ரெட்டி (தெலுங்கு:రెడ్డి, ருட்டி (Ruddy), ரொட்டி (Roddy), ராட்டி (Raddi), ரெட்டீ (Reddi) எனவும் ஒலி பெயர்ப்பு செய்யப்படுகிறது) என்பது ஆந்திரப் பிரதேசத்தில் ஆதிக்கம் நிறைந்த, ஒரு இந்திய சமூக அமைப்பு அல்லது சாதி முறை ஆகும். ரெட்டிகள் தெலுங்கு மொழியைத் தங்களது தாய்மொழியாகக் கொண்டுள்ளனர்,[1] இந்தி மற்றும் ஆங்கிலம் அவர்களது இரண்டாவது மொழியாகும். கர்நாடகா, தமிழ்நாடு, மஹாராஸ்டிரா மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் கணிசமான அளவில் ரெட்டி இனத்தவரின் மக்கள்தொகை உள்ளது.நாயக்கர், மரபினர்களில் இவர்களும் ஒரு குழுவினராக உள்ளனர். கி.பி. 1456-இல் முதன் முதலாகத் திருச்சி மாவடட்டம் செட்டி குளத்தில் 200 பேர் கொண்ட தரைப்படையுடன் எர்ரம ரெட்டி வந்து இறங்கி ஆட்சி செய்யலானான். எர்ரம ரெட்டியின் தளபதிகளாக நல்லப்ப ரெட்டி, லிங்கா ரெட்டி என்பவர்கள் இருந்தனராகவும், இவர்கள் காட்டுப்புத்தூர், துரைமங்களம் பகுதியில் குடிகொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இவனைத் தொடர்ந்து மகாதேவி என்ற இடத்தில் தளபதி ராமிரெட்டி 500 காலாட் படையுடன் வந்தான். இவன் அப்பகுதியில் கோட்டை கட்டி ஆட்சி புரிந்தான். அனைத்து தரப்பினரும் அவனுக்குக் கப்பம் செலுத்தினர். அப்பகுதியில் திருட்டு, கொலை, கொள்ளை போன்றவைகளைத் தடுத்து சிற்றரசனாகவே மதிக்கப்பட்டான். .தளபதி ராமி ரெட்டி வாரிசுகள் பெருமாள் ரெட்டியார், வீரம்மாள். பெருமாள் ரெட்டியார் வாரிசுகள் கிருஷ்ணா ரெட்டியார், பார்தம்மாள், பூச்சம்மாள் என்கின்ற வங்கம்மாள். கிருஷ்ணன் ரெட்டியார் வாரிசுகள் ராமசாமி ரெட்டியார். ராமசாமி ரெட்டியார் வாரிசுகள் சீனிவாசன் ரெட்டியார், ராஜகோபால் ரெட்டியார்,சுந்தரரசு ரெட்டியார். ராமி ரெட்டியை தொடர்ந்து பலர் விஜயநகர ஆட்சியில் ஜமீன்களாகவும், பாளையக்காரர்களாகவும் பரவலாக வந்து குடியேறினர்.

ரெட்டி
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் மஹாராஸ்டிரா
மொழி(கள்)
தெலுங்கு, தமிழ்
சமயங்கள்
Om symbol.svg இந்து

