கொல்லா
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
கொல்லா (Golla) :- ( గొల్ల వారు ):- கொல்லா நாயுடு இனத்தவர்கள் தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் சாதிகள் பட்டியலில் உள்ள, தெலுங்கு பேசும் யாதவர்களாக அறியப்படுகிறார்கள். 1911 இல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை அடிப்படையில் இந்தியாவில் இவர்கள் 15,38,031 பேர் உள்ளதாக ஆவணம் தெரிவிக்கின்றது.[1] ஆந்திராவில் தற்போதைய கணக்கெடுப்பின் படி 7% சதவீத மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இச்சமுகத்தினர் ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்த வடுக மரபினர்களில் இவர்களும் ஒரு குழுவினராக உள்ளனர். இவர்களைப் பொதுவில் நாயுடு என்று அழைக்கின்றனர். இவர்கள் வடக்கில் இருந்து வந்ததால் வடுகர் என்றும் மேலும் கொல்லவாரு என்று தெலுங்கு மக்களால் அழைக்கப்படுகின்றனர் (கொல்லா+வாரு=கொல்லவார்) "வாரு"என்பது "அவர்கள்" என்று தெலுங்கில் பொருள்.
மொத்த மக்கள்தொகை | |
---|---|
1.5 கோடி | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
தமிழ்நாடு, ஆந்திரா, கருநாடகம், இலங்கை, மலேசியா, புதுச்சேரி, கேரளம் | |
மொழி(கள்) | |
தெலுங்கு, தமிழ், கன்னடம், துளு | |
சமயங்கள் | |
இந்து |
பூர்வீகம் தொகு
மகாபாரதத்தில் வரும் யவதி ராஜா மரபினராகவே கொல்லா மற்றும் இவர்களின் கிளை சாதிகளைக் கூறுகின்றனர். யவதி ராஜாவுக்கு 6 மகன்கள். அதில் கடைசி மகனாகிய கரியவாலாவுக்கு ஒரு மகன். அவரின் பெயர் ஆவுழு அமிர்த்தமையா. இவருக்கு ஒலி ராஜு என்றும் சிம்ஹாதிரி ராஜு என்றும் மகன்கள் இருந்தனர். இந்த மரபில் வந்தவர்கள் பெத்த ராஜு, எருனுக்கா ராஜு, நலனுக்கா ராஜு, போல ராஜு என்பவர்கள். கொல்லா இனத்தவர்கள் மகாபாரதத்தில் வரும் இந்த ராஜாக்களின் வாரிசுகளாக தங்களைக் கூறுகின்றனர் .மேலும் கொல்லவார்கள் ஸ்ரீ கிருஷ்ணர் வழிவந்த அஹீர் (ஆயர்) சமுகத்தினர் ஆவர். சந்திர வம்ச க்ஷத்திரியர்கள் கொல்லவார்..[சான்று தேவை]
பிரிவுகள் தொகு
கோபாலா (பசுக்களைக் காக்கும் பொறுப்பு கொண்டோர்) என்பதில் இருந்து கொல்லா வந்ததாக அறியப்படுகிறது. இவர்கள் தமிழில் நாயக்கர் என்றும் அழைக்கபடுகின்றனர்.
