தி. ச. சின்னத்துரை

தி. ச. சின்னத்துரை (Thirugnana Sampanthar Sinnathuray, செப்டம்பர் 22, 1930 - சனவரி 16, 2016), சிங்கப்பூர் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆவார். இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் சட்டம் பயின்றார். சிங்கப்பூர் திரும்பிய பின், வழக்குரைஞராக பயிற்சி பெற்றார். சிங்கப்பூர் பிரதமர் இவரை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமித்தார்.[1]. இவருடன் சேர்த்தே அன்றுவரை ஆறு நீதிபதிகளே பதவியில் இருந்தனர். பின்னர் நிலக் கையகப்படுத்தலுக்கான உயர் ஆணையராக நியமிக்கப்பட்டார். சிங்கப்பூர் இராணுவ நீதிமன்றத்தின் அதிபராகவும் இருந்துள்ளார். பொதுத் தொண்டு ஆர்வலர் விருதினை சிங்கப்பூர் பிரதமர் இவருக்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்

தொகு
  1. 'Appointment of High Court Judge', Singapore government Press Release (Document No. 1210-1978-09-21; dated 21 September 1978)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._ச._சின்னத்துரை&oldid=3861000" இலிருந்து மீள்விக்கப்பட்டது