மேல்பட்டாம்பாக்கம்
மேல்பட்டாம்பாக்கம் (Melpattampakkam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
மேல்பட்டாம்பாக்கம் | |||||
அமைவிடம் | |||||
நாடு | இந்தியா | ||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||
மாவட்டம் | கடலூர் | ||||
வட்டம் | பண்ருட்டி | ||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||
மாவட்ட ஆட்சியர் | சிபி ஆதித்யா செந்தில் குமார், இ. ஆ. ப [3] | ||||
மக்கள் தொகை • அடர்த்தி |
6,887 (2011[update]) • 1,215/km2 (3,147/sq mi) | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
பரப்பளவு | 5.67 சதுர கிலோமீட்டர்கள் (2.19 sq mi) | ||||
குறியீடுகள்
| |||||
இணையதளம் | www.townpanchayat.in/melpattambakkam |
இப்பேரூராட்சிக்கு கிழக்கே நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலை உள்ளது, வடக்கில் தென்பெண்ணை ஆறு உள்ளது. மாமல்லபுரத்தை அடுத்து இப்பேரூராட்சி பகுதியில் சிலை சிற்ப வேலைகள் அதிகம் நடைபெறுகின்றது. இப்பகுதியில் விவசாயம் சிறந்த முறையிலும் முதன்மை தொழிலாகவும் செய்யப்படுகிறது. நெல், கரும்பு மற்றும் வாழை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
அமைவிடம்
தொகுஇந்தியாவின் தென் கிழக்குப்பகுதியில் மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி அமைந்துள்ளது.கிழக்கே கடலூருக்கு 16 கி.மீ.; வடகிழக்கே புதுச்சேரி 42.2 கி.மீ.; மேற்கே பண்ருட்டி 10 கி.மீ.; வடமேற்கே விழுப்புரம் 30 கி.மீ. மற்றும் தெற்கே நெய்வேலி 40 கி.மீ. தொலைவில் உள்ளது.இங்கிருந்து விருத்தாச்சலம் 64 கி.மீ.சென்னை சுமார் 187 கி.மீ. தொலைவிலும், திருச்சி 169 கி.மீ. தொலைவிலும், சேலம் 188 கி.மீ. தொலைவிலும்,திருவண்ணாமலை 92 கி.மீ, தொலைவிலும்,மற்றும் வேலூர் 156 கி.மீ.தொலைவிலும் அமைந்துள்ளன.
சாலைப் போக்குவரத்து
தொகுமேல்பட்டம்பாக்கத்தில் சாலை வலைப்பின்னல் மூலமாக இணைக்கப்பட்டிருக்கும் நகரமாகும். பண்ருட்டி,கடலூர்,விழுப்புரம்,திருவண்ணாமலை,ஆரணி மற்றும் வேலூர்,உளுந்தூர்ப்பேட்டை, கள்ளக்குறிச்சி,சின்னசேலம், சேலம்,ஈரோடு,திருப்பூர்,கோயம்புத்தூர்,உதகமண்டலம் போன்ற நகரங்களுக்கு செல்ல அடிக்கடி பேருந்துகள் உள்ளன.
இருப்புப்பாதை
தொகுமேல்பட்டம்பாக்கத்தில் ரயில் நிலையம் உள்ளது - நிலையக் குறியீடு MBU. இது இந்திய ரயில்வேயின் தெற்கு ரயில்வே மண்டலத்தின் திருச்சிராப்பள்ளி கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. விழுப்புரம் - திருச்சி, (வழி: கடலூர், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் மின்மயமாக்கப்படாத அகலப் பாதை.இது மெயின் லைன் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் வழியே இயக்கப்படும் ரயில்கள் மேல்பட்டம்பாக்கத்தில் ரயில் நிலையத்தின் வழியாக செல்கின்றன.
விமான நிலையங்கள்
தொகுமிக அருகில் உள்ள விமான நிலையம் நெய்வேலி விமான நிலையம் மற்றும் புதுச்சேரி - பாண்டிச்சேரி விமான நிலையம் - 42.2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஸ்பைஸ்ஜெட் புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத் வரை வழக்கமான விமானங்களை இயக்குகிறது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு5.67 சகிமீ பரப்பும் , 15 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 72 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பண்ருட்டி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கடலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1,603 வீடுகளும், 6,887 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 84.34% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 982 பெண்கள் வீதம் உள்ளனர். [5]
பள்ளிகள்
தொகு*அரசு உயர்நிலைப் பள்ளி. *ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி *ஆனந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி. *பெண்கள் கிறிஸ்தவ மேல்நிலைப் பள்ளி. *ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி.
வழிபாட்டுத்தலங்கள்
தொகு- அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி திருக்கோயில்
- அருள்மிகு சிவலோகநாதர் கோயில்
- அஹ்லெ ஹதீஸ் பள்ளிவாசல்.
ஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-04-25. பார்க்கப்பட்ட நாள் 2019-04-25.
- ↑ Melpattampakkam Population Census 2011