- அஸ்தாந்திர கொல்லா
- மொன் கொல்லா
- காடு கொல்லா
- ஊரு கொல்லா
- தூமாட்டி கொல்லா[2]
- பூஜா கொல்லா
- கர்ண கொல்லா
- கோண கொல்லா
- பத்ர கொல்லா
- போகநாட்டி கொல்லா
- எர்ர கொல்லா
- பால கொல்லா[3]
- மேகல கொல்லா
- தோக்கல கொல்லா[4]
- குரும(குறும்ப) கொல்லா[5]
இவர்களில் காடு கொல்லா என்பவர்கள் கங்கை நதி தீரத்தில் இருந்து வந்ததாகவும், ஊரு கொல்லா என்பவர்கள் ஆந்திராவை பூர்விகமாக கொண்டவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. இவர்களுக்குள் எந்த திருமண பந்தமும் கிடையாது. அஸ்தாந்திரம் என்றால் நீதிமன்றம் என்று பொருள்படுவதால் இந்த பிரிவினர் ஆதியில் கொல்லா இனத்தவர்களுக்கு நீதி சொல்லும் மக்களாக இருந்திருப்பார்கள் எனப்படுகிறது. துமாட்டி கொல்லா பாகநாட்டி கொல்லவார்கள் முற்காலத்தில் பாகநாடு என்று அழைக்கப்பட்ட நெல்லூரை பூர்வீகமாக கொண்டவர்கள். கொல்லாக்கள் ஆநிரைகளை மேய்ப்பது சமூக தொழிலாக கொண்டாலும் போர் மரபினர் எனவே இவர்கள் பெரும் மன்னர்களாகவும் பாளையக்காரர்களாகவும் இருந்து வந்துள்ளனர்.
பலிஜா பிரிவு உருவாக்கம் தொகு
- விஜயநகர பேரரசர், கிருஷ்ணதேவராயர் காலத்தில் 'பலிஜா' எனும் பட்டத்தின் கீழ் இடங்கை சாதிகளான கவரா, கொல்லா மற்றும் பலரை திரட்டினார்கள்.[6] அரசு ஆவணங்களின் படி பலிஜா என்பது வடுகத் தெலுகினத்தின் சிலசாதிகளை ஒன்றிணைக்கும் குடைப்பிரிவாக கருதப்படுகின்றது.
- மதராஸ் மாகாண கெசீட்டர்ஸ் (Madras district Gazeteers) என்னும் அரசு ஆவணத்தின்படி :-
பலிஜாக்கள் உண்மையான தொழில்-சாதிகளைக் குறிக்காத மற்றும் தொழில்சார் குறியீடு என்று கூறப்படுகிறது.
கொல்ல பலிஜாக்கள் பொதுவாக கொல்லா எனப்படுகின்றனர். இவர்கள் தங்களை "நாயுடு" என அழைக்கின்றனர்.
கம்ம பலிஜாக்கள் கம்மவர்களுடன் அடையாளம் காணப்படுகின்றனர்.[7]
கொல்லவார் பாளையங்கள் (ஜமின்) தொகு
தமிழக பாளையக்காரர்கள் (72 பாளையங்களில்)[8]:.[சான்று தேவை]
- ஏற்ர சக்க நாயக்கனூர் - கந்தப்ப நாயக்கர்
- தேவாரம்
- போடிநாயக்கனூர் - திருமலை போடி நாயக்கர்
- பாஞ்சாலங்குறிச்சி - வீரபாண்டிய கட்ட பொம்மு நாயக்கர்
- எட்டயபுரம் - ஜெகவீர பாண்டிய எட்டப்ப நாயக்கர்
- அம்மைய நாயக்கனூர் - கத்திற நாயக்கர்
- அம்பாத்துரை - மாக்கள நாயக்கர்
- தவசு மடை - சுடலை நாயக்கர்
- எம்மகலாபுரம் - காமுலக்கிய நாயக்கர்
- மாரநாடு - சின்ன அழகிரி நாயக்கர்
- மதூர் - வேங்கடசாமி நாயக்கர்
- சொக்கம் பட்டி - பள்ளமுத்து நாயக்கர்
- ஏற்றியோடு - முத்து குமாரவேலு வெல்ல கொண்டாம நாயக்கர்
- பள்ளியப்பா நாயக்கனூர் - பள்ளியப்பா நாயக்கர்
- இடைய கோட்டை - மம்பார நாயக்கர்
