வில்லரசம்பட்டி
வில்லரசம்பட்டி (ஆங்கில மொழி: Villarasampatti) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]
வில்லரசம்பட்டி Villarasampatti | |
---|---|
ஆள்கூறுகள்: 11°20′37″N 77°41′09″E / 11.343600°N 77.685700°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | ஈரோடு மாவட்டம் |
ஏற்றம் | 219 m (719 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 638 107 |
அருகிலுள்ள ஊர்கள் | ஈரோடு, நசியனூர், திண்டல், வீரப்பன்சத்திரம் மற்றும் பெரியசேமூர் |
மாநகராட்சி | ஈரோடு மாநகராட்சி |
மாவட்ட ஆட்சித் தலைவர் | கிருஷ்ணன் உண்ணி |
மக்களவைத் தொகுதி | ஈரோடு மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவை உறுப்பினர் | அ. கணேசமூர்த்தி |
சட்டமன்ற உறுப்பினர் | சு. முத்துசாமி |
இணையதளம் | https://erode.nic.in |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 219 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள வில்லரசம்பட்டி பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11°20′37″N 77°41′09″E / 11.343600°N 77.685700°E (அதாவது, 11°20'37.0"N, 77°41'08.5"E) ஆகும். ஈரோடு, நசியனூர், திண்டல், வீரப்பன்சத்திரம் மற்றும் பெரியசேமூர் ஆகியவை வில்லரசம்பட்டி பகுதியை ஒட்டியுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.
ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வெ.ரா. திருமகன் சமீபத்தில் மரணமடைந்ததால், 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் நாள் அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, அ.தி.மு.க. கட்சியின் வேட்பாளர் குறித்து ஆலோசிக்க மற்றும் அதற்கான கட்சிப் பணிகள் செயலாற்ற, அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் வில்லரசம்பட்டியிலுள்ள ஓர் இடத்தில் நடைபெற்றது.[2][3] இதில் 111 உறுப்பினர்கள் அடங்கிய தேர்தல் பணிக்குழு ஏற்படுத்தப்பட்டது.[4]
வில்லரசம்பட்டி பெருமாள் கோயில்,[5] வில்லரசம்பட்டி மாகாளியம்மன் கோயில்,[6] வில்லரசம்பட்டி பத்ரகாளியம்மன் கோயில்[7] மற்றும் மாரியம்மன் கோயில்[8] ஆகியவை இங்குள்ள முக்கியமான கோயில்களாகும்.
வில்லரசம்பட்டி பகுதியானது, ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் சு. முத்துசாமி ஆவார்.[9] மேலும் இப்பகுதி, ஈரோடு மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக அ. கணேசமூர்த்தி, 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Tin̲amaṇi vairavil̲ā āṇṭu malar, 1934-1994. Intiyan̲ Ekspiras. 1994.
- ↑ Maalaimalar (2023-01-20). "ஈரோடு இடைத்தேர்தல்- அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-01-31.
- ↑ "8 மணி நேரம் நடந்த தேர்தல் பணிக்குழு கூட்டம்: இன்றும் எதிர்கட்சி தலைவர் தலைமையில் ஆலோசனை - Dinamalar Tamil News". Dinamalar. 2023-01-27. பார்க்கப்பட்ட நாள் 2023-01-31.
- ↑ "EPS forms 111-member panel for Erode East bypoll". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2023-01-31.
- ↑ "Arulmigu Perumal Temple, Villarasampatti - 638107, Erode District [TM012114].,Perumal". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-01-31.
- ↑ "Arulmigu Mahaliamman Temple, Villarasampatti - 638107, Erode District [TM012042].,Arulmigu Mahaliamman". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-01-31.
- ↑ "Arulmigu Pathrakaliamman Temple, Villarasampatti - 638107, Erode District [TM012041].,Pathrakali". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-01-31.
- ↑ "Arulmigu Mariamman Temple, Villarasampatti - 638107, Erode District [TM011976].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-01-31.
- ↑ "Erode (West) Election Result 2021 Live Updates: Muthusamy S of DMK Wins". News18 (in ஆங்கிலம்). 2021-05-02. பார்க்கப்பட்ட நாள் 2023-01-31.