தோற்றம்தொகு

 • 19 ஆம் நூற்றாண்டு எழுத்தாளரான எட்கர் தர்ஸ்டன், தனது "கேஸ்ட்ஸ் அண்ட் டிரிப்ஸ் ஆஃப் சவுத்தன் இந்தியா" (Castes and Tribes of Southern India) என்ற நூலில், ரெட்டிகள் கிராமத் தலைவர்களாகவும் இருந்தனர். அவர்கள் காப்பு (Kapu) என்ற சமுதாயத்தின் கீழ் பட்டியலிடப்பட்டனர் என்று குறிப்பிடுகின்றார். கிராமத்தலைவர்கள் 'ரெட்டி' என்ற தலைப்பைக் கொடுத்துள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தின் போது சென்னை மாகாணத்தில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ரெட்டி மற்றும் காப்பு சமூகங்களை ஒன்றாகப் பட்டியலிட்டினர்.
 • தெலகா, பலிஜா, கம்மா, வெலமா மற்றும் கொல்லா போன்ற பிற வேளாண்மை சார்ந்த சமூகத்தை சேர்ந்த மக்களும், அரிதாக 'ரெட்டி' என்ற தலைப்பை அவர்களது பெயரில் சூட்டிக்கொள்கின்றனர். இது ஆந்திரப் பிரதேசத்தின் அனைத்து வேளாண்மை சார்ந்த சாதிகளுக்கும் பொதுவான தோற்றத்தைக் குறிக்கின்றது. அனைத்து வேளாண்மை சார்ந்த சாதிகளானவை அனைத்து தென் இந்திய சாதிகளைப் போன்ற இனத் தோற்றத்தைக் கொண்டிருப்பதாக நம்பப்படுவதை தோற்றம் பற்றிய அண்மை ஆய்வுகள் ஆதரிக்கின்றன.
 • ராஷ்ட்ரகுட்டு என்ற சொல்லில் இருந்து வந்த ராட்டொடு என்ற வரலாற்று இடைகாலத்துச் சொல்லில் இருந்து ரெட்டி என்ற வார்த்தை பிறந்ததாக சில மொழியியலாளர்கள் ஊகித்தனர். ராஷ்ட்ரகுட்டுடுகள், கிராமங்களின் தலைவர்களாக இருந்து வளமான உள்ளூர் விவசாயிகளை வேலைக்கமர்த்தி, பேரரசில் வரிகளைச் சேகரித்தனர். மேலும் அவர்களுக்கு ரெட்டி என்ற தலைப்பை வழங்கினர். ரெட்டி என்ற வார்த்தையின் பயன்பாடானது, குறிப்பாக ரெனட்டி சோழா ஆட்சிகாலத்தின் (CE ஏழாவது நூற்றாண்டு ) கல்வெட்டுகளில் முதலில் காணப்பட்டது.[2]
 • கி.மு 200 ஆம் ஆண்டுக்கு முன்னர், சட்டவஹனாக்கள் மற்றும் மயூர்யாக்களுக்கு முன்பும் தக்காண பீடபூமியில் சிறிய இளவரச ஆட்சிமுறை அதிகாரங்களைக் கொண்டிருந்த ரத்திஸ் இனத்தவருக்கு ரெட்டிகளை தொடர்புபடுத்தும் மற்றொரு கொள்கையும் உள்ளது. வடக்கு ஆந்திரப்பிரதேசத்திலும், கர்னூல் மாவட்டத்திலும், புனேவுக்கு அருகிலும், ரத்திஸ்கள் நாணயங்களை விட்டுச் சென்றனர். அகழ்வாராய்ச்சியில் கிடைத்த நாணயங்கள், மெகாலித்திக் மற்றும் சட்டவஹானா காலத்திற்கு இடைப்பட்ட காலங்களை உணர்த்துகின்றன.
 • ரெட்டி என்ற வார்த்தையின் பயன்பாடானது, குறிப்பாக ரெனட்டி சோழா ஆட்சிகாலத்தின் (ஏழாவது நூற்றாண்டு CE) கல்வெட்டுகளில் முதலில் காணப்பட்டது.[2] CE 1323 ஆம் ஆண்டில், தென்னிந்தியாவில் கக்கட்டியா வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, முஸுனரி நாயக்கர்களின் தலைமையில் ஒரு சுதந்திர இயக்கம் இருந்தது. தெலுங்குப் பிரதேசத்தின் அனைத்து சமுதாயங்களின் போர் வீரர்களும் ஒன்றிணைந்து, டெல்லி சுல்தானிடம் இருந்து வாரங்கலை மீண்டும் வெற்றிகரமாகக் கைப்பற்றினர். எனினும், தெலுங்குப் பிரதேசத்தின் ஒற்றுமையானது ஐம்பது ஆண்டுகளுக்கு மட்டுமே நிலைத்திருந்தது.

