காமநாயக்கன்பாளையம்
காமநாயக்கன்பாளையம் (ஆங்கிலம்: KamanaickenPalayam) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், திருப்பூர் மாவட்டத்தில், பல்லடம் வட்டத்தில் அமைந்துள்ள நகரம் ஆகும். இவ்வூரில் உள்ளாட்சி அமைப்புகளின்படி மொத்தம் 12 வார்டுகள் அமைந்துள்ளன. காமநாயக்கன் பாளையத்தில் புகழ்பெற்ற காவல்நிலையம் அமைந்துள்ளது. இது இந்திய விடுதலைப் போராட்ட காலகட்டத்தில் கட்டப்பட்டது. மிக முக்கிய சாலை சந்திப்பாகவும் இவ்வூர் உள்ளது.[2][3][4]
Kamanaicken Palayam
காமநாயக்கன்பாளையம் | |
---|---|
நகரம் | |
![]() | |
ஆள்கூறுகள்: 10°59′N 77°18′E / 10.98°N 77.3°E | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ் நாடு |
மண்டலம் | கொங்கு நாடு |
மாவட்டம் | திருப்பூர் மாவட்டம் |
பெருநகரம் | கோயம்புத்தூர் |
அரசு | |
• வகை | நகரம் |
• நிர்வாகம் | கே. கிருஷ்ணாபுரம் ஊராட்சி, வதம்பச்சேரி ஊராட்சி |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 12,378 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 641 658 |
தொலைபேசி குறியீட்டு எண் | +91-04255 |
வாகனப் பதிவு | TN-39, 42 |
பெயர்க்காரணம்
தொகுகாமம் என்பது மோகம் என்று பொருள் படும். மோகம் என்பதற்கு ஆசை என கூறுவர். விஜய நகர ஆட்சியில் பாளையக்காரர்கள் தங்களது ஆதிக்கத்தை நிலை நாட்டியும், பெரும் நாயக்கர் இங்கு குடி கொண்டு இருந்ததால் காம-நாயக்கன்-பாளையம் எனப் பெயர் பெற்றது.
பொருளாதாரம்
தொகுகாமநாயக்கன் பாளையத்தைச் சுற்றி பதினைத்திக்கும் மேற்பட்ட பஞ்சு நூல், காடாதுணி தொழிற்சாலைகள், விசைத்தறிகள் உள்ளது. இத்தொழில்களுக்கு தொழிலாளர்களாக, காமநாயக்கன்பாளையத்தில் பீஹார், உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், ஒரிசா என வடமாநிலத்தைச் சார்ந்தோர் கிட்டத்தட்ட 5000 மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மேலும் காற்றாலைகளிலிருந்து மின்சாரம் எடுக்கும் பணிகளும் அதிகளவில் நடைபெறுகிறது. காற்றாலைகளின் வட்டாரத் தலைமை அலுவலகம் இங்கு செயல்படுகிறது.
காமநாயக்கன் பாளையம் சந்திப்பு
தொகுகாமநாயக்கன் பாளையம் சந்திப்பு என்பது நான்கு சாலைகளின் சந்திப்பு ஆகும். இவ்வூர் வழியாகத்தான் பொள்ளாச்சி, கேரள மாநில வாகனங்கள் செல்ல சாலை அமைந்துள்ளது. இதனால் இது, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் மிக முக்கியமான சாலை ஆகும். காமநாயக்கன் பாளையம் முதல் பல்லடம் வழியாக அவினாசி செல்ல ஒரு சாலையும், காமநாயக்கன் பாளையம் முதல் பொள்ளாச்சி செல்ல ஒரு சாலையும், காமநாயக்கன் பாளையம் முதல் அன்னூர் செல்ல ஒரு சாலையும், காமநாயக்கன் பாளையம் முதல் வாவிபாளையம் வழியாக உடுமலைப்பேட்டை செல்ல ஒரு சாலையும் என நான்கு மிக முக்கியமான சாலைகள் உள்ளன. இதனாலையே நால்ரோட்டில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இவற்றை எல்லாம் கடந்து நூற்றாண்டு காணும் நகரமாக தற்போது உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறப்புகள்
தொகுகாமநாயக்கன் பாளையம் அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் இப்பகுதியில் சிறப்பு பெற்றது. மேலும் மாரியம்மன், வடுகபாளையம் மாகாளியம்மன் கோவில்களும் சிறப்பு பெற்றவை.
- இவ்வூரில் கிட்டத்தட்ட 98 ஆண்டுகள் (சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக) செயல்படும் வாரச்சந்தை மிகவும் சிறப்பு.
- காமநாயக்கன் பாளையம் காவல் நிலையமானது, ஆங்கிலேய ஆட்சியில் அமைந்துள்ளது மிகவும் சிறப்பு.
