யசோதரபுரம்
யசோதரபுராம் (Yaśodharapura) [1] அங்கோர் என்றும் அழைக்கப்படும் இது 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கெமர் மன்னன் முதலாம் யசோவர்மனால் நிறுவப்பட்டது. புனோம் பாக்கொங் கோவிலை மையமாகக் கொண்ட கெமர் பேரரசின் இரண்டாவது தலைநகராக (அமரேந்திரபுரத்திற்குப் பிறகு) இருந்தது.:103[2]:64
யசோதரபுரம் យសោធរបុរៈ | |
---|---|
யசோதரபுரத்தின் செயற்கைக்கோள் படம் மற்றும் வரைபடம் | |
மாற்றுப் பெயர் | அங்கோர் |
இருப்பிடம் | சியாம் ரீப் மாகாணம், கம்போடியா |
பகுதி | தென்கிழக்காசியா |
ஆயத்தொலைகள் | 13°25′26″N 103°51′22″E / 13.423854°N 103.856092°E |
வரலாறு | |
கட்டுநர் | முதலாம் யசோவர்மன் |
கட்டப்பட்டது | 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி |
பயனற்றுப்போனது | கி. பி.1431 |
காலம் | இடைக்காலம் |
பகுதிக் குறிப்புகள் | |
நிலை | இடிபாடுகளுடன் காணப்படுகிறது. |
பொது அனுமதி | அனுமதி உண்டு |
யசோதரபுர கல்வெட்டுகளில் புனோம் கண்டல் (மத்திய மலை) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. யசோதராபுரம் நிறுவுவதற்கு சிலகாலம் முன்பு புனோம் பகெங் கட்டப்பட்டது. ஏனெனில் இந்த மலை இந்து தெய்வங்களை வழிபடும் புனித தலங்களில் ஒன்றாக யசோவர்மன் நம்பினார். யசோதரபுரமானது முந்தைய தலைநகரான அரிகராலயாவுடன் ஒரு தரைப்பாலத்தால் இணைக்கப்பட்டது. நகர்ப்புறம் யசோதரதாடகாவை உள்ளடக்கி இருந்தது. [3]:64–65
இப்பகுதியில் கட்டப்பட்ட அடுத்தடுத்த தலைநகரங்கள் யசோதரபுரம் என்றே அழைக்கப்பட்டன. ஏழாம் செயவர்மன் (கி.பி. 1181-1218) மூலம் பேயோன் கோயிலை மையமாகக் கொண்ட அங்கோர் தோம் நகரம் அதில் ஒன்றாகும்.
1352-ல், மன்னர் உத்தோங் (அயூத்தியா இராச்சியத்தின் முதலாம் ராமதிபோடி என்றும் அழைக்கப்படுகிறார்) அதை முற்றுகையிட்டு நகரத்தைக் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றார். தனது இளவரசர்களில் ஒருவரை அரியணையில் அமர்த்தினார். 1357-ல் கெமர் அதை மீண்டும் கைப்பற்றினர்.[4]:103:236 அங்கோர் தோம் 15ஆம் நூற்றாண்டில் அயூத்தியாவின் அரசர் இரண்டாம் பொரோம்மரசத்திரத்தால் தாக்கப்பட்டு கைவிடப்பட்டது.[5]
சான்றுகள்
தொகு- ↑ Headley, Robert K.; Chim, Rath; Soeum, Ok. 1997. Cambodian-English Dictionary. Dunwoody Press. University of Michigan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780931745782. http://sealang.net/khmer/dictionary.htm
- ↑ Higham, C., 2001, The Civilization of Angkor, London: Weidenfeld & Nicolson, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781842125847
- ↑ Higham, C., 2001, The Civilization of Angkor, London: Weidenfeld & Nicolson, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781842125847ISBN 9781842125847
- ↑ Coedès, George (1968). Walter F. Vella (ed.). The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8248-0368-1.
- ↑ Donald Richie (23 September 2007). "Yasodharapura, revived in literature". The Asian Bookshelf. The Japan Times. பார்க்கப்பட்ட நாள் 4 May 2013.