முசுனூரி நாயக்கர்கள்
முசுனூரி நாயக்கர்கள் (Musunuri Nayaks) என்பவர்கள் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தென்னிந்திய போராளி மன்னர்களாவர். இவர்கள் செயல்பட்ட பகுதி தெலங்காணா ஆகும்.
இவர்கள் தில்லி சுல்தான்கள் காகதீயர்களை வெற்றி கொண்டு அவர்களது நாட்டைக் கைப்பற்றிய நிலையில், தில்லி சுல்தான்களிடம் இருந்து 1326 இல் ஆந்திராவை மீட்ட வீரத் தலைவர்களாவர்.[1]
துருக்கியரை எதிர்த்து
தொகுதில்லி சுல்தான்களிடம் காக்கத்தியர்களின் வீழ்ச்சிக்குப்பின் அவர்களது நாட்டைத் தங்களுடைய நாட்டுடன் இணைத்துக் கொண்ட தில்லி சுல்தான்கள் வாரங்கல்லுக்கு "சுல்தான்பூர்" என புதிய பெயரைச் சூட்டினர். இப்பகுதிக்கு ஆளுநராக குறுகிய காலம் இருந்த உலு கான் தில்லி சுல்தான் முகமது பின் துக்லக்கால் 1324 இல் தில்லிக்கு திரும்ப அழைக்கப்பட்டார். காக்கதிய படையின் முன்னாள் தளபதியான, நாகையா கன்ன விப்ரடு என்பவர் மாலிக் மக்புல் என்ற புதிய பெயரோடு இப்பகுதியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[2] எனினும், துக்லக்கால் வெற்றி கொள்ளப்பட்ட காக்கதிய பேரரசின் உள்ளூர் தலைவர்களால் அதிகாரம் மீண்டும் கைப்பற்றப்பட்டது.[3]
1330 இல், முசுனூரி புரோலயா நாயக்கரால் பித்தாபுரம் அருகே வெளியிடப்பட்ட விலாசா மானிய செப்பேட்டில் துருக்கியரால் தெலுங்கு நாட்டில் ஏற்பட்ட பேரழிவுகளைப் பற்றிக் குறிப்பிட்டு சட்ட ஒழுங்கை நிலைநிறுத்தத் தாமே தகுதியானவர் என்பதையும் வெளியிட்டுள்ளார்.[2] இவரது வாரிசான, காப்பையா நாயக்கர் (ஆட்சிக் காலம் 1333-1368), துருக்கியருக்கு எதிராக ஒரு எழுச்சியை ஏற்படுத்தி, அவர்களை வாரங்கல்லை விட்டு 1336 இல் வெளியேற்றினர்.
காப்பபைய நாயக்கர் முழுத் தெலங்கானாவையும் 1368 வரை ஆட்சி செய்தார். அவரது மறைவுக்குப் பின் அவருக்கு துணையாக இருந்த நாயக்கர்கள் தங்கள் சொந்த நகரங்களை நோக்கி கலைந்து சென்றதாகக் கூறப்படுகிறது.[3] துருக்கியருக்கு எதிராக இருந்தபோதும், காப்பைய நாயக்கர் தொடர்ந்து துருக்கியரால் வாராங்கல்லில் கட்டப்பட்ட குஷ் மகாலை பயன்படுத்தியதோடல்லாமல் "ஆந்திர நாட்டின் சுல்தான்" என்ற பாரசீகப் பட்டத்தையும் ஏற்றுக் கொண்டிருந்தனர். 1361 இல், இவர் செய்து கொண்ட ஒரு உடன்படிக்கையின் பகுதியாக பாமினி சுல்தான் முகமது ஷாவுக்கு ஒரு சிம்மாசனத்தைப் பரிசாக அளித்தானர்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ After the Kakatiyas, V. Yashoda Devi, 1975, Andhra Pradesh Sahitya Academy, Hyderabad
- ↑ Talbot 2001, p. 178; Eaton 2005, pp. 26-27; Chattopadhyaya 1998, pp. 57-59
- ↑ Talbot 2001, ப. 178.
- ↑ Eaton 2005, ப. 50.
மேலும் படிக்க
தொகு- After the Kakatiyas, V. Yashoda Devi, Andhra Pradesh Sahitya Academy, Hyderabad, 1975.
- A history of South India from prehistoric times to the fall of Vijayanagar, K. A. Nilakanta Sastri, Oxford Univ. Press, 1955.
- The Early Muslim expansion in South India, N. Ventakaramanayya, 1942.
- Subrahmanyam, Sanjay (1998), "Hearing Voices: Vignettes of Early Modernity in South Asia, 1400–1750", Daedalus, 127 (3): 75–104, JSTOR 20027508, (subscription required (help))