பலிஜா
பலிஜா (Balija) எனப்படுவோர் தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் வாழும் ஒரு வணிக சமூகமாகும்.[1] இவர்களுள் பெரும்பாலானோரின் தாய்மொழி தெலுங்கு மொழியாகும். கன்னடம் பேசும் பலிஜா சமூகத்தினர் கொங்கு நாட்டில் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். நாயுடு, நாயக்கர், ரெட்டி, செட்டியார் மற்றும் ராவ் இவர்களது பட்டங்களாகும்.
![]() ![]() | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் | |
மொழி(கள்) | |
தெலுங்கு, தமிழ், கன்னடம் | |
சமயங்கள் | |
![]() | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
கவரா, கொல்லா, கம்மவார் |

சொற்பிறப்பு தொகு
பலிஜா என்றால் யாகம் செய்த பொழுது தோன்றியவர்கள் என்று பொருள். அதாவது சமஸ்கிருத வார்த்தை பாலி - யாகத்தையும், ஜா - பிறந்ததையும் கொண்டு பெறப்படுகிறது.[2] பலிஜா என்ற சொல்லின் தமிழ் வடிவமே கவரா என்பதாகும். கவரா மற்றும் பலிஜா இன மக்களின் பழக்கவழக்கங்களும் கலாசார பண்பாடுகளும் ஒத்து இருக்கின்றனர்.[3]
பலிஜா பிரிவு உருவாக்கம் தொகு
- விஜயநகர பேரரசர், கிருஷ்ணதேவராயர் காலத்தில் 'பலிஜா' எனும் பட்டத்தின் கீழ் இடங்கை சாதிகளான கவரா, கொல்லா மற்றும் பலரை திரட்டினார்கள்.[4] அரசு ஆவணங்களின் படி பலிஜா என்பது வடுகத் தெலுகினத்தின் சிலசாதிகளை ஒன்றிணைக்கும் குடைப்பிரிவாக கருதப்படுகின்றது.
- மதராஸ் மாகாண கெசீட்டர்ஸ் (Madras district Gazeteers) என்னும் அரசு ஆவணத்தின்படி :-
பலிஜாக்கள் உண்மையான தொழில்-சாதிகளைக் குறிக்காத மற்றும் தொழில்சார் குறியீடு என்று கூறப்படுகிறது.
கொல்ல பலிஜாக்கள் பொதுவாக கொல்லா எனப்படுகின்றனர். இவர்கள் தங்களை "நாயுடு" என அழைக்கின்றனர்.
கம்ம பலிஜாக்கள் கம்மவர்களுடன் அடையாளம் காணப்படுகின்றனர்.[5]
பலிஜாவின் பிரிவுகள் தொகு
- கவர பலிஜவாரு
- கம்ம பலிஜவாரு
- கொல்ல பலிஜவாரு
- லிங்க பலிஜவாரு
- காப்பு பலிஜவாரு
- ஷெட்டி பலிஜவாரு
- பெரிக பலிஜவாரு
- முசுகு பலிஜவாரு
- தாச பலிஜவாரு
- சித்திரால பலிஜவாரு
- காண்டி பலிஜவாரு
- ஒப்பனக்கார பலிஜவாரு
- பத்தி பலிஜவாரு
- கன்னடி பலிஜவாரு
- உப்பு பலிஜவாரு
- ஜனப பலிஜவாரு
- வாட பலிஜவாரு
- கோயிலடி பலிஜவாரு
- சூரிய பலிஜவாரு
- பூந்தமல்லி பலிஜவாரு[6]
அரச வம்சங்கள் தொகு
விஜயநகர மன்னர்களால் பேரரசுக்கு உட்பட்ட மாகாணங்களை மேற்பார்வையிட அரசுப் பிரதிநிதிகளை நியமித்தனர். ஆயினும் தலைக்கோட்டை போருக்கு பின்னர் விஜயநகரப் பேரரசு வீழ்ச்சி அடைத்தது. விஜயநகர மன்னர்களால் நியமிக்கப்பட்ட அரசுப் பிரதிநிதிகள் தாங்கள் மேற்பார்வையிட்ட மாகாணங்களில் சுதந்திர அரசுகளை நிறுவிக் கொண்டனர். அவ்வாறு பலிஜா இனக்குழுவைச் சேர்ந்தவர்களால் நிறுவப்பட்ட அரச வம்சங்கள் பின்வருவன. [7]
- மதுரை நாயக்கர்[8][9]
- தஞ்சை நாயக்கர்கள்[8]
- செஞ்சி நாயக்கர்கள்[10]
- கண்டி நாயக்கர்.[11]
- பெனுகொண்டா நாயக்கர்கள்[12]
குறிப்பிடத்தக்க நபர்கள் தொகு
அரசர்கள் தொகு
- விசுவநாத நாயக்கர் - மதுரை நாயக்கர் அரச வம்சத்தை நிறுவியவர்.[13]
- சேவப்ப நாயக்கர் - தஞ்சை நாயக்கர்கள் அரச வம்சத்தை நிறுவியவர்.[14]
- துபாகி கிருஷ்ணப்ப நாயக்கர் - செஞ்சி நாயக்கர்கள் அரச வம்சத்தை நிறுவியவர்.[10]
- ஸ்ரீ விஜய ராஜசிங்கன் - கண்டி நாயக்கர் அரச வம்சத்தை நிறுவியவர்.[11]
அரசியல்வாதிகள் தொகு
- ஈ. வெ. இராமசாமி - சமூக சீர்திருத்தவாதி[15]
- எ. வ. வேலு - தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர்[16]
- பி. கே. சேகர் பாபு - தமிழக அறநிலையத்துறை அமைச்சர்
- இ. மதுசூதனன் - முன்னாள் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்
- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் - முன்னாள் ஒன்றிய ஜவுளிதுறை இணை அமைச்சர்[17]
- கே. வெங்கடசாமி நாயுடு - முன்னாள் அறநிலையத்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
- கு. பிச்சாண்டி - முன்னாள் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர்
