மதுரை நாயக்கர்
மதுரை நாயக்கர்கள், (Madurai Nayak) மதுரையையும், அதைச் சார்ந்த பகுதிகளையும் 1529 தொடக்கம், 1736 வரை ஆண்டார்கள்.[1][2] தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட பலிஜா[3] இனக்குழுவைச் சேர்ந்த இவர்கள் 14ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு உருவானபோது அரசப் பிரதிநிதிகளாக இருந்தனர். விஜயநகரப் பேரரசு பலமிழந்தபோது, தங்கள் ஆட்சிப்பகுதிகளில் தங்களைப் பலப்படுத்திக்கொண்டு பேரரசிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர். நிர்வாக முறைகளில் புதுமைகளைப் புகுத்தியதன் மூலம் மதுரை நாயக்கர்கள் மக்களோடு தங்கள் தொடர்புகளை வலுப்படுத்திக் கொண்டனர். இவற்றுள் தங்கள் நாட்டை 72 பாளையங்களாகப் பிரித்து, நிர்வாகம் மேற்கொண்டது முக்கியமானது.
மதுரை நாயக்க மன்னர்கள் | |
---|---|
1529–1736 | |
![]() தோராயமாக சுமார் 1570இல், மதுரை நாயக்க இராச்சியம் | |
தலைநகரம் | மதுரை (1529–1616) திருச்சிராப்பள்ளி (1716–1736) |
பேசப்படும் மொழிகள் | தெலுங்கு, தமிழ் |
அரசாங்கம் | ஆளுநர்கள், பின்னர் முடியாட்சி |
வரலாறு | |
• தொடக்கம் | 1529 |
• முடிவு | 1736 |
முன்ஆட்சி
|
பின்ஆட்சி
|
பிரிவு
|
மதுரை நாயக்கர் தோற்றம் தொகு
விஜயநகரத்துப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் தளபதி, மண்டலாதிபதி போன்ற பொறுப்புக்களை வகித்தவர் நாகம நாயக்கர். இவருடைய மகன் விசுவநாத நாயக்கர். கிருஷ்ண தேவராயரிடம் பணிக்குச் சேர்ந்த விசுவநாத நாயக்கர், பேரரசரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானார். அக்காலத்தில் விஜயநகரப் பேரரசின் கீழிருந்த பாண்டிய மண்டலத்தில் குழப்பங்கள் தலைதூக்கின. அதனை அடக்குவதற்காக விசுவநாத நாயக்கர் படையுடன் அனுப்பிவைக்கப்பட்டார் . எடுத்த பொறுப்பைச் செவ்வனே முடித்த விசுவநாத நாயக்கர், மதுரை மண்டலத்தின் நிர்வாகியாக அமர்த்தப்பட்டார். இவருடைய பரம்பரையினரே மதுரை நாயக்கர்கள் என அழைக்கப்பட்டவர்கள்.
மதுரை நாயக்கர் வம்சம் தொகு
மதுரை நாயக்கர்கள் | |
---|---|
தமிழக வரலாற்றின் ஒரு பகுதி | |
மதுரை நாயக்க ஆட்சியாளர்கள் | |
விசுவநாத நாயக்கர் | 1529–1563 |
முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் | 1563–1573 |
கூட்டு ஆட்சியாளர்கள் குழு I | 1573–1595 |
கூட்டு ஆட்சியாளர்கள் குழு II | 1595–1602 |
முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் | 1602–1609 |
முத்து வீரப்ப நாயக்கர் | 1609–1623 |
திருமலை நாயக்கர் | 1623–1659 |
முத்து அழகாத்ரி நாயக்கர் | 1659–1662 |
சொக்கநாத நாயக்கர் | 1662–1682 |
அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் | 1682–1689 |
இராணி மங்கம்மாள்‡ | 1689–1704 |
விஜயரங்க சொக்கநாத நாயக்கர் | 1704–1731 |
இராணி மீனாட்சி‡ | 1731–1736 |
‡ இராணியை குறிக்கும் | |
தலைநகரம் | |
மதுரை | 1529–1616 |
திருச்சிராப்பள்ளி | 1616–1634 |
மதுரை | 1634–1665 |
திருச்சிராப்பள்ளி | 1665–1736 |
முக்கிய கோட்டைகள் | |
மதுரை 72 கோட்டைகள் | |
திருச்சி மலைக் கோட்டை | |
திண்டுக்கல் கோட்டை | |
திருநெல்வேலி கோட்டை | |
மற்ற இராணுவ கோட்டைகள் | |
நாமக்கல் கோட்டை | |
சங்ககிரி மலைக்கோட்டை | |
ஆத்தூர்க் கோட்டை | |
அரண்மனைகள் | |
திருமலை நாயக்கர் அரண்மனை, மதுரை | |
