுகளில்
தொகுயசோவர்மன் முதலாம் இந்திரவர்மன் என்பவனுக்கும் அவனது மனைவி இந்திராதேவிக்கும் மகனாகவான்.[2] [3]யாசோவர்மன் ஒரு மல்யுத்த வீரன் என்று கூறப்படுகிறது. யானைகளுடன் மல்யுத்தம் செய்யும் திறன் கொண்டவன் என்றும், வெறும் கைகளால் புலிகளைக் கொல்லும் திறன் கொண்டவன் என்றும் கல்வெட்டுகள் கூறுகின்றன.
தேவராச வழிபாட்டு ஆசாரியத்துவத்தின் ஒரு பகுதியான புரோகிதர் பிரம்ம வாமசிவன் இவனது ஆசிரியர் ஆவார். வாமசிவனின் குரு, சிவசோமன், இந்து தத்துவஞானி ஆதி சங்கரருடன் தொடர்புடையவராவார்.[4] :111
இந்திரவர்மனின் மரணத்திற்குப் பிறகு, அவனது இரண்டு மகன்களான யசோவர்மனுக்கும், இவனது சகோதரனுக்கும் இடையில் வாரிசுப் போர் நடந்தது. தொன்லே சாப் என்ற இடத்தில் நிலத்திலும் நீரிலும் போர் நடந்ததாக நம்பப்படுகிறது. இறுதியில் யசோவர்மன் வெற்றி பெற்றான்.
எல். பி. பிரிக்ஸ் என்ற வரலாற்றாச்சிரியரின் கூற்றுப்படி, முதலாம் யசோவர்மன் அரியணைக்கான உரிமைகோரலைப் புறக்கணித்து, தனது தந்தை, முதலாம் இந்திரவர்மன் அல்லது அங்கோர் வம்சத்தை நிறுவிய இரண்டாம் செயவர்மன் மூலம், ஒரு விரிவான குடும்ப மரத்தை உருவாக்கி, தனது தாய்வழி மூலம் பண்டைய இராச்சியங்களான பனன் இராச்சியம் , சென்லா ஆகியவற்றுடன் தன்னை இணைத்துக் கொண்டான்." [5]
யசோவர்மன் சம்புபுரம், அனிதிதபுரம், வியாதபுரம் ( பனன் இராச்சியம் ) ஆகிய ஆளும் குலங்களின் வழித்தோன்றல் என்று கூறப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள 12 வெவ்வேறு கல்வெட்டுகளில் இது கண்டுபிடிக்கப்பட்டது. [6]
யசோவர்மன் சம்பா இராச்சியத்தின் மீது படையெடுத்து தோல்வியுற்றதாக, பன்டே சமரில் கிடைத்துள்ள கல்வெட்டுகளின் மூலம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.[7] :54
முதலாம் யசோவர்மனின் சாதனைகள்
தொகுஇவனது ஆட்சியின் முதலாண்டில், இவன் தனது இராச்சியம் முழுவதும் சுமார் 100 மடங்களை எழுப்பினான். [4] :111–112ஒவ்வொரு ஆசிரமமும் துறவிகளுக்காகவும், மன்னன் தனது பயணங்களின் போது ஓய்வெடுக்கும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டது. பொ.ச. 893இல் இவன் தனது தந்தையால் தொடங்கப்பட்ட இந்திரததகா பரே என்ற நீர்த்தேக்கத்தைக் கட்டத் தொடங்கினான். இந்த ஏரியின் நடுவில் ( இப்போது வறண்டு கிடக்கிறது ), இவன் கோயில் ஒன்றையும் கட்டினான்.[8]
அரிகராலயாவிலிருந்து தனது தலைநகரை யசோதரபுரத்துக்கு மாற்றியது இவனது சாதனைகளில் ஒன்றாகும். இது இவனுக்குப் பின் 600 ஆண்டுகள் அவ்விடத்திலேயே இருந்தது. [4] :103இந்த புதிய தலைநகரில் தான் அங்கோர் வாட் உட்பட அனைத்து பெரிய மற்றும் புகழ்பெற்ற மத நினைவுச்சின்னங்களும் கட்டப்பட்டன. இந்த நடவடிக்கைக்கு பல காரணங்கள் இருந்தன. பழைய தலைநகரம் முந்தைய மன்னர்களால் கட்டப்பட்ட கோவில்களால் நிரம்பி வழிந்தது. எனவே, முடிவு சமயம் சார்ந்தது: ஒரு புதிய மன்னனின் புகழ் செழிக்க, அவன் தனது சொந்த கோவிலைக் கட்ட வேண்டும். அவன் இறந்தவுடன் அது அவனது கல்லறையாக மாறிவிடும். இரண்டாவதாக, புதிய தலைநகரம் சீயெம் ரீப் ஆறுக்கு அருகில் இருந்தது. மேலும், குலன் மலைகளுக்கும் தொன்லே சாப் இடையேயும் அமைந்திருந்தது. தலைநகரை நீர் ஆதாரங்களுக்கு நெருக்கமாக நகர்த்துவதன் மூலம், இரண்டு ஆறுகளாலும் வழங்கப்படும் பல நன்மைகளை மன்னன் பெறலாம்.
