அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி

அனந்தபுரம் கோ.கிருட்டிணமூர்த்தி (Ananthapuram G.Krishnamurthy, பிறப்பு: சூன் 4, 1950) தமிழகம் அறிந்த கல்வெட்டு அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படுபவர்.

அனந்தபுரம் கிருட்டிணமூர்த்தி

மின்சாரத்துறைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் கல்வெட்டுக்களில் அதிக நாட்டமுள்ளவர். பணிக்காலத்தில் தன் ஓய்வு நேரத்தில் பல இடங்களுக்குக் கல்வெட்டுக்களைத் தேடிச் சென்று அரிய தகவல்களைத் தமிழ்கூறு நல்லுலகிற்கு அளித்துள்ளார்.

நூல்கள்

தொகு

இவர் எழுதியுள்ள நூல்களில் கீழ்க்கண்டவை உள்ளிட்ட பல நூல்கள் அடங்கும்.[1]

வரலாற்றில் மணிமங்கலம்

தொகு
வரலாற்றில் மணிமங்கலம்
நூல் பெயர்:வரலாற்றில் மணிமங்கலம்
ஆசிரியர்(கள்):அனந்தபுரம் கோ.கிருட்டினமூர்த்தி
வகை:ஊரின் வரலாறு
துறை:வரலாறு
இடம்:எம்.ஜி.ஆர்.நகர்,
சென்னை 600 078
மொழி:தமிழ்
பக்கங்கள்:304
பதிப்பகர்:திருக்குறள் பதிப்பகம்
பதிப்பு:முதல் பதிப்பு
2010
ஆக்க அனுமதி:ஆசிரியருக்கு

இவர் எழுதியுள்ள மற்றுமொரு நூல் வரலாற்றில் மணிமங்கலம்[2]. பல்லவர் காலம், சோழர் காலம் ஆகிய காலங்கள் தொடங்கி காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மணிமங்கலம் என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊரைப் பற்றி கல்வெட்டுகள் மற்றும் பிற ஆதாரங்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ள இந்நூல் 13 தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது.[3]

கல்வெட்டுகள், சிலைகள்

தொகு

கள ஆய்வின்போது 50க்கும் மேற்பட்ட (சோழர் மற்றும் பல்லவர் கால) கல்வெட்டுக்களையும் 100க்கும் மேற்பட்ட (சோழர் மற்றும் பல்லவர் கால) சிலைகளையும் கண்டுபிடித்துள்ளார். பௌத்தம் மற்றும் சமணம் தொடர்பான ஆய்வுகளில் அதிகம் ஆர்வம் காட்டிவரும் இவர், அண்மையில் சமணம் தொடர்பாக ஒரு பெருந்திட்டத்தினைத் தயாரித்து அளித்துள்ளார்.

உசாத்துணை

தொகு

'வரலாற்றில் மணிமங்கலம்', நூல், (முதற்பதிப்பு, 2010; திருக்குறள் பதிப்பகம், பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்.நகர், சென்னை)

மேற்கோள்கள்

தொகு
  1. செஞ்சி வேங்கடரமணர் கோயில், * வரலாற்றில் பவானிசங்கமேசுவரர் கோயில் ஸ்ரீரங்கபூபதி பதிப்பகம், சென்னை, 2018, பக்.90-91
  2. "Dial for Books, தினமணி மதிப்புரை". Archived from the original on 2014-03-21. பார்க்கப்பட்ட நாள் 2014-09-28.
  3. வரலாற்றில் மணிமங்கலம்: காஞ்சிபுரம் மாவட்டம்

வெளியிணைப்புகள்

தொகு