- ஈ. வெ. கி. சம்பத் - முன்னாள் நாமக்கல் மக்களவை உறுப்பினர்
- வரதராஜுலு நாயுடு - விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் நிறுவனர்.[18]
குறிப்புகள் தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ Jakka Parthasarathy, தொகுப்பாசிரியர் (1984). Rural Population in Indian Urban Setting. B.R. Publishing Corporation. பக். 52. https://books.google.co.in/books?id=KLwiAAAAMAAJ. "Balija are the chief Telugu trading caste , scattered ! throughout Andhra Pradesh , Karnataka and Tamil Nadu"
- ↑ Venkatesa Iyengar, தொகுப்பாசிரியர் (1932). The Mysore Tribes and Castes. 2. Mittal Publications. பக். 100. https://books.google.co.in/books?id=zseCqGFRpyQC.
- ↑
- Kanakalatha Mukund (1999). The Trading World of the Tamil Merchant: Evolution of Merchant Capitalism in the Coromandel. Orient Blackswan. பக். 46. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-250-1661-8. https://books.google.com/books?id=tjXdDYChdGsC&pg=PA46.
- Brimnes, Niels (1999) (in en). Constructing the Colonial Encounter: Right and Left Hand Castes in Early Colonial South India. Psychology Press. பக். 106. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7007-1106-2. https://books.google.com/books?id=HdSABP70H9sC&q=balija. "The Kavarais were Tamilized Balija Chettis of Telugu origin, returned in the census as 'Wadugas' or 'Northerners'."
- (in en) Census of India, 1901: Madras (3 v.). India Census Commissioner. 1902. பக். 161. https://books.google.com/books?id=ya4JAAAAIAAJ&dq=The+main+body+of+Balija+is+called+Telaga&pg=RA1-PA161. "Kavarai - A Tamil synonym for Balija; probably a corrupt form of Gavara."
- Mukund, Kanakalatha (1999) (in en). The Trading World of the Tamil Merchant: Evolution of Merchant Capitalism in the Coromandel. Orient Blackswan. பக். 43, 183, 185. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-250-1661-8. https://books.google.com/books?id=tjXdDYChdGsC&q=balija. "Kavarai (the Tamil word for Balija merchants)"
- ↑ Velcheru Narayana Rao, David Dean Shulman, Sanjay Subrahmanyam, தொகுப்பாசிரியர் (1992). Symbols of Substance Court and State in Nāyaka Period Tamilnadu. Oxford University Press. பக். 74. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-563021-3. https://books.google.com/books?id=znFuAAAAMAAJ. "These left- Sudra groups — often referred to by the cover-title 'Balija', but also including Gavaras, left-hand Gollas, and others - were first mobilized by Krishnadevara in the Vijayanagara heyday...These Balija fighters are not afraid of kings: some stories speak of their killing kings who interfered with their affairs"
- ↑ F.J. Richards, தொகுப்பாசிரியர் (1918). MADRAS DISTRICT GAZETTEERS. Superintendent, Government Press. பக். 179. https://books.google.co.in/books?id=CglmG0VjScYC. "Balijas are reported to be mere occupational terms which do not indicate true Sub-castes.The Golla Balijas are probably Gollas (q.v.)who called themselves Naidus; the Kamma Balijas are perhaps to be identified with the Kammas (q.v. p.166)"
- ↑ சேலம் பகடால நரசிம்மலு நாயுடு, தொகுப்பாசிரியர் (1905). பலிஜவாரு புராணம் அல்லது நாயுடுகாரு சமஸ்தான சரித்திரம். கோயமுத்தூர் கலாநிதி ஆபீசு, சென்னை. https://archive.org/stream/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZp3k0hy/TVA_BOK_0008226_%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D#page/n489/mode/2up.
