தி. மா. ஜம்புலிங்கம் முதலியார்

ராவ் பகதூர் தி. மா. ஜம்புலிங்கம் முதலியார்(T. M. Jambulingam Mudaliar, 22 சூன், 1890 - 28 அக்டோபர், 1970) என்பவர் ஓர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும்,[1] அரசியல்வாதியும், மக்கள் சேவகரும் ஆவார். இவர் நெய்வேலியில் நிலக்கரி இருப்பதை கண்டறிந்து, நெய்வேலி நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் அமைக்க காரணமாகவும், நிறுவனம் அமைய 620 ஏக்கர் விளைநிலத்தை தானமாக கொடுத்தவரும் ஆவர்.[2][3]

பிறப்பு

தொகு

அன்றைக்கு தென்னார்காடு மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த கடலூர் வட்டத்தில் பண்ருட்டி அருகில் திருக்கண்டலேஸ்வரம் என்ற கிராமத்தில் செங்குந்த கைக்கோளர் மரபில் வசதிவாய்ந்த பெருநிலக்கிழார் தி.வீ. மாசிலாமணி முதலியார் - சொர்ணத்தம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவர் குடும்பம் பெரும் அளவில் ஜவுளி மற்றும் விவசாயம் செய்து வந்தனர். இவர் கடலூர் மற்றும் மெட்ராசில் கல்வி பயின்றார். இவர் 1911 ஆம் ஆண்டில் விஜயலட்சுமி அம்மாளை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆறு பெண் குழந்தைகள்.[4][5][6]

வகித்த பதவிகள்

தொகு

தென்னார்க்காடு மாவட்டத்தில் தாலுகா போர்டு மெம்பர் ஆக இருந்துள்ளார் ஒன்பது ஆண்டுகள் பணியாற்றினார்.

கடலூர் தாலுக்கா போர்டு தலைவராக 6 ஆண்டுகளும், ஜில்லா போர்டு மெம்பர் ஆக மூன்று ஆண்டுகளும் பணியாற்றினார்.

ஜில்லா போர்டு தலைவராக மூன்று ஆண்டுகளும் பதவி வகித்தார்.

கடலூர் நகராட்சியில் நகர மன்ற உறுப்பினராக மூன்று ஆண்டுகளும், நகர்மன்றத் துணைத் தலைவராக 6 ஆண்டுகளும், நகர மன்ற தலைவராக மூன்று  ஆண்டுகளும் பணியாற்றினார்.

நெல்லிக்குப்பத்தில் பேரூராட்சி தலைவராக 20 ஆண்டுகள் பணிபுரிந்தார்.[7][8][9][10][11]

நெல்லிகுப்பம் கூட்டுறவு மேற்பார்வை ஒன்றிய தலைவராக பணியாற்றினார். இந்திய சுதந்திர போராட்டத்திற்கு அவர் பலமுறை நிதி உதவி வழங்கியுள்ளார்.

இவர் தென் ஆற்காடு மாவட்டம் தொழுநோய் கவுன்சில் மற்றும் கடலூர் நகராட்சியின் துணைத் தலைவராக பணியாற்றினார். இவர் தென் ஆற்காடு மாவட்ட கூட்டுறவு மத்திய வங்கி செயற்குழுவின் இயக்குநராகவும் உறுப்பினராகவும் பணியாற்றினார். கடலூர் நகராட்சி கவுன்சிலராக பணியாற்றினார்.

இந்தியர்களிடையே உயர் கல்வியை வளர்ப்பதற்காக மெட்ராஸ் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக பணியாற்றினார்.[12] இவர் தென் ஆற்காடு மாவட்ட இடைநிலைக் கல்வி வாரியம் மற்றும் கடலூரின் மருத்துவமனைகளின் ஆலோசனைக் குழு உறுப்பினராக பணியாற்றினார்.

ஜம்பூலிங்க முதலியார் மற்றும் அவரது சகோதரர் பழனிசாமி முதலியார் ஆகியோர் பிரித்தானிய காலத்தில் கடலூர் படலீஸ்வரர் கோயில் மற்றும் திருகாண்டேஸ்வரம் நடனாபடேஸ்வரர் கோயில் ஆகியவற்றில் பல லட்சம் மதிப்புள்ள பணிகளை நன்கொடையாக வழங்கினர். பல கோயில்களின் அறங்காவலராகவும், தென் ஆற்காடு மாவட்ட இந்து கோவில் மேம்பாட்டுக் குழுவின் தலைவராகவும், ஜில்லா வாரிய தலைவராகவும் கவும் இருந்துள்ளார்.[13]

இவர் கடலூர் சிறைச்சாலைக்கு அதிகாரப்பூர்வமற்ற பார்வையாளராகச் சென்று அங்குள்ள கைதிகளின் மறுவாழ்வுக்கு பல்வேறு வழிகளில் உதவினார்.[14]

செய்த மக்கள் பணிகள்

தொகு

நெல்லிக்குப்பம் பேரூராட்சி தலைவராக இவர் பணியாற்றிய காலத்தில் நெல்லிகுப்பம் சர்க்கரை ஆலை முழுமூச்சாக கொண்டு வந்து பலருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தியது.

