நிலக்கடலை

பயறுவகைகளில் ஒன்று
(கடலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நிலக் கடலை
(Arachis hypogaea)
வேர்க்கடலை (நிலக் கடலை)
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: திசுவுடைத் தாவரங்கள்
வகுப்பு: மாக்னோலிஃபைடா
வரிசை: ஃபேபேலிஸ்
குடும்பம்: பூக்கும் தாவரம்
துணைக்குடும்பம்: ஃபேபுய்டியா
சிற்றினம்: அஸ்கினோமேனானியே
பேரினம்: அராக்கிஸ்
இனம்: ஹைபோஜியா
இருசொற் பெயரீடு
அராக்கிஸ் ஹைபோஜியா லி
கரோலஸ் லின்னேயஸ்

நிலக்கடலை (peanut) (வட்டார வழக்குகளில், வேர்க்கடலை, கச்சான், மலாட்டை மற்றும் கலக்கா ஆகிய பெயராலும் அழைக்கப்படுகிறது) என்பது பலரால் விரும்பி உண்ணப்படும் கொட்டைகளைத் தரும் பருப்பு வகை தாவரம் ஆகும். இதை சுருக்கமாக கடலை என்று அழைக்கப்படுகிறது. இது நடு தென் அமெரிக்காவுக்கு பூர்வீகமானது. சீனா, இந்தியா, நைஜீரியா ஆகிய நாடுகள் இதை அதிகம் உற்பத்தி செய்கின்றன.

இதன் தரப்படுதப் பட்ட பெயர்களாக வேர்க்கடலை, நிலக்கடலை ,மணிலாக்கடலை, கடலைக்காய் (கலக்கா), மணிலாக்கொட்டை (மலாட்டை) எனப் பலவாறாக வழங்கப்படுகிறது. இதற்க்கு கச்சான் என்ற பெயர் இலங்கை,தமிழரிடம் பரவலாக காணப்படுகிறது.

நிலக்கடலையை அவித்தோ அல்லது வறுத்தோ உண்ணப்படுகிறது. வெல்லப்பாகுடன் கலந்து கடலை மிட்டாயாக உண்ணப்படுகிறது. பொடித்து இனிப்புருண்டைகளாக தயாரிக்கப்படுகிறது. கடலை காந்தியடிகளுக்குப் பிடித்த உணவாகும்.

நோய்கள் தொகு

பூஞ்சணங்கள், நச்சுக் கிருமிகளால் ஏற்படும் நோய்கள் [(உ-ம்) இலைப்புள்ளி நோய்] நிலக்கடலையின் மகசூலைக் குறைக்கக்கூடிய பல்வேறு காரணிகளுள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.[1]

பயன்கள் தொகு

நிலக்கடலை, valencia, raw
ஊட்ட மதிப்பீடு - 100 g (3.5 oz)
ஆற்றல்2,385 kJ (570 kcal)
21 g
சீனி0.0 g
நார்ப்பொருள்9 g
48 g
நிறைவுற்றது7 g
ஒற்றைநிறைவுறாதது24 g
பல்நிறைவுறாதது16 g
புரதம்
25 g
டிரிப்டோபான்0.2445 g
திரியோனின்0.859 g
ஐசோலியூசின்0.882 g
லியூசின்1.627 g
லைசின்0.901 g
மெத்தியோனின்0.308 g
சிஸ்டைன்0.322 g
பினைல்அலனின்1.300 g
தைரோசைன்1.020 g
வாலின்1.052 g
ஆர்கினைன்3.001 g
ஹிஸ்டிடின்0.634 g
அலனைன்0.997 g
அஸ்பார்டிக் அமிலம்3.060 g
குளூட்டாமிக் காடி5.243 g
கிளைசின்1.512 g
புரோலின்1.107 g
செரைன்1.236 g
உயிர்ச்சத்துகள்
தயமின் (B1)
(52%)
0.6 mg
ரிபோஃபிளாவின் (B2)
(25%)
0.3 mg
நியாசின் (B3)
(86%)
12.9 mg
(36%)
1.8 mg
உயிர்ச்சத்து பி6
(23%)
0.3 mg
இலைக்காடி (B9)
(62%)
246 μg
உயிர்ச்சத்து சி
(0%)
0.0 mg
உயிர்ச்சத்து ஈ
(44%)
6.6 mg
நுண்ணளவு மாழைகள்
கல்சியம்
(6%)
62 mg
இரும்பு
(15%)
2 mg
மக்னீசியம்
(52%)
184 mg
மாங்கனீசு
(95%)
2.0 mg
பாசுபரசு
(48%)
336 mg
பொட்டாசியம்
(7%)
332 mg
துத்தநாகம்
(35%)
3.3 mg
Other constituents
நீர்4.26 g

Percentages are roughly approximated using US recommendations for adults.

நிலக்கடலையில் மாங்கனீசு சத்து அதிகமாக உள்ளது.நாம் உண்ணும் உணவில் உள்ள கால்சியம் சத்துகள் நமது உடலுக்கு கிடைக்கவும் இது பயன்படுகிறது.நிலக்கடலையில் உள்ள ரெஸ்வரெட்ரால் என்ற சத்து இதய வால்வுகளை பாதுக்காக்கிறது.நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடண்ட் நோயிலிருந்து பாதுக்காப்பதோடு இளமையையும் பராமரிக்கவும் செய்கிறது.நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது தீமை செயும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகரிக்கிறது.நிலக்கடலையில் உள்ள ஒமேகா -3 சத்தானாது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. சிததா மருத்துவ முறையில் இது பித்தத்தை அதிகரிக்கும் குணம் உள்ளது, எனவே அதை சமன் செய்வதறக்காக வெல்லத்துடன் சேர்த்து உண்ணவேண்டும். கடலைமிட்டாய் மிகச்சிறந்த உணவு.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலக்கடலை&oldid=3678339" இலிருந்து மீள்விக்கப்பட்டது