- ↑ Daniel D'Attilio, தொகுப்பாசிரியர் (1995). The Last Vijayanagara Kings. University of Wisconsin--Madison. பக். 81. https://books.google.co.in/books?id=p9JOAAAAMAAJ. "......many of the Telugu migrant groups who settled in Tamil Nadu from the fourteenth to sixteenth centuries were led by Balija warriors . These Balijas and their descendants became local rulers under the auspices of Vijayanagara."
- ↑ 8.0 8.1
- G. S. Ghurye, தொகுப்பாசிரியர் (1969). Caste and Race in India. Popular Prakashan. பக். 106. https://books.google.com/books?id=nWkjsvf6_vsC. "The Nayak kings of Madura and Tanjore were Balijas , traders by caste"
- Eugene F. Irschick, தொகுப்பாசிரியர் (1969). Politics and Social Conflict in South India. University of California Press. பக். 8. https://books.google.com/books?id=R0K98afLnhAC. "The successors of the Vijayanagar empire, the Nayaks of Madura and Tanjore, were Balija Naidus"
- Sheldon Pollock, தொகுப்பாசிரியர் (2003). Literary Cultures in History: Reconstructions from South Asia. University of California Press. பக். 413. https://books.google.com/books?id=ak9csfpY2WoC. ".... in the seventeenth century, when warriors/traders from the Balija caste acquired kingship of the southern kingdoms of Madurai and Tanjavur."
- David Shulman, தொகுப்பாசிரியர் (2020). Classical Telugu Poetry. University of California Press. பக். 57. https://books.google.com/books?id=SFXVDwAAQBAJ. "..... in the Tamil country, where Telugu Balija families had established local Nāyaka states (in Senji, Tanjavur, Madurai, and elsewhere) in the course of the sixteenth century."
- Andhra Pradesh Archives, Andhra Pradesh State Archives & Research Institute, தொகுப்பாசிரியர் (2007). Itihas. 33. Director of State Archives, Government of Andhra Pradesh. பக். 145. https://books.google.com/books?id=9nfP89eJuycC. "....It is told that the Nayak Kings of Madurai and Tanjore were Balijas , who had marital relations among themselves and with the Vijaya Nagara rulers"
- Muzaffar Alam, தொகுப்பாசிரியர் (1998). The Mug̲h̲al State, 1526-1750. Oxford University Press. பக். 35. https://books.google.com/books?id=VQJuAAAAMAAJ. "As an arrangement, the Golconda practice in the first half of the seventeenth century was quite similar in crucial respects to what obtained further south, in the territories of the Chandragiri ruler, and the Nayaks of Senji, Tanjavur and Madurai. Here too revenue-farming was common, and the ruling families were closely allied to an important semi-commercial, semi-warrior caste group, the Balija Naidus."
- A. Satyanarayana, Mukkamala Radhakrishna Sarma, தொகுப்பாசிரியர் (1996). Castes, Communities, and Culture in Andhra Desa, 17th & 18th Centuries, A.D. Osmania University. பக். 145. https://books.google.com/books?id=sbm_Oyo8XFMC. "After the fall of the dynasty several Balija Nayudu chieftains rose into prominence. Tanjore and Madura kingdoms were the most important of such new kingdoms"
- ↑
- Antje Flüchter, Rouven Wirbser, தொகுப்பாசிரியர் (2017). Translating Catechisms, Translating Cultures: The Expansion of Catholicism in the Early Modern World. BRILL. பக். 229. https://books.google.com/books?id=WfU4DwAAQBAJ. "Madurai was a prosperous city ruled by Nāyaka kings who were Telugu warriors with Balija cultivators and merchant-caste affiliations"
- Gita V. Pai, தொகுப்பாசிரியர் (2003). Architecture of Sovereignty: Stone Bodies, Colonial Gazes, and Living Gods in South India. Cambridge University Press. பக். 36, 51. https://books.google.com/books?id=m6y0EAAAQBAJ. "Madurai rulers were of likely Balija heritage, merchant-warriors, who came from the relatively less-stratified arid zones of the Andhra region"
- Biplab Auddya, தொகுப்பாசிரியர் (2017). Research in Multidisciplinary Subjects. 6. The Hill Publication. பக். 18. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788196477660. https://books.google.com/books?id=XZnXEAAAQBAJ. "Many later rulers were also of different castes, such as the Madurai Nayaks, Balijas (traders) who ruled from 1559 to 1739"
- ↑ 10.0 10.1
- Subrahmanyam, Sanjay (2002). The Political Economy of Commerce: Southern India 1500–1650 (Reprinted ). Cambridge University Press. பக். 304. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780521892261. https://books.google.com/books?id=jgSMPKVh7f8C.
