குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் இருபத்தி மூன்று பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது.[1]உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பெதப்பம்பட்டியில் இயங்குகிறது, ஒன்றிய பெருந்தலைவராக சுகந்தி முரளி பணியாற்றி வருகிறார்.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 77,296 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 19,092 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்

தொகு

குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 24 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்:

  1. ஆமந்தகடவு
  2. ஆனைக்கடவு
  3. ஆத்துகிணத்துபட்டி
  4. தொட்டம்பட்டி
  5. குடிமங்கலம்
  6. இலுப்பநகரம்
  7. கொண்டம்பட்டி
  8. கொங்கல்நகரம்
  9. கொசவம்பாளையம்
  10. கோட்டமங்கலம்
  11. குப்பம்பாளையம்
  12. மூங்கில்தொழுவு
  13. பண்ணைகிணறு
  14. பெரியபட்டி
  15. பொன்னேரி
  16. பூளவாடி
  17. புதுப்பாளையம்
  18. புக்குளம்
  19. சோமவாரபட்டி
  20. வடுகபாளையம்
  21. வாகைத்தொழுவு
  22. வீதம்பட்டி
  23. விருகல்பட்டி

வெளி இணைப்புகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. திருப்பூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும், கிராம ஊராட்சிகளும்
  2. 2011 Census of Tiruppur district Panchayat Unions