கரூர் வைசியா வங்கி
இந்தியத் தனியார் துறை வங்கி
கரூர் வைசியா வங்கி இந்தியாவில் செயல்பட்டுவரும் தனியார்த் துறையைச் சார்ந்த வங்கியாகும். இது தமிழகத்தின் கரூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இவ்வங்கி 1916 ஆம் ஆண்டில் எம். ஏ. வெங்கட்ராம செட்டியார் மற்றும் ஆதி கிரிஷ்ண செட்டியார் ஆகியோரால் தொடங்கப்பட்டது. இதர இந்திய தனியார் வங்கிகளைப் போலவே இவ்வங்கியும் பல்வேறு வங்கிச்சேவைகளையும் இணைய வங்கிசேவை , மற்றும் மொபைல் வங்கி சேவை உள்ளிட்ட தொழில்நுட்ப சேவைகளையும் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. 20122 மார்ச் 31 அன்றைய நிலவரப்படி இவ்வங்கிக்கு 789 வங்கி கிளைகளும், 2223 ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணவழங்கி மற்றும் பணம் செலுத்தும் இயந்திரங்களும் செயல்படுகின்றன. 105 ஆண்டுகளுக்கும் மேலாக லாபமீட்டி வரும் சிறந்த வங்கியாக திகழ்ந்து வருகிறது. [1]
வகை | பொது நிறுவனம் (முபச: 590003 ) |
---|---|
நிறுவுகை | 1916 |
தலைமையகம் | கரூர், தமிழ்நாடு |
முதன்மை நபர்கள் |
|
தொழில்துறை | வங்கித் தொழில் நிதிச் சேவைகள் |
உற்பத்திகள் | முதலீட்டு வங்கி வணிக வங்கி நுகர்வோர் வங்கி தனிநபர் வங்கி வள மேலாண்மை அடமானக் கடன்கள் தங்கம் & வெள்ளி நாணயங்கள், கடன் அட்டைகள் |
இயக்க வருமானம் | ▲₹6356.73 மில்லியன் (2021–2022) |
பணியாளர் | 7,746 (31 மார்ச் 2021) |
இணையத்தளம் | https://www.kvb.co.in |
மேற்கோள்கள்
தொகு- ↑ https://www.kvb.co.in/about-us/banking-profile/ கரூர் வைசியா வங்கி குறிப்பு