- Brennig, J. J. (2008). "Chief Merchants and the European Enclaves of Seventeenth-Century Coromandel". Modern Asian Studies 11 (3): 321–340. doi:10.1017/S0026749X00014177.
- ↑ 11.0 11.1
- A.Ramaswami, தொகுப்பாசிரியர் (1962). Tamil Nadu District Gazetteers: Salem. 1. Director of Stationery and Print. பக். 129. https://books.google.co.in/books?id=Q1u1AAAAIAAJ. "They are popularly classed as kota balijas, who are military in origin and claim kinship with the Emperors and Viceroys of Vijayanagar and the Kandyan Dynasty."
- Markus Vink, தொகுப்பாசிரியர் (2015). Encounters on the Opposite Coast: The Dutch East India Company and the Nayaka State of Madurai in the Seventeenth Century. Brill. பக். 75 & 56. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789004272620. https://books.google.com/books?id=SaW8CgAAQBAJ.
- ↑
- K. A. Nilakanta Sastri, தொகுப்பாசிரியர் (1946). Further Sources of Vijayanagara History. University of Madras. பக். 302. https://archive.org/details/FurtherSourcesOfVijayanagaraHistory. "On Sravana ba. 10 of Yuva of 146 years ago corresponding to S. S. 1558, (the Raya) granted the government of Penugonda to Koneti Nayadu, the son. of Kastuiri Nayadu, the son of Akkapa Nayadu, who was the son of Canca(ma) Nayadu of Candragiri, a member of the Vasarasi family of the Balija caste."
- Bulletin of the Government Oriental Manuscripts Library, Madras. Superintendent Government Press. 1954. பக். 49. https://books.google.co.in/books?id=UPQeAAAAMAAJ. "The above said Peda Kōnēti Nṛpati ( Nayak ) First , king of Penukonda . ( 1635 A.D. ) then of Kundurti ( 1652 A.D. ) and of Rayadurga ( 1661 A.D. ) was a Balija by caste , having the surname Vānarāsi . His father Kastūri Nāyak and grand father bencama Nayak had enjoyed high favour with the fallen kings of Vijayanagar who were ruling at Chandragiri"
- ↑
- K. A. Nilakanta Sastri (1946) (in en). Further Sources of Vijayanagara History. University of Madras. பக். 176. https://archive.org/details/FurtherSourcesOfVijayanagaraHistory/page/n2/mode/1up. "Moreover, Acyutadeva Maharaya formally crowned Viswanatha Nayadu of the Garikepati family of the Balija caste as the king of Pandya country yielding a revenue of 2 and 1/2 crores of varahas; and he presented him the golden idols of Durga, Laksmi and Lakshmi-Narayana and sent him with ministers, councillors and troops to the south. Visvanatha Nayudu reached the city of Madhura, from which he began to govern the country entrusted to his care. - taken from the Kaifiyat of Karnata-Kotikam Kings, LR8, pp.319-22"
- Konduri Sarojini Devi (1990) (in en). Religion in Vijayanagara Empire. Sterling Publishers. பக். 100. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-207-1167-9. https://books.google.com/books?id=7qnXAAAAMAAJ. "According to the Kaifiyat of the Karnata Kotikam Kings, "Acyutadeva Maharaya formally crowned Visvanatha Nayadu of the Garikepati family of the Balija caste as the King of Pandya country yielding a revenue of 2 and 1/2 crores of varahas; and he presented him with golden idols of Durga, Lakshmi and Lakshminarayana and sent him with ministers, councillors and troops to the South.""
- ↑ V. Narayana Rao (1988). Heroes and heroines in Telugu folklore. University of Pennsylvania. பக். 144.
- ↑ Subramanian, Ajantha (2019) (in en). The Caste of Merit: Engineering Education in India. Harvard University Press. பக். 100. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780674987883. https://books.google.com/books?id=ifuwDwAAQBAJ&pg=PA100.
- ↑ "களைகட்டும் தேர்தல் பந்தயம்!". https://m.dinamalar.com/detail.php?id=2760405.
- ↑ "ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர்... எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு". https://www.kumudam.com/news/politics/52954.
- ↑ Vicuvanātan̲, Ī Ca (1983) (in en). The political career of E.V. Ramasami Naicker: a study in the politics of Tamil Nadu, 1920-1949. Ravi & Vasanth Publishers. பக். 23, 32. https://books.google.com/books?id=L9dIAAAAMAAJ&q=Varadarajulu+naidu+balija.