கிரேக்க-இத்தாலியப் போர்

கிரேக்க-இத்தாலியப் போர் (Greco-Italian War) இரண்டாம் உலகப் போரின் போது பாசிச இத்தாலிக்கும் கிரீசுக்கும் இடையே நடந்த ஒரு போர். இது 1940இன் போர், கிரீசுக்கானப் போர் என்றும் அழைக்கப்படுகிறது. பால்கன் போர்த்தொடரின் ஒரு பகுதியான இதில் இத்தாலி கிரீசைத் தாக்கிக் கைப்பற்ற முயன்று தோற்றது.

கிரேக்க-இத்தாலியப் போர்
இரண்டாம் உலகப் போரின் பால்கன் போர்த்தொடரின் பகுதி

கிரேக்க பீரங்கிக் குழு
நாள் 28 அக்டோபர் 1940 – 23 ஏப்ரல் 1941
இடம் தெற்கு பால்கன் குடா
கீழ்நிலை உத்திய்ளவில் கிரேக்க வெற்றி
மேல்நிலை உத்தியளவில் தேக்க நிலை
ஜெர்மனியின் தலையீடு
பிரிவினர்
 இத்தாலி  கிரேக்க நாடு
தளபதிகள், தலைவர்கள்
இத்தாலி செபாஸ்தியானோ பிராஸ்கா(9 நவம்பர் வரை)
இத்தாலி உபால்டோ சொட்டு (டிசம்பர் மத்தியப் பகுதி வரை)
இத்தாலி ஊகோ காவலேரோ
கிரேக்க நாடு அலெக்சாந்தர் பாபாகோஸ்
பலம்
565,000 பேர்[1]
463 வானூர்திகள்[2]
163 டாங்குகள்
< 300,000 பேர்
77 வானூர்திகள்[2]
இழப்புகள்
13,755[3][4][5] மாண்டவர்
50,874[3][4] காயமடைந்தவர்
25,067 காணாமல் போனவர் (21,153[4] போர்க்கைதிகள்)
64 வானூர்திகள்[2]

மொத்தம்: 154,172[3][4]

13,325 மாண்டவர்
42,485 காயமடைந்தவர்
1,237 காணாமல் போனவர்
1,531[6] போர்க்கைதிகள்
52 வானூர்திகள்[2]

மொத்தம்: ~83,578

பாசிச சர்வாதிகாரி முசோலினியின் தலைமையிலான இத்தாலி அச்சு நாடுகள் கூட்டணியில் நாசி ஜெர்மனிக்கு அடுத்தபடியான நிலையை பெற்றிருந்தது. இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தில் மேற்கு ஐரோப்பாவில் ஜெர்மானியப் படைகளுக்குக் கிடைத்த தொடர் வெற்றியினைக் கண்ட முசோலினி அதே போல இத்தாலிக்கும் நிகழ வேண்டுமென விரும்பினார். பிற நாடுகளைக் கைப்பற்றி இத்தாலியின் பரப்பளவை அதிகரிக்க ஆசைப்பட்டார். 1939ல் அல்பேனியா நாட்டினை இத்தாலிய படைகள் ஆக்கிரமித்தன. அடுத்து கிரேக்க நாட்டினைக் கைப்பற்ற முடிவு செய்தார். கிரேக்கர்கள் இத்தாலியின் சரணடைவு ஆணையை நிராகரித்து விட்டதால் அக்டோபர் 28, 1940ல் இத்தாலியப் படைகள் கிரீசு மீது படையெடுத்தன. கிரீசைக் கைப்பற்றி அங்கொரு கைப்பாவை அரசை நிறுவுவதும், கிரீசின் பல பகுதிகளை இத்தாலியுடன் இணைப்பதும் முசோலினியின் குறிக்கோள்.

அல்பேனிய நிலப்பகுதியிலிருந்து நிகழ்ந்த இப்படையெடுப்பை எதிர்கொள்ள கிரேக்கப்படைகள் தயாராக இருந்தன. ஒரு மாத காலத்துக்குள் இத்தாலியப் படையெடுப்பை முறியடித்து விட்டன. நவம்பர் 14ம் தேதி ஒரு பெரும் எதிர்த் தாக்குதலையும் தொடங்கின. அடுத்த சில மாதங்களுக்கு அல்பேனிய - கிரீசு எல்லையில் கடும் சண்டை நடந்தது. ஆனால் எத்தரப்புக்கும் தெளிவான வெற்றி கிட்டாமல் தேக்க நிலை உருவானது. கிரேக்கப் படைகளின் கவனம் அல்பேனிய எல்லையில் இருந்ததை பயன்படுத்திக் கொண்டு வடக்கு கிரீசில் இத்தாலியப் படைகள் மார்ச் 9, 1941ல் இன்னொரு தாக்குதலைத் தொடங்கினர். ஆனால் பத்து நாட்களுக்குள் கிரேக்கப் படைகள் அத்தாக்குதலைச் சமாளித்து முறியடித்து விட்டன. இத்தாலியால் தனியாக கிரீசைத் தோற்கடிக்க இயலாது என்பதை ஒப்புக்கொண்ட முசோலினி இட்லரின் உதவியை நாடினார். இட்லரின் ஆணைப்படி முசோலினிக்கு உதவ ஜெர்மானியப் படைகள் ஏப்ரல் 6ம் தேதி கிரீசு மீது படையெடுத்தன.

கள நிலவரம் தொகு

 
 
 
முதல் இத்தாலியத் தாக்குதல்
அக்டோபர் 28 – நவம்பர் 13, 1940.
கிரேக்க எதிர்த் தாக்குதல்
நவம்பர் 14, 1940 – மார்ச், 1941.
இரண்டாவது இத்தாலியத் தாக்குதல்
மார்ச் 9 – ஏப்ரல் 23, 1941.

குறிப்புகள் தொகு

  1. Richter (1998), 119, 144
  2. 2.0 2.1 2.2 2.3 Hellenic Air Force History accessed 25 March 2008
  3. 3.0 3.1 3.2 Mario Montanari, La campagna di Grecia, Rome 1980, page 805
  4. 4.0 4.1 4.2 4.3 Giorgio Rochat, Le guerre italiane 1935–1943. Dall'impero d'Etiopia alla disfatta, Einaudi, 2005, p. 279
  5. Mario Cervi, Storia della guerra di Grecia, BUR, 2005, page 267
  6. Rodogno (2006), pages 446

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரேக்க-இத்தாலியப்_போர்&oldid=3848983" இலிருந்து மீள்விக்கப்பட்டது