காவல் நிலையம்
தொகுகாமநாயக்கன் பாளையம் காவல் நிலையம் ஆங்கிலேய அட்சி காலத்தில் ராணி எலிசபெத் மஹாராணியால், திறந்து வைக்கப்பட்டது. இந்த காவல் நிலையம் 15.05.1926 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. தற்பொழுது 93 வருடங்கள் ஆகின்றன. இந்தக் காவல்நிலைய வட்டத்தில் தற்போது அனுப்பட்டி, பருவாய், கரடிவாவி, மல்லேக்கவுண்டம்பாளையம்,கே. கிருஷ்ணாபுரம், புளியம்பட்டி, கேத்தனூர், எலவந்தி, வி. வடமலைப்பாளையம், வாவிபாளையம், வி. கள்ளிப்பாளையம் ஆகிய ஊராட்சிகள் காமநாயக்கன் பாளையம் காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ளது.
வசதிகள்
தொகுஇவ்வூருக்கு
- வாரச்சந்தை,
- சாரதா திரையரங்கு, இந்த திரையங்கில் ஆன்லைன் புக்கிங் செய்ய www.justtickets.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யலாம்
- எச்சரிக்கை விளக்கு,
- கடை வீதி,
- பல்பொருள் அங்காடி,
- வங்கிகள்,
- பழைய நூலகம்,
- புதிய நூலகம் ஆகிய வசதிகளும் உள்ளன. இவ்வூரில் உள்ள வாரச்சந்தை 98 வருட மிகவும் பழமையான வாரச்சந்தை ஆகும். இந்த வாரச்சந்தை ஆங்கிலேய ஆட்சியில் உருவாக்கப்பட்டது.
மக்கள் தொகை
தொகு2001 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி இவ்வூரில் 12,378 பேர் வசிக்கின்றனர். இதில் 53% ஆண்களும் 47% பெண்களும் வசிக்கின்றனர்.
போக்குவரத்து
தொகுஇவ்வூரிலிருந்து 28 கி.மீ. இல் திருப்பூரில் தொடர்வண்டி நிலையமும், 38 கி.மீ. தொலைவில் கோவை சர்வதேச விமான நிலையம் உள்ளது. மேலும் காமநாயக்கன் பாளையம் பேரூராட்சியில் இருந்து பொள்ளாச்சி, திருச்சூர், குருவாயூர், பல்லடம், திருப்பூர், கோபிச்செட்டி பாளையம், குன்னூர், கோயம்புத்தூர், பெங்களூர், தர்மபுரி, ஒசூர், உடுமலை, ஈரோடு, சேலம், நகரப் பேருந்துகள் என அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து வசதிகள் உள்ளன. திருப்பூர்-பொள்ளாச்சி வழிதடத்தில் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை என பேருந்து போக்குவரத்து உள்ளது. சிறப்பு தினங்களில் ஆனைமலை,திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் உள்ளன. இப்பேருந்துகள் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படுகிறனது.
அரசியல்
தொகுஇப்பகுதி இரு மாவட்டங்களுக்கு இடையில் உள்ளதால், ஒரு பகுதி பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்கும், ஒரு பகுதி சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது.[5] அதிமுக, திமுக, பாஜக ஆகியவை இங்கு முக்கிய கட்சிகள்.[6]
வங்கிகள்
தொகு- ஐசிஐசிஐ வங்கி
- ஸ்டேட் பாங்கு ஆப் இந்தியா (சேவை மையம் மட்டும்)
- பாங்கு ஆப் பரோடா (சேவை மையம் மட்டும்)
- வடுகபாளையம் தொடக்க வேளாண்மை மற்றும் கூட்டுறவு வங்கி[7]
தானியிக்க வங்கி இயந்திரம் (ATM)
தொகு- ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் இரண்டு
- கரூர் வைஸ்யா வங்கி ஏடிஎம்
- ஹெச்டியை வங்கி ஏடிஎம்
- ஆக்ஸிஸ் வங்கி ஏடிஎம்
- எச்.டி.எப்.சி வங்கி ஏடிஎம்
கல்வி நிறுவனங்கள்
தொகு- கொங்குராஜா தொடக்கப்பள்ளி
- ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
- அரசு உயர்நிலை பள்ளி
- அங்கன்வாடி மையங்கள் இரண்டு
- ஸ்கேட் தொழில்நுட்ப கல்லூரி
ஆதாரங்கள்
தொகு- ↑ [1]
- ↑ "திருப்பூர்: பள்ளியில் திடீரென மயங்கிய 7ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு". Puthiyathalaimurai. Retrieved 2022-07-28.
- ↑ "Kamanaickenpalayam Village , Palladam Block , Tiruppur District". www.onefivenine.com. Retrieved 2022-07-28.
- ↑ "K.KRISHNAPURAM Village in TIRUPPUR | eTamilNadu.org". www.etamilnadu.org. Retrieved 2022-07-28.
- ↑ "Sahana Clothing Co Pvt Ltd - Textile Industry News". textile.industry-report.net (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-03-18. Retrieved 2022-07-28.
- ↑ "BJP Tiruppur Palladam".
- ↑ "ICICI BANK LIMITED KAMANAICKENPALAYAM Branch IFSC Code, MICR Code, Address & Phone Number". The Economic Times (in ஆங்கிலம்). Retrieved 2022-07-28.