காசிநாத் (நடிகர்)
காசிநாத் (Kashinath (actor)) ஒரு நடிகர். இவர் கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களை தயாரித்து, இயக்கியும் உள்ளார். இந்திய சமூகத்தால் ஏற்கப்படாத கருத்துகளை தன் திரைப்படங்களில் வலியுறுத்துவார். நடிகர் உபேந்திரா,[1] இசையமைப்பாளர் வி. மனோகர்,[2] மற்றும் இயக்குனர் சுனில் குமார் தேசாய் போன்ற புதிய திறமையாளர்களை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவராக அறியப்படுகிறார். மேலும் பல தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இணைந்து கன்னடத் திரையுலகில் வெற்றி பெற்றுள்ளார்.[3][4]
காசிநாத் Kashinath | |
---|---|
பிறப்பு | குந்தாபுரா (கருநாடகம்), மைசூர் மாநிலம் (தற்பொழுது கருநாடகம், இந்தியா) | 8 மே 1951
இறப்பு | 18 சனவரி 2018 பெங்களூர், கருநாடகம், இந்தியா | (அகவை 66)
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகர், திரைப்படத் தயாரிப்பு |
செயற்பாட்டுக் காலம் | 1976–2018 |
வாழ்க்கைத் துணை | சந்திரபிரபா |
பிள்ளைகள் | 2 |
இரட்டை அர்த்த வசனங்களையும் இவரது படங்களில் காண முடியும். ஏறத்தாழ நாற்பது திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது திரைப்படங்களில் சில பிற மொழிகளில் மாற்றப்பட்டு வெளியாகியுள்ளன. முதன்முதலில் அமர மதுர பிரேம என்ற திரைப்படத்தில் நடித்தார். கடைசியான மிஸ்டர்,420 என்ற திரைப்படத்தில் நடித்தார். சில திரைப்படங்களைத் தயாரித்தும், நடனமாடியும், பாடியும் உள்ளார்.
திரைப்படங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Uppi's hardly uppity The Hindu (11 November 2005)
- ↑ Vittal Manohar Makes it Big in Sandalwood Daijiworld.com (2 April 2012)
- ↑ "ACTOR COM DIRECTOR KASHINATH'S LIFE JOURNEY IN HEJJE". youtube.com. Archived from the original on 2013-10-22. பார்க்கப்பட்ட நாள் 28 September 2013.
- ↑ "Kashinath (Celeb)". in.com. Archived from the original on 2 October 2013. பார்க்கப்பட்ட நாள் 28 September 2013.