முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஒன்சூ (Honshu, ஹொன்ஷூ, ஜப்பானிய மொழி: 本州, "பிரதான நாடு") சப்பான் நாட்டின் மிகப்பெரிய தீவு ஆகும். உலகில் பரப்பளவின் படி ஏழாவது மிகப்பெரிய தீவும் மக்கள் தொகையின் படி இரண்டாம் மிகப்பெரிய தீவும் ஆகும்.[1] 1990 கணக்கெடுப்பின் படி இத்தீவில் 98,352,000 மக்கள் வசிக்கின்றனர். கிட்டத்தட்ட 1,300 கிமீ நீள ஒன்சூ தீவின் நடுவில் ஜப்பானிய ஆல்ப்ஸ் மலைத்தொடர் அமைந்துள்ளது. இந்த மலைத்தொடரின் மிக உயரமான மலை ஃபூஜி மலை ஆகும். ஐந்து பகுதிகளில் பிரிந்த இத்தீவில் டோக்கியோ, ஹிரோஷிமா, ஒசாக்கா, கியோட்டோ முதலிய பல முக்கியமான நகரங்கள் அமைந்துள்ளன.[2]

本州
ஒன்சூ
Honshu
Japan honshu map small.png
ஒன்சூ தீவு, ஜப்பான்
புவியியல்
அமைவிடம்கிழக்கு ஆசியா
தீவுக்கூட்டம்ஜப்பானியத் தீவுக்கூட்டம்
பரப்பளவின்படி, தரவரிசை7வது
உயர்ந்த புள்ளிஃபூஜி மலை
நிர்வாகம்
ஜப்பான்
பகுதிகள்ஹிரோஷிமா, ஓக்கயாமா, ஷிமானெ, டொட்டோரி, யாமகூச்சி, ஹியூகோ, கியோட்டோ, மியே, நாரா, ஒசாக்கா, ஷிகா, வாக்கயாமா, சீபா, குன்மா, இபராக்கி, கனகாவா, சயிட்டாமா, டொச்சிகி, டோக்கியோ, அகிட்டா, ஆவொமோரி, ஃபுகுஷிமா, இவாட்டே, மியாகி, யமகாட்டா, அயிச்சி
பெரிய குடியிருப்புடோக்கியோ (மக். 12,570,000)
மக்கள்
மக்கள்தொகை98,352,000 (1990)
இனக்குழுக்கள்ஜப்பானியர்கள்

2017 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின் படி ஒன்சுவில் 104 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.[3] பெரும்பான்மையான மக்கள் கடலோரப் பகுதிகளிலும், சமவெளிகளில் வாழ்கின்றனர். மொத்த சனத்தொகையில் 30% வீதமானோர் தோக்கியோவின் கான்டே சமவெளியில் வாழ்கின்றனர்.[சான்று தேவை] இத்தீவில் கியோட்டா, நாரா, காமகுரா உள்ளிட்ட கடந்த கால யப்பானின் தலைநகரங்கள் அமைந்துள்ளன. ஒன்ஷுவின்  தெற்கு கரை சார்ந்த நகரங்களான தோக்கியோ, நாகோயா, கியோத்தோ, ஒசாகா, கோபி ஆகிய தொழிற்துறையில் சிறந்து விளங்குவதோடு, யப்பான் கடற்கரையை சார்ந்த பகுதிகளின் பொருளாதாரம் பெரும்பாலும் மீன்பிடி மற்றும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது.[4] ஒன்சு தீவு ஏனைய யப்பானின் மூன்று பெரிய தீவுகளுடன் பாலங்கள், சுரங்கங்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