சொக்கநாத நாயக்கர் அரண்மனை, திருச்சிராப்பள்ளி | |
தமுக்கம் அரண்மனை, மதுரை | |
முதல் ஐந்து மதுரை நாயக்கர்களும் விஜயநகரப்பேரரசுக்கு விசுவாசமாக அதற்கு அடங்கியே இருந்தார்கள். ஆறாவதாக 1609 தொடக்கம் 1623 வரை மதுரையை ஆண்ட நாயக்கரான முத்துவீரப்ப நாயக்கர், அக்காலத்தில் வலுவிழந்திருந்த விஜயநகரத்துக்குத் திறை கொடுப்பதை நிறுத்திக்கொண்டார். இவருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த திருமலை நாயக்கர் காலம் மதுரை நாயக்கர்களின் பொற்காலம் எனலாம். திருமலை நாயக்கருக்குப் பின்னர் இவ்வம்சத்தைச் சேர்ந்த மேலும் அறுவர் ஆட்சி செய்தனர். இவர்களுள் இராணி மங்கம்மாள் குறிப்பிடத்தக்கவர். இறுதியாக ஆட்சிப்பொறுப்பை ஏற்றவர் இராணி மீனாட்சி. 1732 இல் நாயக்க மன்னர் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் வாரிசு இல்லாமல் இறந்தபோது அவனது மனைவி மீனாட்சிக்கு ஆட்சிப் பொறுப்புக் கிடைத்தது. எனினும் அரசுரிமைப் போட்டியில் அவருக்கு உதவி செய்யும் சாக்கில் தலையிட்ட கர்நாடக நவாப்பின் மருமகனான சாந்தாசாகிப் அவரை சிறைப்பிடித்து மதுரை அரசையும் கைக்கொண்டார். இதன் மூலம் மதுரை நாயக்கர் வம்சம் ஒரு முடிவுக்கு வந்தது.[4]
மதுரை நாயக்கர்களின் பட்டியல் தொகு
- விசுவநாத நாயக்கர் (1529 - 1564)
- முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (1564 - 1572)
- வீரப்ப நாயக்கர் (1572 - 1595)
- இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (1595 - 1601)
- முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் (1601 - 1609 )
- முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் (1609 - 1623)
- திருமலை நாயக்கர் (1623 - 1659)
- இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர் (1659 - 1659)
- சொக்கநாத நாயக்கர் (1659 - 1682)
- அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் (1682 - 1689)
- இராணி மங்கம்மாள் (பகர ஆளுனர்) (1689 - 1704)
- விஜயரங்க சொக்கநாத நாயக்கர் (1704 - 1732)
- இராணி மீனாட்சி (1732 - 1736)
இவற்றையும் பார்க்கவும் தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ தமிழகத்தில் நாயக்கர் அரசு
- ↑ மூன்று நாயக்க அரசுகள்
- ↑
- Konduri Sarojini Devi (1990) (in en). Religion in Vijayanagara Empire. Sterling Publishers. பக். 100. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-207-1167-9. https://books.google.com/books?id=7qnXAAAAMAAJ. "According to the Kaifiyat of the Karnata Kotikam Kings, "Acyutadeva Maharaya formally crowned Visvanatha Nayadu of the Garikepati family of the Balija caste as the King of Pandya country yielding a revenue of 2 and 1/2 crores of varahas; and he presented him with golden idols of Durga, Lakshmi and Lakshminarayana and sent him with ministers, councillors and troops to the South.""
- Eugene F. Irschick (1969) (in en). Politics and Social Conflict in South India. University of California Press. பக். 8. https://books.google.com/books?id=R0K98afLnhAC. "The successors of the Vijayanagar empire, the Nayaks of Madura and Tanjore, were Balija Naidus."
