கைலி

(லுங்கி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கைலி (இலுங்கி அல்லது சாரம்) தெற்காசிய, தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் யெமன், ஓமான் போன்ற அரபு நாடுகளிலும் சோமாலியா, எத்தியோப்பியா போன்ற நாடுகளிலுமுள்ள ஆண்கள் இடுப்பில் அணிந்து கொள்ளும் ஆடை ஆகும். சில இடங்களில் பெண்களும் அணிவதுண்டு. எத்தியோப்பியா நாட்டில் அபார் எனும் பகுதியை சேர்ந்த ஆண்கள் பெரும்பாலும் இவ்வகை ஆடைகளை அணிகிறார்கள். இது வண்ணமயமான ஆடையாகும். வெப்பமான நிலப்பகுதிகளில் காற்சட்டையை விட கைலி இதமானதாக உணரப்படுகிறது.

லுங்கி அணிந்த ஒருவர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைலி&oldid=3893743" இலிருந்து மீள்விக்கப்பட்டது