அக்டோபர் 28
நாள்
(28 அக்டோபர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | அக்டோபர் 2025 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
MMXXV |
அக்டோபர் 28 (October 28) கிரிகோரியன் ஆண்டின் 301 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 302 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 64 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 97 – உரோமைப் பேரரசர் நேர்வா தளபதி மார்க்கசு திராயானை தனது முடிக்குரிய வாரிசாக அறிவிக்க பிரடோரியன் காவலர்களால் கட்டாயப்படுத்தப்பட்டார்.
- 306 – மாக்செண்டியசு உரோமைப் பேரரசராக முடிசூடினார்.
- 312 – மில்வியன் பாலத்தில் இடம்பெற்ற போரில் முதலாம் கான்ஸ்டன்டைன் உரோமைப் பேரரசர் மாக்செண்டியசைத் தோற்கடித்து மேற்குலகின் தனித்த உரோமைப் பேரரசரானார்.
- 456 – போர்த்துகலின் பிராகா நகரை விசிகோத்து இனத்தவர்கள் சூறையாடி, நகரின் கிறித்தவக் கோவில்களை இடித்துத் தரைமட்டமாக்கினர்.
- 1420 – பெய்ஜிங் அதிகாரபூர்வமாக மிங் அரசின் தலைநகரானது.
- 1449 – முதலாம் கிறித்தியான் டென்மார்க்கின் அரசராக முடிசூடினார்.
- 1492 – கொலம்பசு புதிய உலகத்திற்கான தனது முதலாவது பயணத்தின்போது கியூபாவைக் கண்டுபிடித்தார்.
- 1636 – மாசச்சூசெட்சு குடியேற்றத்தில் முதலாவது கல்லூரியை நிறுவுவதற்கான வாக்கெடுப்பை அடுத்து அமெரிக்காவின் ஆர்வர்டு பல்கலைக்கழகம் என இன்று அழைக்கப்படும் கல்லூரி நிறுவப்பட்டது.
- 1707 – சப்பானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் ஒன்சூ, சிகொக்கு, கியூசூ ஆகிய இடங்களில் 5,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
- 1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பாஸ்டனில் இருந்து மக்கள் வெளியேறுவதைத் தடுக்கும் பிரித்தானியச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
- 1834 – மேற்கு ஆஸ்திரேலியாவின் பிஞ்சாரா என்ற இடத்தில் பிரித்தானியக் குடியேறிகளினால் 30 நூங்கார் பழங்குடியினர் கொல்லப்பட்டனர்.
- 1886 – நியூயார்க் துறைமுகத்தில் விடுதலைச் சிலையை அரசுத்தலைவர் குரோவர் கிளீவ்லாண்ட் திறந்து வைத்தார்.
- 1891 – சப்பானில் நோபி சமவெளியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 7,000 இற்கும் அதிகமானோர் உயிரிழ்ந்தனர்.
- 1904 – பனாமாவும் உருகுவையும் தூதரக உறவை ஏற்படுத்திக் கொண்டன.
- 1918 – முதலாம் உலகப் போர்: முன்னூறு ஆண்டுகள் ஆக்கிரமிப்பை அடுத்து, ஆத்திரியா-அங்கேரியில் இருந்து செக்கோசிலோவாக்கியா விடுதலையை அறிவித்தது.
- 1918 – புதிய போலந்து அரசு மேற்கு கலீசியாவில் உருவானதை அடுத்து, போலந்து-உக்ரைனியப் போர் ஆரம்பமானது.
- 1922 – பெனிட்டோ முசோலினி தலைமையில் இத்தாலிய பாசிஸ்டுகள் இத்தாலிய அரசைக் கைப்பற்றினர்.
- 1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியின் காலக்கெடுவை கிரேக்கம் ஏற்க மறுத்ததை அடுத்து, கிரேக்க-இத்தாலியப் போர் ஆரம்பமானது. இத்தாலி கிரேக்கத்தை அல்பேனியா ஊடாக ஊடுருவியது.
- 1942 – கனடா ஊடான அலாஸ்கா வரையான அலாஸ்கா நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது.
- 1949 – ஏர் பிரான்சு வானூர்தி போர்த்துகலில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 48 பேரும் உயிரிழந்தனர்.
- 1956 – எல்விஸ் பிரெஸ்லி தேசியத் தொலைக்காட்சியில் போலியோ தடுப்பூசியை ஏற்றிக் கொண்டார்.
- 1958 – 23-ம் யோவான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1962 – கியூபா ஏவுகணை நெருக்கடி முடிவுக்கு வந்தது. சோவியத் பிரதமர் நிக்கிட்டா குருசேவ் சோவியத் ஏவுகணைகளை கியூபாவில் இருந்து அகற்ற உத்தரவிட்டார்.
- 1965 – இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் "கிறித்தவமல்லாத சமயங்களுடனான திருச்சபையின் தொடர்புகள் தொடர்பான அறிவிப்பை" திருத்தந்தை ஆறாம் பவுல் அறிவித்தார். இதன்படி, இயேசு கிறித்துவின் இறப்புக்கு யூதர்கள் காரணம் என்ற 760-ஆண்டுக்கால அறிவிப்பு மீளப்பெறப்பட்டது.