புவியியல்தொகு

இந்த தீவு சுமார் 1,300 கிமீ (810 மைல்) நீளமும் 50 முதல் 230 கிமீ (31 முதல் 143 மைல்) அகலமும் கொண்டது. இதன் மொத்த பரப்பளவு 227,960 கிமீ 2 (88,020 சதுர மைல்) ஆகும்.[5] 209,331 கிமீ 2 (80,823 சதுர மைல்) பரப்பளவைக் கொண்ட பெரிய பிரித்தானிய தீவை விட சற்றுப் பெரியது.[2] ஒன்சு 10,084 கிலோமீற்றர் (6,266 மைல்) கடற்கரையை கொண்டுள்ளது.[6] இத்தீவில் நில நடுக்கங்கள் அடிக்கடி நிகழுகின்றன. 1923 ஆம் ஆண்டில் செப்டம்பரில் தோக்கியோவில் ஏற்பட்ட பெரிய கான்டே பூகம்பம் பெருமளவிலான சேதத்தை ஏற்படுத்தியது. 2011 ஆம் ஆண்டில் மார்ச்சில் நிகழ்ந்த நில நடுக்கம் பேரழிவு ஏற்படுத்தும் சுனாமியைத் தோற்றுவித்தது.[7] ஒன்சுவில் 3,776 மீ (12,388 அடி) உயரமுடைய செயற்படும் எரிமலையான பூஜி மலை மிக உயர்ந்த சிகரம் ஆகும். இங்கு யப்பானின் மிக நீளமான ந்தியான ஷினானோ உட்பட ஏராளமான நதிகள் காணப்படுகின்றன. யப்பான் அல்பஸ் மலைத்தொடரும் இங்கு அமைந்துள்ளது. பொதுவாக மேற்கு யப்பானில் ஈரப்பதமான துணை வெப்பமண்டல காலநிலையும், வடக்கில் ஈரப்பதமான கண்டக் காலநிலையும் காணப்படுகிறது.

ஒன்சு தீவானது ஹொக்கைடோ, கியூஷூ மற்றும் ஷிகோகு தீவுகளுடன் சுரங்கங்களினாலும், பாலங்களினாலும் இணைக்கப்பட்டுள்ளது. ஒன்சு சிகான் சுரங்கத்தினால்   ஹொக்கைடோவுடனும், கன்மொன் சுரங்கம் மற்றும் கன்மொன் பாலத்தினால் கியூஷு உடனும் இணைக்கப்பட்டுள்ளது. ஒன்சு தீவு சிக்கொகு தீவுடனும் பாலங்களின் மூலம் இணைந்துள்ளது.[சான்று தேவை]

சனத்தொகைதொகு

ஒன்சுத் தீவில் 2017 ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி 104 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். யப்பானின் மொத்த சனத்தொகையில் 81.3% வீதமான மக்கள் இங்கு வாழ்கின்றனர்.[3]

நிர்வாகம்தொகு

இந்த தீவு ஐந்து பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் தோக்கியோ பெருநகரம் உட்பட  34 மாகாணங்களைக் கொண்டுள்ளது. நிர்வாக ரீதியாக, சில சிறிய தீவுகள் இந்த மாகாணங்களுக்குள் சேர்க்கப்பட்டுள்ளன.[சான்று தேவை]

இயற்கை அம்சங்கள்தொகு

விவசாயம்தொகு

பெரும்பாலும் யப்பானிய தேயிலை மற்றும் பட்டு ஒன்சுவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. பழங்கள், காய்கறிகள், தானியங்கள், அரிசி மற்றும் பருத்தி விளைகின்றன. நெகட்டா அரிசி உற்பத்தியில் மிக்கிய இடத்தைப் பெறுகின்றது. கான்டே மற்றும் நாபி சமவெளிகளிகள் அரிசி மற்றும் காய்கறிகளும, யமனாஷியில் பழங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. மெனெகாசியாவை சேர்ந்த அரிய இன பாசிப்பூஞ்சை ஒன்சுவில் மட்டுமே காணப்படுகின்றன.[8]

தாதுக்கள்தொகு

ஒன்சுவில் துத்தநாகம், தாமிரம் மற்றும் எண்ணெய் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளது.[9]

குறிப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒன்சூ&oldid=2866326" இருந்து மீள்விக்கப்பட்டது