- மம்பாரா - சக்காராம் தொம்ம நாயக்கர்
- பழனி - வேலையாத நாயக்கர்
- ஆயக்குடி - கொண்டாம நாயக்கர்
- விருபாக்ஷி - குப்பால நாயக்கர்
- கன்னிவாடி - ஆண்டியப்ப நாயக்கர்
- நாகலாபுரம் - சவுந்துர பாண்டிய நாயக்கர்
- எதிலப்பா நாயக்கன் பட்டி - தளி எதிலப்பா நாயக்கர்
- காடல்குடி
- குளத்தூர்
- மேல்மாந்தை
- ஆற்றங்கரை
- கோலார்பட்டி
- துங்கவதி - சீலம்ம நாயக்கர்
- சிஞ்சுவாடி - சம்பே நாயக்கர்
- தொட்டப்ப நாயக்கனூர்
- கம்பம்
- காசியூர்
- வாராப்பூர்
- ஆத்திப்பட்டி
- கண்டம நாயக்கனூர் - சாமி ஆண்டி வேலப்ப நாயக்கர்
- தும்பிச்சி நாயக்கனூர் - தும்பிச்சி நாயக்கர்
- நத்தம்
- சக்கந்தி
- பெரியகுளம்
- குருவி குளம்
- இளசை
- மதுவார்பட்டி
- கோம்பை
- தொட்டயங்கோட்டை - பொம்மன நாயக்கர்
- மலயபட்டி
- ரோசலை பட்டி
- சல்லிப்பட்டி - எர்ரம நாயக்கர்
- எழுமலை
- ஆவலப்பன் பட்டி - ஆவலப்ப நாயக்கர்
- நிலகோட்டை
- முள்ளியூர்
- கோப்பைய நாயக்கனூர்-கோப்பைய நாயக்கர்
ஆந்திர பாளையக்காரர்கள்[9]:
- கோத்தகோட்டா - பெருமப்ப நாயர்
- கப்பத்ராலா - சோட்டா மடப்ப நாயர்
- துடிகொண்டா - முல்லப்ப நாயர்
- பன்டிகோனா - ராம நாயர்
- பண்டிகோன - வெங்கடப்ப நாயுடு
- மத்திகெரா - மல்லிகார்ஜுன நாயுடு
- அஷ்பரி - குர்ஜிஜி எல்லவ ராயுடு
- யகர்லபாளையம் - புருஷராம நாயுடு
- மண்டபம்பாளையம் - போகி எல்லன் நாயுடு
- ஜனுலாவரம் - பசிவி நாயுடு
- பலகொண்டாபனயனிபள்ளி - மச்சினெனி கொண்டப்ப நாயுடு
- புத்தூர்பாளையம் - புலிப்சி நாயுடு
- கோனராஜூபாளையம் - எர்ரபசிவி நாயுடு
- தொண்டூர் - பெத்த கோபால நாயுடு
- செனுமும்பள்ளி - பாப்ப நாயுடு
- கொண்டாரெட்டிபள்ளி - திம்மள நாயுடு
- கோதகோட்டா - சின்ன கோபால் நாயுடு
- தாசரிபள்ளி - வீரனெகினி சித்தப நாயுடு
- யகர்லபாளையம் - வித்தலபதி நாயுடு
- முடிரெட்டிபாளையம் - பெத்த நாகப்ப நாயுடு
கர்நாடக பகோண்டி பாளையக்காரர்கள் [10]:-
- பாவகடா (தலைமை பாளையம்) - வீரவல்லப நாயக்கர்
- கண்ணமெடி - தாளப்ப நாயக்கர்
- ராகிகுண்டா
- குண்டுலபள்ளி
- கௌரா சமுத்திரம்
- நல்லிகெனஹல்லி
- காமனகொண்டா
- வட்ரேவு
- ஜலப்பள்ளி
- தோம்துமரி
- நாகலம்மடிகி
- புகடூரு
- கங்காவரம்
- மாச்சராஜனஹள்ளி
- கியாடி குண்டா
- பெண்ட்லிஜீவி
- கியாதகன செர்லு
- கியாதிகுண்டா
- பியாடனூர்
- கடபலகேரே
- வீரூப்பசமுத்திரம்
- நேரலகுண்டா
- கௌடெடி
- கும்மகட்டா
- கும்மணஹள்ளி.[சான்று தேவை]
கொல்லவார் பட்டங்கள் தொகு
நெருங்கிய தொடர்புடைய சாதிகள் தொகு
தெலுங்கின குடிகள்:[11]
- கம்மவார்கள் தொட்டிய நாயக்கரின் பிரிவு என ஜே.ஹச்.நெல்சன் பதிவு செய்துள்ளார்[12].
