தொட்டிய நாயக்கர்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
தமிழ்நாட்டில் சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், காஞ்சீபுரம், திண்டுக்கல், திருவள்ளூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, கரூர், பெரம்பலூர், தூத்துக்குடி, சேலம், நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, கோயம்புத்தூர், ஈரோடு, தேனி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் தொட்டிய நாயக்கர் வசித்து வருகின்றனர். தெலுங்கு மொழி பேசும் இவர்கள் தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பிரிவில் இடம் பெற்றுள்ளனர். இந்த சாதியினர் ராஜகம்பளம், கொல்லவார், சில்லவர், தோக்களவார் மற்றும் தொழுவ நாயக்கர் என்னும் உட்பிரிவுகளின் பெயரிலும் அழைக்கப்படுகின்றனர்.[1] இவர்கள் தற்போது ராஜகம்பளம் என்கிற பெயரையே தங்கள் சாதிப் பெயராகப் பயன்படுத்தி வருகின்றனர். தொட்டியர்கள் கொல்லா, எர்ர கொல்லாவின் கிளை சாதியினர் என எட்கர் துர்ஸ்டன் தனது CASTE AND TRIBES OF SOUTH INDIA புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்[2].
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
தமிழ் நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், | |
மொழி(கள்) | |
தெலுங்கு, தமிழ், கன்னட மொழி | |
சமயங்கள் | |
இந்து சமயம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
பலிஜா, காப்பு, கொல்லவார், கம்மவார் |
பூர்வீகம்
இவர்கள் ஆந்திரம் கர்நாடகம் எல்லையில் துங்கபத்திர நதிக்கரையில் அமைந்துள்ள ஹம்பி என்னும் நகரத்தில் இருந்து தமிழ்நாடு வந்துள்ளனர். இவர்கள் தெலுங்கு, கன்னடம் கலந்த மொழியில் பேசுவர். பெரும்பாலும் தெலுங்கு வார்த்தைகளை கொண்டு தான் இருக்கும். இவர்கள் இப்பகுதியை ஆட்சி செய்துகொண்டு இருந்த நிலையில். [சான்று தேவை] இசுலாமிய மன்னன் ஒருவன் இவர்களிடம் பெண்கேட்டு வந்ததாகவும் அதனால் தமிழகம் நோக்கி வந்தனர் என்று இவர்கள் கூறுகிறார்கள். இவர்கள் மேற்கு தமிழகத்தில் அதிக அளவில் உள்ளனர் . கொங்கு நாடு மற்றும் மேற்கு மதுரை பகுதிகளில் தங்கள் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டனர். இதில் தெலுங்கு பேசும் நாயுடு ரெட்டி கம்பளத்தார் தொட்டியர் என்றும் கன்னடம் பேசும் அனுப்பர் ஒக்கில்லியர் காப்பில்லியர் குரும்பர் ஆகிய கம்பளகவுண்டர்கள் அட்டியர் என்றும் தங்கள் பட்டிக்கு பெயரிட்டு வாழ்ந்து வந்தனர் இதில் அனுப்பகவுண்டர்கள் தமிழ்நாட்டில் 60 க்கும் மேற்பட்ட அரண்மனைகளை கட்டி ஆண்டனர். [சான்று தேவை] அப்படி ஆண்ட அரண்மனைகளில் ஒன்று வெள்ளியங்குன்றம் அரண்மனை. அந்த ஜமீன் பரம்பரை அன்றிலிருந்து இன்றுவரை மதுரை அழகர் கோவில் ஆபரண பாதுகாப்பு பணியைச் செய்து வருகிறது. கம்பளத்தார்களின் தலைமை ஸ்தானமாக இருந்தவர்கள் ஸ்ரீஒன்னம்மாள் தொட்டராயர் ஆகும். இவர்களே அனுப்பகவுண்டர்களின் குல தெய்வம். கம்பளத்தார்களின் அடையாளம் உருமிமேளம் இலந்தமுள் கோட்டை மங்களபாடல் நடுகல் வழக்கம் கருப்பு தாலிகயிறு ஆகும்.[3][சான்று தேவை]
மக்களின் இயல்பு
ஆங்கிலேயர் ஒருவர் இம்மக்களின் இயல்புகளை தனது ஆராய்ச்சி நூலில் தெரிவித்துள்ளார். இவர்களின் வீரம், நேர்மை, தியாகம் தான் நாயக்கர் ஆட்சி அமைய அடிப்படைக் காரணம் என்று தெரிவித்துள்ளார். மாந்தரிகம், குறிசொல்லுவது போன்றவற்றில் திறமையானவர்கள். இவர்கள் சொல்லும் வாக்கு பலிக்கும் என்று ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் கருதுகிறார்கள்.[4] [சான்று தேவை] இவர்கள் பலிஜா, கம்மா, வெலமா போன்றோர்க்கு மதகுருக்களாக இருந்து வந்துள்ளனர். இவர்கள் ஊர்களில் ஒழுக்கத்தை பராமரிக்கும் பொறுப்பிலும் அக்காலத்தில் இருந்து வந்துள்ளனர்..[சான்று தேவை][5]. ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல், சேலம், மாவட்டத்தில் வாழும் ஆண்கள் அல்லது பெண்கள் வேறு சாதியினரோடு உடலுறுவு வைத்துகொண்டது தெரியவந்தால் சாதியில் இருந்து விலக்கி வைக்கப்படுவார்கள். மற்றும் இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து குல தெய்வங்களுக்கும் சிலை வழிபாடு இல்லை.