யசோதரபுரமானது பக்கெங் என்று அழைக்கப்படும் தாழ்வான மலையின் மீது கட்டப்பட்டு, அரிகராலயாவுடன் ஒரு தரைப்பாதையால் இணைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், யசோவர்மன் தனது புதிய தலைநகரில் ஒரு பெரிய நீர்த்தேக்கத்தைத் தோண்டத் தொடங்கினான். யசோதரதடாகம் அல்லது கிழக்கு பரே என்ற இந்த புதிய செயற்கை ஏரி, 7.5 க்கு 1.8 கி.மீ நீளமுள்ள வடிகாலாக இருந்தது. [9] :64–65
லோல்யி, புனோம் பக்கெங், கிழக்கு பரே [10] ஆகிய இடங்களில் இவனது ஆட்சியில் கட்டப்பட்ட நினைவுச்சின்னங்கள் உள்ளன. [11] :360–362 இவை அனைத்தும் பின்னர் கட்டப்பட்ட கம்போடியாவின் தேசிய கருவூலமான அங்கோர் வாட் அருகில் அமைந்துள்ளன. யசோவர்மனின் ஆட்சியின் போது கெமர் பேரரசின் தலைநகர் அங்கோர் பகுதியில் உருவாக்கப்பட்ட மூன்று மலை உச்சி கோயில்களில் புனோம் பாக்கங்கும் ஒன்றாகும், மற்ற இரண்டு புனோம் குரோம், புனோம் போக்.[4] :113
மரணத்திற்குப் பிந்தைய பெயர்
தொகுயசோவர்மன் பொ.ச. 910இல் இறந்து பரமசிவலோகம் என்ற பெயரைப் பெற்றார். இவனுக்கு தொழு நோய் இருந்தது. அதனால் வரலாற்றில் "தொழு நோய் மன்னன்" என அழைக்கப்பட்டான்.[12]
குடும்பம்
தொகுநான்காம் செயவர்மனின் சகோதரி யசோவர்மனின் மனைவியாவார். இவர்களுக்கு இரண்டம் ஈசானவர்மன், முதலாம் ஹர்ஷவர்மன் என இரண்டு மகன்கள் பிறந்தனர். [13]
சான்றுகள்
தொகு- ↑ Vietnam, Cambodia, Laos & the Greater Mekong by Nick Ray, Tim Bewer, Andrew Burke, Thomas Huhti, Siradeth Seng. Page 212. Footscray; Oakland; London: Lonely Planet Publications, 2007.
- ↑ Some Aspects of Asian History and Culture by Upendra Thakur. Page 37.
- ↑ Saveros, Pou (2002). Nouvelles inscriptions du Cambodge (in French). Vol. Tome II et III. Paris: பிரான்சியக் கீழைத்திசை ஆய்வுக் கல்விக்கூடம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-85539-617-4.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ 4.0 4.1 4.2 4.3 Coedès, George (1968). Walter F. Vella (ed.). The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8248-0368-1.
- ↑ Briggs, The Ancient Khmer Empire; page 105.
- ↑ Briggs, L. P. (1951). The Ancient Khmer Empire. American Philosophical Society, 41(1), page 61.
- ↑ Maspero, G., 2002, The Champa Kingdom, Bangkok: White Lotus Co., Ltd., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789747534993
- ↑ Jessup, p.77; Freeman and Jacques, pp.202 ff.
- ↑ Higham, C., 2001, The Civilization of Angkor, London: Weidenfeld & Nicolson, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781842125847
- ↑ Goloubev, Victor. Nouvelles récherches autour de Phnom Bakhen. Bulletin de l'EFEO (Paris), 34 (1934): 576-600.
- ↑ Higham, C., 2014, Early Mainland Southeast Asia, Bangkok: River Books Co., Ltd., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9786167339443
- ↑ The Rough Guide to Cambodia by Beverley Palmer and Rough Guides.
- ↑ Briggs, Lawrence Palmer. The Ancient Khmer Empire. Transactions of the American Philosophical Society. 1951.
குறிப்புகள்
தொகு- Coedes, George. The Indianized States of Southeast Asia. East-West Center Press 1968.
- Higham, Charles. The Civilization of Angkor. University of California Press 2001.
- Briggs, Lawrence Palmer. The Ancient Khmer Empire. Transactions of the American Philosophical Society 1951.