- கம்பளத்து நாயக்கர் என்று அழைக்கப்படும் ஒரு பெரும் தெலுகு சாதியில் உள்ள ஒன்பது கம்பளங்களிள் ஒருவரே கம்மவார் நாயக்கர்கள் என "தமிழகத்தில் நாடோடிகள்" என்னும் புத்தகத்தில் பக்தவத்சல பாரதி குறிப்பிட்டுள்ளார்.இதனை
“ | " 'கம்பளம் ஒன்பது', 'தொட்டியம் பதினெட்டு' என்பது நாடறிந்த உண்மையானாலும் அவை எவை என்பதில் கருத்து மாறுபாடு உள்ளதாகவும் மணப்பாறை வட்டத்தில் உள்ள சமுத்திரம் கிராம குடுகுடுப்பை நாயக்கர்கள் கூற்றுப்படி ஏக்ரவார், தோக்லவார், கொல்லவார், சில்லவார், கம்மவார், பாலவார், தூளவார், எர்ரிவார், நித்ரவார் என்பன ஒன்பது கம்பளங்கள்.[13] | ” |
- காப்புகள் வேளாண் சமுகமக்கள்.
- கொல்லா,எர்ர கொல்லா கம்பளத்தார்கள் மேச்சல் சமுகமக்கள்[14]
தற்காலத்தைய geneology மரபணுவியல் படி சமிபத்தில் இரத்த மாதிரிகளை கொண்டு RESEARCH GATE என்னும் அமைப்பு ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டது அதன்படி கொல்லா மற்றும் காப்பு மிக நெருங்கிய ரத்த சம்பந்தம் கொண்டவர்கள் என்று நிறுவியுள்ளனர்[15].
சமுதாய நிலை தொகு
கொல்லா இனத்தவர்களின் இயல்புகளை தனது நூலில் எட்கர் துர்ச்டன் எழுதி உள்ளார். சமுதாயத்தில் மிக உயர்ந்த இடத்தில் இந்த சமுதாய மக்கள் இருந்து வருகின்றனர். இவர்கள் காப்பு , கம்மவர் , பலிஜா நாயுடு சமுதாயத்தவரிடம் பெண் கொடுத்து பெண் எடுக்கும் அளவுக்கு நெருங்கிய மக்கள் .[16] பிராமணர்கள் இவர்கள் இடத்தில் எந்தப் பொருளையும் வாங்குவர் . சதாத ஸ்ரீ வைஷ்ணவ என்ற மரபினரையே தங்கள் திருமணங்களை நடத்த பணிப்பர். காப்பு இனத்தவர்களுக்கும் இவர்களுக்கும் எந்தப் பாகுபாடும் கிடையாது . இவர்களுக்குள் ஏற்படும் சண்டை சச்சரவகளை ஜாதி பெத்த என்ற சாதிப் பெரியவரின் முன்னிலையில் தீர்த்து வைக்கின்றனர்[17]..[சான்று தேவை]
குல மரபுகள் தொகு
இவர்களுக்குள் நடக்கும் எந்த முக்கிய நடைமுறையையும் தங்கள் ஊர் பெரியவர் முன்னிலையில் தான் நடத்துகின்றனர். இவர்கள் ரேணுகா தேவி, எல்லம்மா, முனீஈஸ்வரர், திருமால் , சிவன், மல்லண்ணா, அழகர், போலேரம்மா போன்ற குல தெய்வங்களை வணங்குகின்றனர். இவர்கள் வட தமிழகத்தில் அதிகம் உள்ளதால் அங்குள்ள வன்னியர் பட்டம் கொண்ட 'பள்ளி' சாதி தமிழர்களின் பச்சையம்மன் விழா , திரௌபதியம்மன் விழா முதலியவற்றைச் சிறப்பாக செய்கின்றனர் . இவர்களின் விழாக்களில் தெலுங்கில் பாடல்கள் பாடுகின்றனர் ..[சான்று தேவை]