- Sheldon Pollock (2003) (in en). Literary Cultures in History: Reconstructions from South Asia. University of California Press. பக். 413. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-520-22821-4. https://books.google.co.in/books?id=ak9csfpY2WoC. ".... in the seventeenth century, when warriors/traders from the Balija caste acquired kingship of the southern kingdoms of Madurai and Tanjavur."
- David Dean Shulman (2020) (in en). Classical Telugu Poetry. University of California Press. பக். 57. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-520-34452-5. https://books.google.com/books?id=SFXVDwAAQBAJ. "..... in the Tamil country, where Telugu Balija families had established local Nāyaka states (in Senji, Tanjavur, Madurai, and elsewhere) in the course of the sixteenth century."
- Nardini, Giulia (2017) (in en). Translating Catechisms, Translating Cultures: The Expansion of Catholicism in the Early Modern World. Brill. பக். 229. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-04-35306-0. https://books.google.co.in/books?id=WfU4DwAAQBAJ. "Madurai was a prosperous city ruled by Nāyaka kings who were Telugu warriors with Balija cultivators and merchant-caste affiliations."
- Pai, Gita V. (2023) (in en). Architecture of Sovereignty: Stone Bodies, Colonial Gazes, and Living Gods in South India. Cambridge University Press. பக். 36, 51. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-009-15015-6. https://books.google.com/books?id=m6y0EAAAQBAJ. "Madurai rulers were of likely Balija heritage, merchant-warriors proud of their śūdra status, who came from the relatively less-stratified arid zones of the Andhra region"
- (in en) Itihas. 33. Director of State Archives, Government of Andhra Pradesh.. 2007. பக். 145. https://books.google.com/books?id=9nfP89eJuycC. "It is told that the Nayak Kings of Madurai and Tanjore were Balijas , who had marital relations among themselves and with the Vijaya Nagara rulers"
- A. Satyanarayana, Mukkamala Radhakrishna Sarma (1996) (in en). Castes, Communities, and Culture in Andhra Desa, 17th & 18th Centuries, A.D. Osmania University. பக். 145. https://books.google.co.in/books?id=sbm_Oyo8XFMC. "After the fall of the dynasty several Balija Nayudu chieftains rose into prominance . Tanjore and Madura kingdoms were the most important of such new kingdoms ."
- Velcheru Narayana Rao, David Dean Shulman Sanjay Subrahmanyam (1992) (in en). Symbols of Substance Court and State in Nāyaka Period Tamilnadu. Oxford University Press. பக். 74. https://books.google.co.in/books?id=znFuAAAAMAAJ. "Madurai Nayaka kings themselves as Balija in origin"
- K. A. Nilakanta Sastri (1946) (in en). Further Sources of Vijayanagara History. University of Madras. பக். 176. https://archive.org/details/FurtherSourcesOfVijayanagaraHistory/page/n2/mode/1up. "Moreover, Acyutadeva Maharaya formally crowned Viswanatha Nayadu of the Garikepati family of the Balija caste as the king of Pandya country yielding a revenue of 2 and 1/2 crores of varahas; and he presented him the golden idols of Durga, Laksmi and Lakshmi-Narayana and sent him with ministers, councillors and troops to the south. Visvanatha Nayudu reached the city of Madhura, from which he began to govern the country entrusted to his care. - taken from the Kaifiyat of Karnata-Kotikam Kings, LR8, pp.319-22"
- ↑ சிற்றரசுகள்
உசாத்துணை நூல்கள் தொகு
- தமிழ் இணையப் பல்கலைக்கழகம்
- வரலாற்று நூல்கள்[தொடர்பிழந்த இணைப்பு]
- ராணி மங்கம்மாள் தீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்
- மதுரை நாயக்கர் வரலாறு அ.கி.பரந்தாமனார் எம்.ஏ
- வே. தி செல்லம், தமிழக வரலாறும் பண்பாடும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை 1995 (மறுபதிப்பு 2002)
- மதுரை நாயக்கர் வரலாறு-காணொலி
- நாயக்கர்கள் காலம்- சுப. வீரபாண்டியன்-காணொளி
- 1:44 / 9:Thirumalai Nayakkar Palace History / Madurai History in Tamil-காணொலி