கிளைகள்
- "கம்பளம் ஒன்பது", "தொட்டியம் பதினெட்டு" என்பது நாடறிந்த உண்மையானாலும் அவை எவை என்பதில் கருத்து மாறுபாடு உள்ளதாகவும் மணப்பாறை வட்டத்தில் உள்ள சமுத்திரம் கிராம குடுகுடுப்பை நாயக்கர்கள் கூற்றுப்படி:-
- ஏக்ரவார்
- தோக்லவார்
- கொல்லவார்
- சில்லவார்
- கம்மவார்
- பாலவார்
- தூளவார்
- எர்ரிவார்
- நித்ரவார் என்பன ஒன்பது கம்பளங்கள்[6].
கன்னடம் பேசும் அட்டியகவுண்டர்கள்
- அனுப்ப கவுண்டர்
- கப்பில்லியர்
- ஒக்கலிகர்
- குரும்பர் [7]
வீட்டு வகைப் பிரிவுகள்(கோத்திரம்)
ராஜகம்பளத்தார்களின் உட்பிரிவுகள் 11 வீட்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இவர்கள் பெரும்பாலும், குறிப்பிட்ட உட்பிரிவுகளுக்குள்ளேயே திருமணம் செய்து கொள்கிறார்கள்.
கொல்லவார் வீட்டு வகை=== (குண்டலவரு ரேவலவரு மன்னுலவரு அலுவலவரு செளுப்பவரு சொளியவரு )
காடேரி பொம்மு வீட்டு வகை தம்மிசிலி கேங்கிசிலி
கொல்லவார் வீட்டு வகை=== (குண்டலவரு ரேவலவரு மன்னுலவரு அலுவலவரு செளுப்பவரு கேவுடுளுவரு சொளியவரு ).[சான்று தேவை]
இர்ரி வீட்டு வகை
- கண்ணடிர்ரி
- தாத்திர்ரி
- போற்றிர்ரி
- கூசமிர்ரி
- பாசமிர்ரி
- பந்திர்ரி
- ஏமிர்ரி
- எனுமிர்ரி
- நாயிர்ரி
கொடையானி பொம்மு வீட்டு வகை
- குண்டானி கொடையானி
- கோட்டண்ண கொடையானி
- பிதுரண்ண கொடையானி
- புவ்வுல கொடையானி
- உக்கம கொடையானி
- திம்மிசி கொடையானி
- சில்ல கொடையானி
பாலமண்ண வகை ; (காடேரி பொம்மு).
