தரைப்பாலம்
தரைப்பாலம் (Causeway) நீர் நிலை அல்லது சதுப்புநிலத்தை இணைக்கும் வகையில் உயர்த்திக் கட்டப்பட்ட சாலை அல்லது தொடருந்துச் சாலை என்பதைக் குறிக்கும். தரைப்பாலங்கள் பொதுவாக உயர்த்தப்பட்ட மணல் திட்டின் மேல் அமைக்கப்பட்டு இருக்கும்.
மணல் திட்டின் மீதும்; சிறிய வளைவுகள் மீது அமைக்கப்பட்டு இருக்கும் சாலை ஏதண்டம் என அழைக்கப் படுகிறது. ஏதண்டத்தின் வளைவுகள் பெரிதாகும் போது அது பாலம் எனப்படுகிறது.