குறிப்பிடத்தக்க நபர்கள் தொகு
சரித்திர காலத்தவர்கள் தொகு
- ஸ்ரீ கிருஷ்ணதேவராயர்[18][19]
- சாளுவ நரசிம்ம தேவ ராயன்
- வீரப்பாண்டிய கட்டபொம்மன்
- விருப்பாச்சி கோபால் நாயக்கர்
- ஊமைத்துரை
- தளி எத்தலப்ப நாயக்கர்
சமுக போராளிகள் தொகு
1 சங்கொலி ராயண்ணா (சுதந்திர போராட்ட தியாகி, கர்நாடகா)
2 தொட்டி கொமரய்யா (பழங்குடி மக்களின் உரிமைகாக போராடிய வீரர், தெலங்கானா)
அரசியல் தொகு
- யணமல ராமகிருஷ்ணுடு (தெலுகு தேசம் கட்சி அவைத்தலைவர்,சட்டபேரவை தலைவர்) (முன்னாள் நிதி அமைச்சர், ஆந்திரப்பிரதேசம்)
- படுகுல லிங்கையா (ராஜ்யசபா எம்பி, தெலங்கானா)
- சத்தியநாராயணன் (தி.நகர், எம்.எல்.ஏ)
- அனில் குமார் (வேளாண்துறை அமைச்சர், ஆந்திரா)
- தெலசனி சீனிவாஸ் (திரைப்படத்துறை அமைச்சர், தெலங்கானா)
- ஏ.சக்ரபாணி (முன்னாள் சட்டப்பேரவை தலைவர்,ஆந்திரப்பிரதேசம்)
முக்கிய பிரமுகர்கள் தொகு
1 ரயாங்க கிருஷ்ணய்யா (அனைத்து இந்திய பிற்படுத்தபட்டோர் ஆணையம் தலைவர்)
2 ஜங்க கிருஷ்ணமூர்த்தி (ஒய்.எஸ்.ஆர்.சிபி. பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர்.
மேற்கோள்கள் தொகு
- ↑ "Castes and Tribes of Southern India - Wikisource, the free online library". https://en.m.wikisource.org/wiki/Castes_and_Tribes_of_Southern_India.
- ↑ "Castes and Tribes of Southern India/Dhūdala - Wikisource, the free online library". https://en.m.wikisource.org/wiki/Castes_and_Tribes_of_Southern_India/Dh%C5%ABdala.
- ↑ "The Madura country a manual". https://archive.org/stream/in.ernet.dli.2015.172487/2015.172487.The-Madura-Country-A--Manual-I-To-V_djvu.txt.
- ↑ "History of the Nayaks of Madura". https://books.google.co.in/books/about/History_of_the_Nayaks_of_Madura.html?id=uXdyGtJH6E0C&redir_esc=y.
- ↑ Comprehensive History and Culture of Andhra Pradesh p 15 M. L. K. Murty, Dravidian University - 2003 -"In addition to Scheduled Tribes, there are other social groups, like Golla, Kuruba, Kuruva and Kuruma, whose traditional economy is predominantly sheep/goat herding and cattle pastoralism."