ஆட்சிமுறையின் அளவுதொகு

புவனகிரிப் போரில் (தெலுங்கான மண்டலத்தில் உள்ள போன்கிர்) ரெச்சர்லா வெலமா தலைவர்களின் கைகளில், முஸுனரி கப்பயா நாயகா இறந்த பின்னர் அடான்கியின் ரெட்டி நிலக்கிழார்கள் சுதந்திரம் பெற்றனர். CE 1353 ஆம் ஆண்டு முதல் 1448 ஆம் ஆண்டு வரை ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதியை அவர்கள் ஆட்சி செய்தனர். இந்த அரசாட்சியின் முதலாவது தலைநகரம் அடான்கியாகும். பின்னர் கோந்தவிடு தலைநகரமாக மாற்றப்பட்டது, அதைத் தொடர்ந்து ராஜமுந்திரி தலைநகரமானது. ரெச்சர்லா வெலமா தலைவர்கள் மற்றும் ஒரிசாவின் கஜபதிஸ்களுடன் தொடர்ந்து போர் நடத்திக் கொண்டிருந்ததால் இந்த வம்சம் அழிந்தது. பின்னர் வந்த ஆண்டுகளில், ரெட்டிகள் கோல்கொண்டா இஸ்லாமிய அரசர்களின் பணியாளர்களாக இருந்தனர். ரெட்டிகள் அவர்களது அரணை வலுவூட்டியதற்காக அறியப்பட்டனர். விஜயவாடாவின் வடமேற்கில் கொண்டபள்ளியின் ஒன்றும், குண்டூருக்கு அருகில் கொண்டவிடுவில் ஒன்றுமான இரண்டு முக்கியமான மலைக்கோட்டைகள், ரெட்டிகளின் கோட்டைகள் கட்டடக்கலைக்கு சிறந்த சான்றுகளாக உள்ளன.[சான்று தேவை]

ஆரம்பகால வரலாறுதொகு

"ரஷ்ட்ரகுட்டா" என்ற வார்த்தையானது "ரெட்டக்குடியின்" சமஸ்கிருதப் பதிப்பாகும். ரெட்டாடியில் இருந்து ரெட்டக்குடி மாற்றியமைக்கப்பட்டது, பின்னர் ரெட்டி என்றானது. ராஷ்ட்ரகுட்டாஸ் துவக்கத்தில் சாலுக்கியாவின் மேல் தட்டு இராணுவத்தில் இருந்தனர். படமிக்குப் பிறகு ஒரு பேரரசை அவர்கள் நிறுவினர், அப்போதிருந்து சாலுக்கியாக்கள் மறைந்தனர். ராஷ்ட்ரகுட்டாஸ் வீழ்ச்சியுற்ற பிறகு, ஆந்திரப்பிரதேசத்தில் அடுத்து வந்த கல்யாணி சாலுக்கியாக்கள் கல்வெட்டுகளில் ரெட்டிகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தனர் (CE 900). கல்யாணி சலுக்கியாக்கள் மூலமாக மெடாக் மாவட்டதில் உள்ள கிராமங்களின் தலைவர்களாக படைவீரர்கள் நியமிக்கப்பட்டனர். மினி ராட்டி மற்றும் கட்டி ராட்டி என்று சில பெயர்கள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன. பணியமர்த்தப்பட்டவர், பணியமர்த்தும் அதிகாரமுடையவரின் பெயர், அப்பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் இருந்த முக்கியமான மனிதர்களைப் பற்றி அங்கிருந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தன.[சான்று தேவை]

காகத்திய ஆட்சிகாலம்தொகு

12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கல்யாணி சாளுக்கியர்கள் வீழ்ச்சியடைந்த பிறகு, புரோலா II (1110-1158 CE) சாளுக்கியர்களிடம் இருந்து சார்பற்றவறாக அறிவித்துக் கொண்டார், மேலும் காகத்திய வம்சத்தை உருவாக்கினார். புரோலா தனது கல்வெட்டுகளில் ரெட்டி[3] என்ற தலைப்பைப் பயன்படுத்தினார்.

ரெட்டி வம்சம்தொகு

ரெட்டி வம்சமானது ஆந்திரப்பிரதேசத்தின் கடலோரப் பகுதிகள் சிலவற்றில் சுமார் 60 ஆண்டு காலம் ஆட்சி செய்தனர்.[4] புவனகிரியில் நடந்த (தெலுங்கானா மண்டலத்தில் உள்ள போன்கீரில் நடந்த) போரில் ரெச்செர்லா வெலமா அரசர்களின் மூலமாக முஸுனரி கப்பாயா நாயகா[5] இறந்த பிறகு ரெட்டிகள் சுதந்திரம் அடைந்தனர். ரெட்டி வம்சத்தின் முதல் அரசர் கோமாட்டி புரோலயா வேமா ரெட்டி ஆவார்.[6] அந்த அரசாங்கத்தின் தலைநகரமாக அடான்கி இருந்தது. பின்னர் கொண்டவிடு தலைநகரமாக மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து ராஜமுந்திரி தலைநகரமானது. அவரது ஆட்சியின் இயல்புகளாக அமைதி மறுசீரமைப்பு, கலை மற்றும் இலக்கியத்தின் ஆதரவு, மேலும் அதைப் பொருத்த மேம்பாடுகள் ஆகியவை இருந்தன. இந்தக் காலகட்டத்தில் ராமாயணத்தின் மொழிபெயர்ப்பாளரான எரானா வாழ்ந்தார்.