புவனகிரி வெள்ளாற்றின் குறுக்கே பாலம் கட்ட தனது சொந்த செலவில் முழு முனைப்புடன் ஈடுபட்டு அரசிடம் அனுமதி பெற்று பொதுமக்களுக்காக பாலத்தை கட்டி கொடுத்தார்.

இவர் மெட்ராஸ் மாகாண சாலை வழி வாரியத்தின் உறுப்பினராகவும், தென்னிந்திய ரயில்வே ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.

சேலம் கடலூர் தொடர்வண்டி பாதை அமைக்க இவர் அரசிடம் பல வழியில் அணுகியபோது அரசு குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு தினமும் 50 நபர்கள் கடலூர் சேலம் பேருந்து போக்குவரத்தில் இருந்தால்தான் சேலம் கடலூர் தொடர்வண்டிப் பாதை அமைக்க அனுமதி கொடுக்க முடியும் என்று கூறி விட்டது. சேலம் கடலூர் தொடர்வண்டி பாதை உருவானால் இரு மாவட்டங்களும் வளர்ச்சியடையும் என்று கருதிய ஜம்புலிங்க முதலியார் தனது தோட்டத்தில் வேலை செய்யும் 50 நபர்களை சொந்த செலவில் ஒரு வருடத்திற்கு தினமும் சேலம் கடலூர் பாதையில் பேருந்துகளில் பயணிக்க வைத்து சேலம் கடலூர் தொடர்வண்டி பாதை திட்டத்தை பெற்றுத்தந்தார்.[15]

குற்றப் பரம்பரைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட மதுரை பிரமலைக் கள்ளர் மக்களை தென்னார்க்காடு மாவட்டத்தில் அசிஸ் நகர் செட்டிலெமென்ட் என்று உருவாக்கி ஆங்கிலேய அரசு இந்த மக்களை கொடுமைப்படுத்தியது. குற்றப்பரம்பரைச் சட்டத்தில் கைதாகி அசிஸ் நகர் செட்டிலெமென்ட்யில் அடைக்கப்பட்டு இருந்த மக்களுக்கு அடிப்படை வசதி, உணவு கூட இல்லாமல் இருந்த நிலையில் ஜம்புலிங்கம் முதலியார் அங்கு சென்று அவர்களுக்குத் தேவையான அடிப்படை உணவு மற்றும் வசதிகளை செய்து தந்தார். [16][17]

தென் ஆற்காடு மாவட்ட படையாட்சி வன்னியர் சமூகத்தின் மீதி போடப்பட்ட குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து கடுமையாக போராடி இந்த சட்டத்தை திரும்பப் பெற வைத்தார் ஜம்புலிங்க முதலியார்.[18][19]

நெய்வேலி நிலக்கரி சுரங்கம்

தொகு

ஜம்புலிங்க முதலியார் தனக்குச் சொந்தமான நெய்வேலி கிராமத்து விவசாய நிலத்தில் தண்ணீருக்காகக் புதிய கிணறு தோண்டும்போது, கறுப்பு நிற திரவப்பொருள் தண்ணீரோடு கலந்து வந்தது. அதை அன்றைய ஆங்கிலேய அரசின் புவியியல்துறையின் கவனத்துக்கு அனுப்பிவைத்தார் ஆனால் அரசு கண்டுகொள்ளவில்லை. பின்பு இவரே தன் சொந்த செலவில் ஆய்வுகளை மேற்கொண்டு நிலக்கரி இருப்பதை கண்டுப்பிடித்தான்.[20]

இந்திய நாடு சுதந்திரம் அடைந்த நிலையில், அப்போது முதலமைச்சராக இருந்த இராஜாஜியிடம் அணுகி இந்த நிலக்கரி இருப்பதை பற்றி விளக்கினார். இருப்பினும் அரசு கண்டுக்கொள்ளவில்லை. பின்பு காமராஜர் முதலமைச்சர் ஆனா பின்பு அவர்களை அணுகி அவரிடம் விளக்கிக் கூறியுள்ளார் பின்பு காமராஜர் மூலமாக அன்று பாரத பிரதமராக இருந்த நேருவை சந்தித்து அவரிடம் விளக்கத்தை தந்துள்ளார்.[21][22][23][24] நிறுவனம் தொடங்க அன்று 150 கோடி ரூபாயை தேவைப்பட்டதால் மத்திய அரசு இதற்க்கு உதவி செய்ய முடியாது என்று கூறிவிட்டது. இதனை அறிந்த ஜம்புலிங்கம் முதலியார் நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவனம் உருவாக்த் தேவைப்படும் 620 ஏக்கர் நிலத்தை காமராஜர் தலைமையிலான மாநில அரசுக்கு தானமாக கொடுக்கிறேன் என்று அறிவித்தார்.[25]