- ↑ Velcheru Narayana Rao, David Dean Shulman, Sanjay Subrahmanyam, தொகுப்பாசிரியர் (1992). Symbols of Substance Court and State in Nāyaka Period Tamilnadu. Oxford University Press. பக். 74. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-563021-3. https://books.google.com/books?id=znFuAAAAMAAJ. "These left- Sudra groups — often referred to by the cover-title 'Balija', but also including Gavaras, left-hand Gollas, and others - were first mobilized by Krishnadevara in the Vijayanagara heyday...These Balija fighters are not afraid of kings: some stories speak of their killing kings who interfered with their affairs"
- ↑ F.J. Richards, தொகுப்பாசிரியர் (1918). MADRAS DISTRICT GAZETTEERS. Superintendent, Government Press. பக். 179. https://books.google.co.in/books?id=CglmG0VjScYC. "Balijas are reported to be mere occupational terms which do not indicate true Sub-castes.The Golla Balijas are probably Gollas (q.v.)who called themselves Naidus; the Kamma Balijas are perhaps to be identified with the Kammas (q.v. p.166)"
- ↑ [http://vget.org/wp-content/uploads/2014/04/poligar_systein_Tamil_Country.pdf&ved=2ahUKEwiTg-rKlK3mAhWkyzgGHaTyDcEQFjADegQIBBAB&usg=AOvVaw1yeo1jZw56OYWTxBoHy4tc "vget.org › uploads › 2014/04PDF The Poligar System in the Tamil Country : Its Origin and Growth. - VGET"]. http://vget.org/wp-content/uploads/2014/04/poligar_systein_Tamil_Country.pdf&ved=2ahUKEwiTg-rKlK3mAhWkyzgGHaTyDcEQFjADegQIBBAB&usg=AOvVaw1yeo1jZw56OYWTxBoHy4tc.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ [http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/62877/8/08_chapter%25203.pdf&ved=2ahUKEwiTg-rKlK3mAhWkyzgGHaTyDcEQFjACegQIBhAB&usg=AOvVaw3i2WNEQIzrwvdiE-F_dBqw "shodhganga.inflibnet.ac.in › ...PDF origin and development of the palegar system - Shodhganga"]. http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/62877/8/08_chapter%25203.pdf&ved=2ahUKEwiTg-rKlK3mAhWkyzgGHaTyDcEQFjACegQIBhAB&usg=AOvVaw3i2WNEQIzrwvdiE-F_dBqw.
- ↑ Prasanna (2017). Pagonde poligars a comprehensive study (Thesis). hdl:10603/228243.
- ↑ "The Madura country a manual". https://archive.org/stream/in.ernet.dli.2015.172487/2015.172487.The-Madura-Country-A--Manual-I-To-V_djvu.txt&ved=2ahUKEwjukJmK_azmAhXXbCsKHRU_AcUQFjAAegQIBBAB&usg=AOvVaw2U9GR8k0dG9P843JcTIjsM.
- ↑ "The Madura country a Manual". https://archive.org/details/in.ernet.dli.2015.172487/page/n207.
- ↑ பக்தவத்சல பாரதி (2003). தமிழகத்தில் நாடோடிகள் சங்ககாலம் முதல் சமகாலம் வரை. பக். 147. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788177202700.
- ↑ "மதுரை நாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ)". https://www.jeyamohan.in/15.
- ↑ "Figure 3. The neighbor-joining tree (constructed on the basis of F ST..." (in en). https://www.researchgate.net/figure/The-neighbor-joining-tree-constructed-on-the-basis-of-F-ST-distances-depicting_fig2_321207673.
- ↑
- M. Krishna Kumari, தொகுப்பாசிரியர் (1997). Facets of Andhra Culture. Gyan Sagar Publications. பக். 138. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788186987049. https://books.google.com/books?id=bCbuAAAAIAAJ.
- L. Ramamoorthy, தொகுப்பாசிரியர் (2000). Language Loyalty and Displacement: Among Telugu Minorities in Pondicherry. Pondicherry Institute of Linguistics and Culture. பக். 10. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788185452104. https://books.google.com/books?id=yYgOAAAAYAAJ.
- ↑ India, Anthropological Survey of (1989) (in en). All India Anthropometric Survey: Analysis of Data. South Zone. Anthropological Survey of India. https://books.google.com/books?id=U0uAAAAAMAAJ&q=golla+balijas.
- ↑ "AMUKTAMALYADA". https://archive.org/details/amuktamalyada00krissher/page/n2.
- ↑ "Krishnadevaraya | Sulekha Creative". http://creative.sulekha.com/krishnadevaraya_242456_blog.