- 1990 – ஜோர்ஜியாவில் வரலாற்றில் முதற்தடவையாக பல-கட்சி நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்றது.
- 1995 – அசர்பைஜான் தலைநகர் பக்கூவில் சுரங்கத் தொடருந்துப் பாதையில் ஏற்பட்ட தீவிபத்தில் 229 பேர் உயிரிழந்தனர், 265 பேர் காயமடைந்தனர்.
- 2006 – தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையே 8 மாதங்களாகத் தடைப்பட்டிருந்த அமைதிப் பேச்சுக்கள் ஜெனீவாவில் மீண்டும் ஆரம்பமாயின.
- 2006 – 1930களில் சோவியத் போல்செவிக் கம்யூனிஸ்டுகளால் உக்ரேனின் பிக்கிவீனா காட்டில் கொலை செய்யப்பட்ட 817 உக்ரேனியர்களினது இறுதிக் கிரியைகள் அவர்கள் கொலை செய்யப்பட்ட இடத்தில் இடம்பெற்றன.
- 2009 – பாக்கித்தான், பெசாவர் நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 117 பேர் கொல்லப்பட்டனர்.
- 2014 – நாசாவின் சிக்னசு ஆளில்லா விண்கலம் வர்ஜீனியாவில் இருந்து புறப்பட்டு சில நிமிட நேரத்தில் வெடித்துச் சிதறியது.
பிறப்புகள்
- 1466 – எராஸ்மஸ், டச்சு மெய்யியலாளர் (இ. 1536)
- 1845 – சிக்முந்த் வுரூபிளேவ்ஸ்கி, போலந்து இயற்பியலாளர் (இ. 1888)
- 1867 – சகோதரி நிவேதிதை, அயர்லாந்து-இந்திய சமூக சேவையாளர், நூலாசிரியர் (இ. 1911)
- 1892 – மணிலால் காந்தி, மகாத்மா காந்தியின் 2வது மகன், சமூக செயற்பாட்டாளர் (இ. 1956)
- 1897 – எடித் எட், அமெரிக்க ஆடை வடிவமைப்பாளர் (இ. 1981)
- 1914 – யோனாசு சால்க், அமெரிக்க உயிரியலாளர், மருத்துவர் (இ. 1995)
- 1933 – கரிஞ்சா, பிரேசில் கால்பந்து வீரர் (இ. 1983)
- 1955 – பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனர்
- 1955 – இந்திரா நூயி, இந்திய-அமெரிக்கத் தொழிலதிபர்
- 1956 – மகுமூத் அகமதிநெச்சாத், ஈரானின் 6வது அரசுத்தலைவர்
- 1958 – அசோக் சவான், மகாராட்டிராவின் 16வது முதல்வர்
- 1967 – ஜூலியா ராபர்ட்ஸ், அமெரிக்க நடிகை
- 1978 – ஹரின் பெர்னான்டோ, இலங்கை அரசியல்வாதி
- 1979 – ஜவேத் கரீம், யூடியூப்பை அமைத்தவர்களில் ஒருவர்
- 1984 – பின் விட்டுரோக், அமெரிக்க நடிகர்
- 1988 – வாணி போஜன், தமிழ் நடிகை
இறப்புகள்
- 1627 – ஜஹாங்கீர், முகலாயப் பேரரசர் (பி. 1569)
- 1704 – ஜான் லாக், ஆங்கிலேய மெய்யியலாளர், மருத்துவர் (பி. 1632)
- 1900 – மாக்ஸ் முல்லர், செருமானிய மொழியியலாளர் (பி. 1823)
- 1978 – ருக்மணிதேவி, இலங்கை நடிகை, பாடகி (பி. 1923)
- 1981 – பி.ஸ்ரீ, தமிழக எழுத்தாளர், உரையாசிரியர், பதிப்பாசிரியர் (பி. 1886)
- 1982 – இராபெர்ட் தெ’ஸ்கோர்ட் அட்கின்சன், பிரித்தானிய வானியலாளர், இயற்பியலாளர் (பி. 1898)
- 1983 – போல் சுவிங்சு, பெல்ஜிய வானியற்பியலாளர் (பி. 1906)
- 1997 – மைசூர் வீ. துரைசுவாமி ஐயங்கார், வீணை இசைக்கலைஞர் (பி. 1920)
- 2013 – ராஜேந்திர யாதவ், இந்திய எழுத்தாளர் (பி. 1929)
- 2014 – மைக்கேல் சாட்டா, சாம்பியாவின் 5வது அரசுத்தலைவர் (பி. 1937)
- 2021 – ந. நன்மாறன், தமிழக மார்க்சிய அரசியல்வாதி, பேச்சாளர்
சிறப்பு நாள்
- செக்கோ-சிலோவாக் நாடு உருவான நாள் (1918 செக் குடியரசு, சிலவாக்கியா)
வெளி இணைப்புகள்
- "இன்றைய நாளில்". பிபிசி.
- "அக்டோபர் 28 வரலாற்று நிகழ்வுகள்". OnThisDay.com.
- நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்