நிறுவனத்துக்கு தேவைப்படும் நிலங்கள் ஜம்புலிங்கம் முதலியார் தானமாக வழங்கியதால் காமராஜர் தலைமையிலான மாநில அரசு, மத்திய அரசின் உதவி இல்லாமல் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் அமைத்தது. நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (NLC) இந்த நிறுவனத்திற்கு தானமாக ஜம்புலிங்கம் முதலியார் கொடுத்த 620 ஏக்கர் நிலத்தின் இன்றைய மதிப்பு 2,500 கோடி ரூபாய் ஆகும்.[26]

இன்றைக்கு தென்னிந்தியாவிற்கு தேவைப்படும் மின்சாரம் 90 சதவீதம் அனல்மின் நிலையத்தில் இருந்துதான் உருவாக்கப்படுகிறது. இந்த  தென்னிந்திய அனல்மின் நிலையங்களுக்கு தேவைப்படும் பழுப்பு நிலக்கரி அனைத்தும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இருந்து அனுப்பப்படுகிறது.[27]

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மற்றும் அனல் மின் நிலையம் 50,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது. இந்நிறுவனம் பல லட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறது.[27]

நினைவுகள்

தொகு

இவருக்கு நெய்வேலி குடியிருப்பில் முழு உருவ சிலை உள்ளது. இவர் பெயரில் நெய்வேலி குடியிருப்பில் ஓர் சாலை உள்ளது.[28]

கிராமப்புற மக்களிடையே கல்வியறிவு பரவுவதில் ஜம்புலிங்கம் முதலியார் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவர் பல முக்கியமான பதவிகளை வகித்தார். இவரது சேவைகளை பாராட்டுவதற்காக பிரித்தானிய அரசு ஜூன் 1934 இல் ஜம்பிலிங்கம் முதலியாருக்கு ராவ் பகதூர் பட்டம் வழங்கியது.[29]

இவர் தானமாகக் கொடுத்த இடத்தில் கட்டப்பட்ட நெல்லிக்குப்பம் பூங்காவுக்கு ஜம்புலிங்கம் பூங்கா என்று பெயர் உள்ளது. இவரின் பொருள் உதவியால் கட்டப்பட்ட "நெல்லிக்குப்பம் நடுவீரப்பட்டு" சாலை ஜம்புலிங்கம் சாலை என்று அழைக்கப்படுகிறது.[30]

2017 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் 2000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அரசுக்கு தானமாக கொடுத்த ஜம்புலிங்க முதலியார்க்கு அரசு சார்பில் உரிய மரியாதை செலுத்தப்படவில்லை என்று விவாதம் நடைபெற்றது.[31]

