காளிங்கராயன்

காளிங்கராயரின் இயற்பெயர் லிங்கைய கவுண்டர். இவர் கிபி 1240 ம் ஆண்டு பிறந்தார். இவர் [கொங்கு வேளாளர் கவுண்டர்] இனத்தை சேர்ந்த . பொள்ளாச்சி அருகே ஜமீன் ஊத்துக்குளி அரண்மனையில் வாரிசுகள் வாழ்ந்து வருகின்றனர். [1].

காளிங்கராயன் பட்டம் பெற்ற வரலாறு தொகு

20 வயது ஆனதும் அப்பொழுது கொங்கு பகுதியை ஆண்ட பாண்டிய மன்னன் வீரபாண்டியன் (1265-1280) படையில் சேர்ந்தார். தனது செயலாற்றலால் விரைவில் தலைமைப்பதவியை அடைந்தார். பாண்டிய மன்னன் இவரை உத்திர மந்திரி (தலைமை அமைச்சர்) ஆக்கினார். மேலும் காளிங்கராயன் என்ற பட்டத்தையும் வழங்கினார். இவரின் உண்மைப்பெயரான லிங்கைய கவுண்டர் என்பதால் அல்லாமல் காளிங்கராயர் என்ற பெயராலயே இவர் அறியப்படுகிறார். இவரின் சிறப்பை இன்றளவும் சொல்லுவது இவரின் பணிகளே.

காளிங்கராயன் கால்வாய் தொகு

பவானியையும் நொய்யலையும் இணைத்து இவர் வெட்டிய பாசன கால்வாய் காளிங்கராயன் வாய்க்கால் என அறியப்படுகிறது. இவ்வாய்காலை அமராவதி ஆற்றுடன் இணைக்க இவர் முடிவெடுத்து அத்திபாளையம் அருகே அணை கட்டினார். எனினும் அவரின் இத்திட்டம் நிறைவேறவில்லை. அத்திபாளையத்தில் உள்ள அணை ஓட்டை அணை என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது[2].

வாரிசுகள் தொகு

இவர் கால்வாய் வெட்டிய பின்பு அதை தன் சொந்த பயன்பாட்டிற்கு தான் வெட்டினார் என ஊர் மக்கள் பேச தொடங்கினர். அதனால் இவர் தன்னுடைய குடும்பம், சில உறவினர்கள் மற்றும் பங்காளிகளுடன் ஊத்துக்குளி பகுதியில் குடியேறினார். பிறகு அங்கே கோட்டை கட்டி ஆட்சி செய்தார். இவருக்கு பிறகு இவரின் வாரிசுகள் 40 தலைமுறையாக ஊத்துக்குளி நாட்டை (பாளையத்தை) ஆட்சி செய்து வருகின்றனர்.

மேலும் காண்க தொகு

  1. உதயப்பெருமாள்
  2. தீரன் சின்னமலை
  3. சடையப்ப வள்ளல்
  4. முத்தையா முரளிதரன்
  5. தொண்டைமான்

மேற்கோள்கள் தொகு

  1. "காளிங்கராயன் பற்றி புலவர் இராசு". Archived from the original on 2013-09-02. பார்க்கப்பட்ட நாள் 2012-01-12.
  2. "காளிங்கராயன் வாய்க்கால் பற்றி புலவர் இராசு". Archived from the original on 2010-08-19. பார்க்கப்பட்ட நாள் 2009-02-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காளிங்கராயன்&oldid=3870643" இலிருந்து மீள்விக்கப்பட்டது