திருமூர்த்தி அணை

திருமூர்த்தி அணை இந்திய ஒன்றியத்தின் தமிழ்நாடுஅரசின் ஆளுகையில் உள்ள திருப்பூர் மாவட்டத்தின் உடுமலைப்பேட்டை வட்டத்தில் அமைந்துள்ளது.[4]. இந்திய தர நிர்ணய அமைவனதில் இவ்வணை ஆனது இடைநிலை நீர்த்தேக்கம் ஆகும்.

திருமூர்த்தி அணை
திருமூர்த்தி அணை
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/tamilnadu" does not exist.
அதிகாரபூர்வ பெயர்திருமூர்த்தி அணை
நாடுஇந்தியாவின்
அமைவிடம்திருப்பூர் மாவட்டம்,உடுமலை
புவியியல் ஆள்கூற்று10°29′05″N 77°09′52″E / 10.48472°N 77.16444°E / 10.48472; 77.16444
நோக்கம்பாசனம் ,மின் உற்பத்தி
நிலைபொதுமக்கள் பயன்பாட்டில்
திறந்தது1967
உரிமையாளர்(கள்)தமிழ்நாடு அரசு
இயக்குனர்(கள்)தமிழ்நாடு பொதுப்பணித் துறை
அணையும் வழிகாலும்
உயரம்34.14 மீ
நீளம்2679.79 மீ
கொள் அளவு351 மெக்.மீ3
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு54790
செயலில் உள்ள கொள் அளவு49390
திருமூர்த்தி நுன்புனல் மின்நிலையம்[1]
ஆள்கூறுகள்10°48472222′N 77°16444444′E / 807880.367°N 274151.067°E / 807880.367; 274151.067 Coordinates: latitude minutes >= 60
Coordinates: longitude minutes >= 60
{{#coordinates:}}: invalid latitude-->
பணியமர்த்தம்20.03.2000
வகைவழக்கமான
ஹைட்ராலிக் ஹெட்10 மீ [2]
சுழலிகள்3 கப்பலான் சுழலிகள் [3]
நிறுவப்பட்ட திறன்1950 கி.வாட்

துவக்கம்

தொகு

இந்த அணையானது பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்டத்தில் (பி.ஏ.பி) 1967 ஆம் ஆண்டில் பாலாறின் குறுக்கே கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

நீர்வரத்து

தொகு

பி.ஏ.பி., திட்டத்தில் பரம்பிக்குளம் அணையில் இருந்து, சர்க்கார்பதிக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு, மின் உற்பத்தி செய்த பின், காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. [5] இந்த அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலைதொடர்களில் உள்ள ஆனை மலை அருவி, ஆறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக மழை காலங்களில் நீர்வரத்து ஏற்படுகின்றது.

அணையின் நீரியல்

தொகு
 • நீா்பிடிப்பு உயரம் – 407.52 மீட்டர்
 • அணையின் நீளம் – 2679.79 மீட்டா்
 • அணையின் உயரம்-34.14 மீட்டா்
 • அணையின் கொள்ளளவு – 351 மில்லியன் கனஅடி
 • நீா்பிடிப்பு பரப்பு – 3.88 சதுர கிமீ
 • அணையின் வழிந்தோடியின் எண்ணிக்கை –
 • அணையின் வழிந்தோடியின் அமைப்பு –
 • அணையின் வழிந்தோடியின் நீளம் –
 • அணையின் மிகைநீா் வெள்ளோட்ட அளவு –
 • அணையில் உள்ள மதகுகள் –
 • மொத்தஆயக்கட்டு – 3.77 லட்சம் ஏக்கர்[6]

பாசன பகுதிகள்

தொகு

பி.ஏ.பி. பாசனதிட்டத்தின் மூலமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 77 ஆயிரத்து 152 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. மேலும் திருமூர்த்தி அணையை ஆதாரமாக கொண்டு சுற்றுப்புறகிராம மக்கள் பயன்பெறும் வகையில் பூலாங்கிணர், குடிமங்கலம், உடுமலை, மடத்துக்குளம் கணக்கம்பாளையம் உள்ளிட்ட கூட்டுக்குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது.

நுன் புனல் மின் நிலையம்

தொகு

இந்த அணையானது 1967 ஆம் ஆண்டு விவசாய நீர் பாசனத்திற்கு என்ற குறிகோளுடன் கட்டப்பட்டாலும் இவ்வணைக்கு வரும் நீர்வரத்து வீணாக்காமல் நுன் புனல் மின் நிலையம் 9.9 கோடி செலவில் 2000ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு மின் விநியோகம் 2002 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.

நுன் புனல் மின் நிலையம் 2050 மி.மீ விட்டம் கொண்ட நீர் குழாய் மூலம் கப்பலான் சுழலிகள் 3X650 கி.வாட் மாறுதிசைமின் சுழலிகளுடன் பற்சக்கரக் கூடு (gear box) இன்றி நேரடியாக இணைக்கபட்டுள்ளது. இது ஓர் ஆண்டிற்கு பயன்படும் மின் ஆற்றலாக 3.61 ஜிகாவாட்/மணி என்பதாக உள்ளது.

சுற்றுலா தலம்

தொகு
 
திருமூர்த்தி மலை

இது திருமூர்த்தி மலையை அடுத்து அமைந்துள்ளது. மலையடிவாரத்தில் உள்ள திருமூர்த்தி கோவில் புகழ் வாய்ந்தது. அமலிங்கேசுவரர் என்ற பெயரில் எழுந்தருளியுள்ள சிவன் கோவிலினை ஒட்டி வற்றாத ஓடை ஒன்று ஓடுகிறது. சற்றே மலையேற்றத்தில் பஞ்சலிங்க அருவி என அழைக்கப்படும் அருவியொன்று உள்ளது. அணையின் நீர்த்தேக்கத்தில் படகு சவாரியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பழனி - கோவை நெடுஞ்சாலையில் உடுமலையிலிருந்து 20 கி.மீ தொலைவில் இவ்விடம் அமைந்துள்ளது. உடுமலையிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அருகாமையில் உள்ள அமராவதி அணையும் முதலைப் பண்ணையும் சுற்றுலாப் பயணத்தை நிறைவு செய்கின்றன.

மேலும் பார்க்க

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
 1. https://www.tangedco.gov.in/linkpdf/KADAMAPARAI%20TAMIL.pdf
 2. https://esmap.org/sites/default/files/esmap-files/MINI%20HYDRO%20KER%20FINAL%2027%20DEC%20Clean.pdf
 3. https://esmap.org/sites/default/files/esmap-files/MINI%20HYDRO%20KER%20FINAL%2027%20DEC%20Clean.pdf
 4. https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2019/09/2019092583.pdf
 5. https://www.dinamalar.com/news_detail.asp?id=2354640&Print=1
 6. https://www.hindutamil.in/news/tamilnadu/552105-water-theft-at-parambikulam-azhiyar-irrigation-canal.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமூர்த்தி_அணை&oldid=3632322" இலிருந்து மீள்விக்கப்பட்டது