செஞ்சி நாயக்கர்கள்

செஞ்சி நாயக்கர்கள் (Nayaks of Gingee) தமிழ்நாட்டின் செஞ்சி நகரத்தை தலைநகராகக் கொண்டு கி பி 1508 முதல் 1649 முடிய ஆட்சி செய்தனர். முன்னர் விஜய நகரப் பேரரசின் செஞ்சி, தஞ்சாவூர் மற்றும் மதுரை போன்ற பகுதிகளின் ஆளுநர்களாக விளங்கினர். துவக்கத்தில் வடக்கே நெல்லூர் முதல் கொள்ளிடம் ஆறுவரையிலான பகுதிகள் செஞ்சி நாயக்கர்களின் ஆட்சியில் இருந்தது. பின்னர் விஜய நகர பேர்ரசின் ஆரவீடு மரபினர் வேலூரை தலைமை இடமாக கொண்டு ஆளத் தொடங்கியதும். நெஞ்சி நாயக்கரின் ஆட்சி எல்லையானது வாட்டகே பாலாறு, தெற்கே கொள்ளிடம் ஆறு இவற்றுக்கு இடைபட்ட பகுதியில் சுருங்கியது. விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் மதுரை நாயக்கர்கள் மற்றும் தஞ்சை நாயக்கர்கள் தன்னாட்சியுடன் ஆட்சி புரிந்ததைப் போன்று செஞ்சி நாயக்கர் கிருஷ்ணப்ப நாயக்கர் 1509 முதல் தன்னாட்சியுடன் ஆட்சி செய்து வந்தார். பின்னர் இவரது வழித்தோன்றல்கள் செஞ்சியை கி பி 1649-இல் செஞ்சியை பிஜப்பூர் சுல்தான் கைப்பற்றும் வரை ஆண்டனர்.

செஞ்சி நாயக்கர்கள்

 
[[விஜயநகரப் பேரரசு|]]
1509–1649
 
[[பிரித்தானிய இந்தியா|]]
தலைநகரம் செஞ்சி
மொழி(கள்) தமிழ், தெலுங்கு
அரசாங்கம் முடியாட்சி
வரலாறு
 -  உருவாக்கம் 1509
 -  குலைவு 1649
Warning: Value not specified for "common_name"

செஞ்சி நாயக்கர்கள்தொகு

 1. கிருஷ்ணப்ப நாயக்கர் (1509–1521)[1]
 2. சென்னப்ப நாயக்கர்
 3. கங்கம நாயக்கர்
 4. வேங்கட கிருஷ்ணப்ப நாயக்கர்
 5. வேங்கடராமா பூபால நாயக்கர்
 6. திரியம்பக கிருஷ்ணப்ப நாயக்கர்
 7. வரதப்ப நாயக்கர்
 8. இராமலிங்க நாயனி வாரு
 9. வேங்கட பெருமாள் நாயுடு
 10. பெரிய ராமபத்திர நாயுடு
 11. இராமகிருஷ்ணப்ப நாயுடு (- 1649)

ஆட்சிப் பகுதிகள்தொகு

வட தமிழ்நாட்டின் தற்போதைய செஞ்சி வேலூர், சென்னை, திருவண்ணாமலை, புதுச்சேரி, நெல்லூர், சித்தூர், சந்திரகிரி ஆகிய பகுதிகள் செஞ்சி நாயங்காரக்களின் ஆளுகையில் இருந்தது. 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வேலூர்க் கோட்டையை இழந்தனர்.

இதனையும் காண்கதொகு

மேற்கோளகள்தொகு

ஆதார நூற்பட்டியல்தொகு

மேலும் படிக்கதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செஞ்சி_நாயக்கர்கள்&oldid=3422820" இருந்து மீள்விக்கப்பட்டது