காளிங்கராயன் கால்வாய்

காளிங்கராயன் வாய்க்கால் கொங்கு மண்டலத் தலைவர் காளிங்கராயன் என்பவரால் 1271 ஆம் தொடங்கப்பட்டு 1283 ஆம் முடிக்கப்பட்டது. இவ்வாய்க்காலின் மொத்த நீளம் 56 மைல்கள் (90 கிமீ) ஆகும். பவானி, காவிரி ஆற்றுடன் கூடுவதற்கு சற்று முன் அணை கட்டி பவானி ஆற்று நீர் காளிங்கராயன் வாய்க்காலுக்கு திருப்பி விடப்பட்டது.காவிரியை ஒட்டியும்,இணையாகவும் மேற்கு புறத்தில் 56 மைல்கள் பயணித்து நொய்யல் ஆற்றில் ஆவுடையாபாறை என்னும் இடத்தில் இவ்வாய்க்கால் சேர்கிறது. இடையில் மூன்று ஓடைகளை கடந்து செல்கிறது. ஈரோடு பகுதியில் காவிரி ஆழமான பள்ளத்தில் பாய்வதால் வேளாண்மைக்கு பயன்படுவதில்லை.இவ்வாய்க்கால் மூலம் ஈரோடு மாவட்டம் சிறப்பாக பயனடைகிறது. இவ்வாய்க்கால் தொடங்குமிடத்தில் இதன் சராசரி கடல் மட்ட உயரம் 534 அடியாகும், முடியுமிடத்தில் இதன் சராசரி கடல் மட்ட உயரம் 412 அடியாகும். இதன் மூலம் 15,743 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இவ்வாய்க்கால் தொடங்குமிடத்திலிருந்து முடியுமிடம் வரையில் 36 மைல்கள்தானெனினும், இயற்கையாய் அமைந்த சிறுசரிவின் முழுப்பயனைப் பெறவேண்டியும் மிகுதியான நிலப்பகுதிகள் பாசனம் பெறவேண்டியும், இதனை வளைவுகளுடன் 56 மைல்கள் ஓடுமாறு அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாய்க்கால் வளைந்து வளைந்து உள்ளதால் கோண வாய்க்கால் எனவும் அழைக்கப்படுகிறது.

ஈரோடு- காவிரி அருகில் ஓடும் காளிங்கராயன் வாய்க்கால்


700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இவ்வாய்க்கால் சாயக்கழிவு தோல்கழிவு மாசுக்களால் பாதிப்படைந்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காளிங்கராயன்_கால்வாய்&oldid=3239805" இலிருந்து மீள்விக்கப்பட்டது