- தம்முசி
- முட பாலம்
- உண்டாடி பாலம்
- கட்டாறி பாலம்
- கெங்கிசி பாலம்
- காட்டேரி பாலம்
- சாம பாலம்
- சல்லூறு பாலம்
- தூணாக்கோல் பாலம்
- ஆலமபாலம் ( அழகர் பாலம் )
- மல்ல பாலம்
- குரி பாலம்
- எகநாகி பாலம்
- திகநாகி பாலம்
குஜ்ஜ பொம்மு வகை
- போட பொம்மு
- பொட்டக பொம்மு
- பீலி பொம்மு
- பிக்கா பொம்மு
- சல்லி பொம்மு
- குல்லி பொம்மு
- எரமிசி பொம்மு
- எரமாசி சின்ன பொம்மு
- குந்திலி பொம்மு
- குலகட்ட பொம்மு
- பங்கு பொம்மு
- பங்காரு பொம்மு
- கசிகிலி பொம்மு
- குசிகிலி பொம்மு
கம்பராஜு வீட்டு வகை
- கோனண்ண
- கெத்தண்ண
- சில் பொம்மு
எரமாசி சின்ன பொம்மு வீட்டுவகை
- எரமாசி
- கமண்ண
- பீரண்ண
- சக்கிடண்ண
- கொடுக்கண்ண
- சருக்கண்ண
- காட்டண்ண
மங்கராஜு வீட்டு வகை
- மேக்கலண்ண
- நல்லிமண்ண
கலிமு சோமு வீட்டு வகை
- உட்பிரிவுகள் தெரியவில்லை
குரிமாசி வீட்டு வகை
- பெத்தொட்டி காட்டையா
- சிவகாணி பாலப்பா
- வந்த பாலமுத்து
சில்லண்ண வீட்டு வகை
- எரசில்ல
- நலசில்ல
- பூத்தமசில்ல
- பூத்தனாகாச்சி சில்லா
- நாரமுத்து சில்ல
- தும்பி சில்ல
- கோண சில்ல
- உப்பிடி சில்ல
- பொந்து சில்ல
- கொடை சில்லா
அனுப்பக்கவுண்டர்கள் கிளைப்பிரிவு 64 ஆகும் கோவோரு, பொட்டியோரு, கொண்டியோரு, கெப்பதேரு, கொண்ணையோரு, கட்டியோரு, அங்கதோரு, அவிஞ்சோரு, உனக்கையோரு, சக்கினோரு, சுருகியோரு, போழியோரு, பெள்ளேரு, பிரிஞ்சோரு, பிக்கலோரு, பூச்சியோரு, பெரினியோரு, போசியோரு, பொக்கிசோரு, பெல்லதேரு, மந்தியோரு, மன்னியோரு, முப்பிச்சோரு, துமிக்கலோரு, துண்டதோரு, எடனோரு, எம்மையோரு, துடிக்கலோரு, தொன்னையோரு, தொம்பிலியோரு, நன்னியோரு, நொனந்தோரு, சோளோரு, சந்தனோரு, சவுடியோரு, சலக்கியோரு, சன்னோரு, சானியோரு, சல்லியோரு, சங்கியோரு, சிக்கலோரு, காளிஜோரு, கடிஜோரு, கோணியோரு, அக்கலதோரு, ஆவினோரு, ஆனையோரு, உள்ளோரு. உரலோரு, துருவியோரு, துப்ணதோரு, தொட்டியோரு, தாரியோரு, எகடோரு, ஏரியோரு, பண்ணையோரு, பானோரு, பாட்ஜோரு, மாரிஜோரு, இடுக்கலோரு, ஓம்ஜோரு, ராம்ஜோரு, நக்கலதோரு, தாசனோரு என வகைப்படும் இவை அனைத்தும் கன்னடச் சொற்களே இதில் 1 முதல் 32 கிளை வரை உள்ளவர்கள் அண்ணன் தம்பி முறை 33 முதல் 64 கிளை வரை உள்ளவர்கள் அண்ணன் தம்பி ஆகும் 1 to 32 அண்ணன் தம்பி[சான்று தேவை]
33 to 64 அண்ணன் தம்பி 1 to 32 வரை உள்ளவர்கள் 33 to 64 வரை உள்ளவர்கள் சம்மந்தி முறை ஆகும்
திருமணம்
திருமணத்தின் போது வயது ஒரு பொருட்டல்ல. குழந்தை திருமணம் இன்னும் நடக்கிறது. இரு குலத்தினரிடையே, திருமணப் பொருத்தம் பார்க்கும் போது, நேர் சுட்டம் என்ற ஒரு முறை பார்க்கப்படுகிறது. இதன்படி, ஒரு குலத்தவர், அவருக்கு நேர் சுட்டம் இருக்கும் குலத்தினருடன்தான் சம்பந்தம் செய்ய வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. தற்போது, வேறு சுட்டத்தினருடனும் திருமணம் செய்வதும் நடக்கிறது.