கோல்கொண்டா ஆட்சிகாலம்தொகு

துர்கிஷ்ஷின் ஆட்சிக்காலம் மற்றும் நிஜாம்களின் ஆட்சிக்காலம் முழுவதிலும் தெலுங்கானா மண்டலத்தின் தலைவர்கள், கிராமக் காவல்துறை அதிகாரிகள், வரி வசூலிப்பவர்கள் மற்றும் விவசாயிகள் என்று ரெட்டிகள் தொடர்ந்து பதவிவகித்து வந்தனர். ரெட்டி நிழக்கிழார்கள் தங்களை தேசாய்கள் , தோராக்கள் மற்றும் பட்டேல் என்று வகைப்படுத்திக் கொண்டனர். பல்வேறு ரெட்டிகள், நிஜாம் நவாப்புகளின் நீதிமன்றத்தில் பிரபுக்களாக இருந்தனர்.

சமுதாய நிலைதொகு

ரெட்டிகள் வழக்கமாக கிராமத் தலைவர்களாக இருந்தனர். மேலும் கிராமப்புற மக்களிடம் இருந்து நன்மதிப்பைப் பெற்றனர். இதைத் தெலுங்கு மொழியில் உள்ள ஒரு பழமொழி விளக்குகின்றது. (தெலுங்கு:రెడ్దొచ్చె మొదలెట్టు) - "ரெட்டி வந்தார்; ஆட்சி செய்யத் தொடங்கினார்" என்பது இதன் பொருளாகும்.

அரசியலில் பங்குதொகு

நீண்டகாலங்களாக கிராமத் தலைவர்களாக இருந்ததன் காரணமாக உள்ளூர், மாநில மற்றும் தேசிய அரசியலில் ரெட்டிகள் தொடர்ந்து செயலாற்றத் தொடங்கினர். குறிப்பாக ஆந்திரப்பிரதேச மாநிலத்தில், இந்த சமூகத்தைச் சார்ந்த ஏராளமான முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் தொழில் முன்னோடிகள் இருந்தனர். 1956 இல் ஆந்திரப்பிரதேச மாநிலம் உருவான பிறகு, பெஜவாடா கோபால ரெட்டி, நீலம் சஞ்சீவ ரெட்டி, காசு பிரம்மானந்த ரெட்டி, பவனம் வெங்கட்ராம் ரெட்டி, தங்குதுரி அஞ்சையா, மரீ சென்னா ரெட்டி, நெதுருமலி ஜனார்தன ரெட்டி மற்றும் கொடல விஜய பாஸ்கர ரெட்டி ஆகியோர் முதலமைச்சர்களாக 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்தனர். ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி அவர்கள், ஒரு ரெட்டி இனத்தவராக இருந்தபோதிலும், கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர் மற்றும் அவரின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி. நீலம் சஞ்சீவ ரெட்டி லோக் சபாவின் அவைத் தலைவராகவும், இந்திய ஜனாதிபதியாகவும் இருந்திருக்கிறார்.

புற இணைப்புகள்தொகு

குறிப்புகள் மற்றும் குறிப்புதவிகள்தொகு

 1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2007-09-28 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2010-04-22 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 2. 2.0 2.1 சவுத் இந்தியன் இன்ஸ்கிரிப்சன்ஸ், நூல். X, எண். 598
 3. த இந்தியன் ஜியோகிராஃபிகல் ஜர்னல் பை இந்தியன் ஜியோகிராஃபிகல் சொசைட்டி
 4. ஆந்துரூலா சங்கிகா சரித்ரா, சர்வராம் பிரதாப ரெட்டி, (தெலுங்கில்)
 5. த ஸ்டோரி ஆஃப் த தெலுங்குஸ் அண்ட் தேர் கல்சர் பை ஜீ. கிரிஷ்ணா
 6. எ ஸ்கெட்ச் ஆப் த டைனஸ்டீஸ் ஆஃப் சவுத்தன் இந்தியா பை ராபர்ட் சீவல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெட்டி&oldid=3351893" இருந்து மீள்விக்கப்பட்டது