மேற்கோள்கள்

தொகு
 1. மின்நூல் 2016, பக்கம் 3
 2. "Tribute to a Trail Blazer" (PDF). Brown Coal — House Journal of Neyveli Lignite Corporation Limited (in English). NLC India Limited. January–April 2013. p. 4. Archived from the original (PDF) on 2020-09-29. பார்க்கப்பட்ட நாள் 2020-05-06.{{cite magazine}}: CS1 maint: date format (link) CS1 maint: unrecognized language (link)
 3. சொல்லாத சொல்
 4. [1]
 5. "Tribute to a Trail Blazer" (PDF). Brown Coal — House Journal of Neyveli Lignite Corporation Limited (in English). NLC India Limited. January–April 2013. p. 4. Archived from the original (PDF) on 2020-09-29. பார்க்கப்பட்ட நாள் 2020-05-06.{{cite magazine}}: CS1 maint: date format (link) CS1 maint: unrecognized language (link)
 6. The Who's who in Madras: ... A Pictorial Who's who of Distinguished Personages, Princes, Zemindars and Noblemen in the Madras Presidency. Pearl Press. 21 May 1940 – via Google Books.
 7. "Rich tributes paid to Jambulinga Mudaliar". Resource Digest. 17 March 2013.
 8. "History of Neyveli". Nayveliweb.com.
 9. "History". Neyveli City. Archived from the original on 2018-03-03. பார்க்கப்பட்ட நாள் 2020-05-15.
 10. "NLC Recruitment 2015-2016 for 100 Graduate Executive Trainee Posts". 7 December 2015. Archived from the original on 28 செப்டம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 2 May 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 11. "Tribute to a Trail Blazer" (PDF). Brown Coal — House Journal of Neyveli Lignite Corporation Limited (in English). NLC India Limited. January–April 2013. p. 4. Archived from the original (PDF) on 2020-09-29. பார்க்கப்பட்ட நாள் 2020-05-06.{{cite magazine}}: CS1 maint: date format (link) CS1 maint: unrecognized language (link)
 12. The Who's who in Madras: ... A Pictorial Who's who of Distinguished Personages, Princes, Zemindars and Noblemen in the Madras Presidency. Pearl Press. 21 May 1940. p. 70 – via Google Books.
 13. அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி. வரலாற்றில் திருக்கண்டீஸ்வரம்.
 14. The Who's who in Madras: ... A Pictorial Who's who of Distinguished Personages, Princes, Zemindars and Noblemen in the Madras Presidency. Pearl Press. 21 May 1940 – via Google Books.
 15. The Who's who in Madras A Pictorial Who's who of Distinguished Personages, Princes, Zemindars and Noblemen in the Madras Presidency. Pearl Press. 21 May 1940 – via Google Books.
 16. The Who's who in Madras A Pictorial Who's who of Distinguished Personages, Princes, Zemindars and Noblemen in the Madras Presidency (in ஆங்கிலம்). Pearl Press,1938. p. 59.
 17. (in ஆங்கிலம்) [http://www.shanlaxjournals.in/pdf/ASH/V3N1/Ash_V3_N1_008.pdf THE CRIMINAL TRIBES (DENOTIFIED) SETTLEMENTS IN MADRAS PRESIDENCY]. Dr. N. Neela Head. p. 63. பன்னாட்டுத் தர தொடர் எண்:2321–788X. http://www.shanlaxjournals.in/pdf/ASH/V3N1/Ash_V3_N1_008.pdf. 
 18. "குற்றப் பரம்பரை வரலாறும் இடஒதுக்கீடு சிக்கலும்" (in தமிழ்). https://keetru.com/index.php/2020-09-25-12-16-02/venkayam-nov-2020/41321-2020-12-23-12-52-33. 
 19. குடிஅரசு 1935 பகுதி 2. p. 430.
 20. [ https://books.google.co.in/books?id=bK45AQAAIAAJ&q=%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&dq=%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&hl=en&sa=X&ved=2ahUKEwjS9J3f9s_sAhXVb30KHUSLDEMQ6AEwAHoECAIQAg நெய்வேலி]
 21. "History of Neyveli, Origin of Neyveli, Liginite in Neyveli". www.neyvelionline.in. பார்க்கப்பட்ட நாள் 2 May 2020.
 22. https://www.myheritage.com/names/jambulingam_mudaliar
 23. "Chairman's Message to Employees". Archived from the original on 2020-09-29. பார்க்கப்பட்ட நாள் 2020-05-15.
 24. "கடலூர்என்எல்சிக்கு 600 ஏக்கர் கொடுத்த ஜம்புலிங்க முதலியாருக்கு வெண்கலச் சிலை". தினமணி. 26 February 2013. https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2013/feb/26/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-600-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-638337.html. 
 25. [ https://www.naamtamilar.org/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/ ஜம்புலிங்கனார் பிறந்தநாள்]
 26. Kalaimakaḷ
 27. 27.0 27.1 "என்.எல்.சி லிமிடெட்". Archived from the original on 2020-10-29. பார்க்கப்பட்ட நாள் 2020-10-25.
 28. "Tribute to a Trail Blazer" (PDF). Brown Coal — House Journal of Neyveli Lignite Corporation Limited (in English). NLC India Limited. January–April 2013. p. 4. Archived from the original (PDF) on 2020-09-29. பார்க்கப்பட்ட நாள் 2020-05-06.{{cite magazine}}: CS1 maint: date format (link) CS1 maint: unrecognized language (link)
 29. The Who's who in Madras A Pictorial Who's who of Distinguished Personages, Princes, Zemindars and Noblemen in the Madras Presidency (in ஆங்கிலம்). Pearl Press, 1938. p. 59.
 30. "நெல்லிக்குப்பம் குடிநீர் பிரச்சனை தீர்ந்தது" (in தமிழ்). https://m.dinamalar.com/detail.php?id=2341046. 
 31. 2017 இந்திய நாடாளுமன்றம் (PDF) (in ஆங்கிலம்). இந்திய நாடாளுமன்றம். p. 447.