எம். எஸ். எம். ஆனந்தன்
எம். எஸ். எம். ஆனந்தன் (M. S. M. Anandan) ஓர் தமிழக அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும் ஆவார். இவர் 2011ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், திருப்பூர் வடக்கு தொகுதியிலிருந்து தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் தமிழக அரசின் இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.[2] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பல்லடம் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[3]
மேற்கோள்கள் தொகு
- ↑ "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011". தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி. http://www.elections.tn.gov.in/MLA_List.pdf.
- ↑ "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு. http://www.tn.gov.in/gov_ministers.html.
- ↑ "16th Assembly Members". Government of Tamil Nadu. http://www.assembly.tn.gov.in/16thassembly/members/001_050.html. பார்த்த நாள்: 2021-05-07.