- இர்ரி மாது - கொடையானி பொம்மு சில்ல
- பாலமராஜு - குஜ்ஜ பொம்மு
- எரமாசி சின்ன பொம்மு - கம்பராஜு
- கலிமுசோமு - மங்கராஜு
- பல்லகதொப்பு - நூட்ட குமாரலு
முதல் நாள்
பசுப்பு கொட்டந்து' மஞ்சள் அரைக்கும் சடங்கு நடக்கும். இதில் ஊரில் உள்ள உறவினர்கள் அனைவரும் கலந்து கொள்வர். உரிமியை தன் இனத்தவர்களே இசைப்பார், தெலுங்கு திருமண பாடல்களை பெண்கள் பாடுவார்கள், உரிமி இசைக்க பாட்டு பாட மஞ்சள் இடிக்கும் ( அரைக்கும் ) சடங்கு நடக்கும் ..[சான்று தேவை]
இரண்டாம் நாள்
திருமண நாள் முதல் நாளில் தொடங்கிய திருமணம் பல்வேறு சடங்குகளை கொண்டு இரண்டாம் நாளும் நடைபெறும். திருமணம் இரவு நேரங்களில் தான் நடப்பது இவ்வினதவர்களின் வழக்கம். திருமணத்தின் பொது பிற இனத்தவர்கள் அனுமதிக்க பட மாட்டார்கள். ஊரின் மந்தையில் அவரை பூ, அரச மர இலை, வேப்ப மர இலை, புங்கை மர இலை போன்றவற்றில் குடில் அமைப்பர். மணமகன், மணமகளுக்கு தனி தனி குடில் அமைத்து தேவராட்டம் போன்ற ஆடல்களை ஆடுவர். ஊர் பெரியவர் "சாலி பெத்து முன்னிலையில் தான் திருமணம் நடக்கும். பிராமணர்கள், ஆரிய சடங்கு முதலியவை இம்மக்களால் இன்றளவும் ஏற்று கொள்ளப்படவில்லை .
இரவு நேரத்தில் தெலுகு மொழியில் பாட்டு பாட, உரிமி இசைக்க, பெண்கள் குலவை இட மாலை மாற்றி கொள்வர். தாலி கட்டும் வழக்கம் இம்மக்களிடம் இல்லை, இருந்தாலும் தற்போது வேற்று சமுதாய மக்களின் பார்வைக்காக மஞ்சள் நாணை தற்போது அணிந்து கொள்கிறார்கள் . பெரும்பாலான இடங்களில் மணமகன் தாலி கட்டுவது கிடையாது, அத்தை, நாத்தனார் போன்ற பெண்களே மணமகளுக்கு தாலி கட்டி விடுகிறார்கள். இரவு முழுவதும் தேவராட்டம் தவறாமல் நடைபெறும், சேவயாட்டம், கும்மி போன்றவையும் இரவு முழுவதும் நடத்துவர்.
அம்மி மிதிப்பது, அருந்ததி பார்ப்பது, மணமகன் மணமகளின் காலில் மெட்டி இடுவது போன்ற எந்த சடங்கும் இவர்களிடம் இல்லை . பெண்ணுக்கு ”ஆசாரி” தான் மெட்டி இடுவார். மணமகன் காலில் மெட்டி இடும் வழக்கம் இவர்களிடம் உள்ளது. திருமணத்தின் போது "வீர வாளை" மணமகன் ஒன்றைக் கையில் வைத்திருப்பார். பெண் தலைக்கு முக்காடு போட்டு கொண்டு இருப்பார், மணமகனுக்கு மார்பில் கவசம் கட்டுவர், தலையில் கங்கணம், எருக்கம் பூ, வேப்பம் பூ போன்றவற்றை கட்டுவர். மணமகன் தலைப்பாகை கட்டி கொண்டும், கவசம் அணிந்து கொண்டும் இருப்பார். பெண் மண்ணால் ஆன குடத்தை தலையில் வைத்திருப்பார். இது இவர்களின் திருமணம் முடியும் வரை கடைப்பிடிக்கும் முறை.[8]
மூன்றாவது நாள்
இது சடங்குகளுக்கான நாள். கம்பளத்து சமுதாய மக்களின் திருமணங்களில் சடங்குகள் நிறைந்ததாக இருக்கும் .
