ஜாவெத் கரீம்

(ஜவேத் கரீம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜேவெத் கரீம் (Jawed Karim, பிறப்பு: அக்டோபர் 28, 1979) ஒரு அமெரிக்க மென்பொருள் பொறியாளரும், இணைய தொழில்முனைவோரும் ஆவார். யூடியூபின் இணை நிறுவனர்களில் ஒருவரான இவர், காணொளி ஒன்றை முதல் தடவையாக யூடியூபில் பதிவேற்றியவர் ஆவார். 2005 ஏப்ரல் 23 அன்று பதிவேற்றப்பட்ட தளத்தின் தொடக்கக் காணொளி, "Me at the zoo", 2024 ஆகத்து 14 வரை 330 மில்லியன் முறை பார்க்கப்பட்டது.[1][2] கரீம் பேபால் நிறுவனத்தில் பணிபுரிந்த காலத்தில், சக யூடியூப் இணை நிறுவனர்களான இசுட்டீவ் சென், சாட் ஹர்லி ஆகியோரைச் சந்தித்தார். யூடியூபின் நிகழ்நேர மோசடி எதிர்ப்பு அமைப்பு உட்பட அதன் முக்கிய கூறுகள் பலவற்றை இவர் வடிவமைத்தார்.

ஜாவெத் கரீம்
Jawed Karim
2008 இல் கரீம்
பிறப்புஅக்டோபர் 28, 1979 (1979-10-28) (அகவை 45)
மெர்சுபூர்க், பெசிர்க் கால், கிழக்கு செருமனி
படித்த கல்வி நிறுவனங்கள்இலினொய் பல்கலைக்கழகம் (அர்பானா சாம்பேன்) (இ.அ)
இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் (முதுகலை)
பணிமென்பொருட் பொறியியல்
அறியப்படுவது
  • யூடியூப் இணை-நிறுவனர்
  • முதலாவது காணொளியை யூடியூபில் பதிந்தவர்)
யூடியூப் தகவல்
ஒளிவழித்தடம்
செயலில் இருந்த ஆண்டுகள்
  • 2005–2007
  • 2010 (காணொளிகள்)
காணொளி வகை(கள்)கல்வி
சந்தாதாரர்கள்4.86 மில்.
மொத்தப் பார்வைகள்330 மில்.
100,000 சந்தாதாரர்கள் 2015
1,000,000 சந்தாதாரர்கள் 2020

ஆகத்து 14, 2024 அன்று தகவமைக்கப்பட்டது
வலைத்தளம்
www.jawed.com இதை விக்கித்தரவில் தொகுக்கவும்

மேற்கோள்கள்

தொகு
  1. Asmelash, Leah (April 23, 2020). "The first ever YouTube video was uploaded 15 years ago today. Here it is". CNN. Archived from the original on April 23, 2020. பார்க்கப்பட்ட நாள் March 16, 2023.
  2. Karim, Jawed (April 23, 2005). "Me at the zoo" (in ஆங்கிலம்). யூடியூப். Archived from the original on December 19, 2021. பார்க்கப்பட்ட நாள் September 1, 2021.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாவெத்_கரீம்&oldid=4128515" இலிருந்து மீள்விக்கப்பட்டது