வெள்ளோடு (ஆங்கில மொழி: Vellode) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3][4]

வெள்ளோடு
Vellode
வெள்ளோடு
வெள்ளோடு Vellode is located in தமிழ் நாடு
வெள்ளோடு Vellode
வெள்ளோடு
Vellode
வெள்ளோடு, ஈரோடு (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 11°14′03″N 77°39′31″E / 11.234100°N 77.658600°E / 11.234100; 77.658600
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்ஈரோடு மாவட்டம்
ஏற்றம்
272 m (892 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
638112
தொலைபேசி குறியீடு+91424xxxxxxx
வாகனப் பதிவுTN-56 yy xxxx
அருகிலுள்ள ஊர்கள்பெருந்துறை, முகாசி அனுமன்பள்ளி, அரச்சலூர், கனகபுரம், கஸ்பாபேட்டை, கவுண்டிச்சிபாளையம்
மாநகராட்சிஈரோடு மாநகராட்சி
மாவட்ட ஆட்சித் தலைவர்கிருஷ்ணன் உண்ணி
மக்களவைத் தொகுதிஈரோடு மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி)
மக்களவை உறுப்பினர்அ. கணேசமூர்த்தி
சட்டமன்ற உறுப்பினர்சு. முத்துசாமி
இணையதளம்https://erode.nic.in

கடல் மட்டத்திலிருந்து சுமார் 272 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள வெள்ளோடு பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11°14′03″N 77°39′31″E / 11.234100°N 77.658600°E / 11.234100; 77.658600 (அதாவது, 11°14'02.8"N, 77°39'31.0"E) ஆகும். பெருந்துறை, முகாசி அனுமன்பள்ளி, அரச்சலூர், கனகபுரம், கஸ்பாபேட்டை மற்றும் கவுண்டிச்சிபாளையம் ஆகியவை வெள்ளோடு பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள முக்கியமான சுற்றுலாத் தலமாக, இங்குள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலயம் விளங்குகிறது. இச்சரணாலயத்தில் சுமார் ரூ.4.90 கோடி செலவில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.[5] வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இந்த சரணாலயத்தில் 190 ஏக்கர் பரப்பளவில் குளம் ஒன்று உள்ளது.[6] 'சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலம்' என்று 'ராம்சார்' அமைப்பால் அங்கீகாரம் அடைந்துள்ளது.[7]

வெள்ளோடு பகுதியானது, ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் சு. முத்துசாமி ஆவார்.[8] மேலும் இப்பகுதி, ஈரோடு மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக அ. கணேசமூர்த்தி, 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Caktitēvi, Ṭi Kē (1992). Koṅku Vēḷāḷar varalār̲u. Tēvi Patippakam.
  2. Tamilnāṭu tolil-varttaka ṭairekṭari.
  3. Shanmugan, Kodumudi S. (1973). Āyvut tēn̲: Research papers on history of Kongu country. Koṅku Patippakam.
  4. Vaṭivēlan̲, Irā (2003). கொங்கு வேளிர் வரலாறு. அருணோதயம்.
  5. "வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில்ரூ.4.90 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் தீவிரம்: பார்வையாளர்களுக்கான தடை தொடர்கிறது". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-02-04.
  6. "வெள்ளோடு சரணாலயத்தில் பறவைகள் வரத்து சரிவு - Dinamalar Tamil News". Dinamalar. 2022-11-07. பார்க்கப்பட்ட நாள் 2023-02-04.
  7. "வெள்ளோடு பறவைகள் சரணாலயத்திற்கு 'ராம்சார்' சர்வதேச அங்கீகாரம்-சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி". www.dinakaran.com (in ஆங்கிலம்). Archived from the original on 2023-02-04. பார்க்கப்பட்ட நாள் 2023-02-04.
  8. "Erode (West) Election Result 2021 Live Updates: Muthusamy S of DMK Wins". News18 (in ஆங்கிலம்). 2021-05-02. பார்க்கப்பட்ட நாள் 2023-02-04.

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளோடு&oldid=3720322" இலிருந்து மீள்விக்கப்பட்டது