தளவாலு அட்டந்து
ஊரில் உள்ள உறவினர்கள், சொந்த பந்தம் அனைவரும் மணமக்களுக்கு ஆசி வழங்கும் சடங்கு. ஒரு தட்டில் பால் வெய்து அதனை வெற்றிலை மூலம் தொட்டு மணமக்களின் மேல் தொட்டு உறவினர்கள் ஆசி கொடுப்பார். இந்த சடங்கு செய்யும் பொது தெலுங்கு மொழியில் தங்கள் குல பெருமைகளையும், தங்கள் வரலாறுகளையும், தங்கள் குல வீரர்களையும், தங்கள் குலத்துக்கு உதவி செய்த மற்ற இனத்தவரையும் புகழ்ந்து பாடுவர்.
தேவுடு மொக்கந்து - கடவுளை வணங்குவது
இந்த சடங்கில் தங்கள் குல தெய்வங்களையும், முனோர்களையும் உரிமையோடு அழைப்பர். இவர்களின் நம்பிக்கை படி தாங்கள் கடவுளின் பிள்ளைகள் என்றும், தாங்கள் சொன்னால் பழிக்கும் என்றும், தாங்கள் அழைத்தால் கடவுளே வருவர் என்று கூறி உரிமையோடும், அதிகாரத்தோடும் கடவுளை அழைத்து மணமக்களை வாழ்த்த சொல்வர் .
குச்சிலு போந்து- குடிலுக்கு செல்வது
மரங்களால் வேயப்பட்ட குடிலில் மணமகன், மணமகளுக்கு விளையாட்டு முதலிய வற்றை செய்து உற்சாக படுவர். பரிசு பொருள்களை பிறருக்கு கொடுத்து மகிழ்வர். இவர்களின் திருமணம் ஆதி மக்கள் செய்த முறையில் நடக்கும்.
திருமண விருந்து
இவர்கள் விஷ்ணுவையும் அவரின் அவதாரங்களையும் வழிபாடு செய்வதால் திருமண விருந்து பெரும்பாலும் சைவ உணவு வகைகளைக் கொண்டிருக்கும்.
நல்ல நேரம், கெட்ட நேரம்
நல்ல நேரம், கெட்ட நேரம், ஜாதகம் பார்க்கும் முறை எதனையும் இம்மக்கள் செய்வது இல்லை. இதுபோல் திருமணம் பகல், இரவு என அவர்களுக்கு ஏற்ற நேரத்தைத் தேர்வு செய்து கொள்கிறார்கள். மணமக்கள் தங்கள் இனத்தில் காதல் செய்தால் அதனை இவர்கள் ஏற்று கொள்கிறார்கள். பிற சாதிகளில் காதல் கொண்டால் அவர்களை ஏற்றுக் கொள்வதில்லை என்பதுடன் அவர்கள் இறந்து விட்டதாகக் கொண்டு இறந்தவருக்குச் செய்யும் சடங்குகளைச் செய்து அவர்களை ஒதுக்கி விட்டுவிடும் வழக்கமும் உள்ளது.[சான்று தேவை]
திருமணத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வு
- இவர்கள் திருமணம் தொடக்க காலத்தில் ஓராண்டுமுழுவதும் நடைபெற்றதாகவும் அது படிபடியாக குறைந்து ஒருநாள மட்டும் நடைபெறுவதாகக் தேனிமாவட்டத்தில் உள்ள காப்பு மக்களிடையே செவி வழி செய்யும் உண்டு. [சான்று தேவை]
- இவர்களின் திருமணத்தில் வரதட்சணை கிடையாது. [2]
- மணமகன் வீட்டினர்தான் திருமண நிகழ்ச்சியை நடத்துவர்
- பழைய பழக்க வழக்கங்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகிறது.
- மணமகன் மணமகளுக்கு காசு கொடுத்துதான் திருமணம் செய்ய முடியும் .
- கம்பளத்து நாயக்கர்கள் பிராமணர்களைக் கொண்டு திருமணம் செய்வது இல்லை, திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விடுவதில்லை என்பதையும் சாதி வினோதங்கள் என்ற பாரதியாரின் கட்டுரையிலே குறிப்பிடுகிறார்.
குழந்தைப்பிறப்பும் சடங்குகளும்
இவர்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதில் ஆர்வம் கொள்வதில்லை. இதற்கு இவர்களின் சாதிக் கட்டுப்பாடுகள்தான் காரணமாக இருக்கிறது. இவர்கள் குழந்தைகளுக்கு குல தெய்வப் பெயரை முதல் பெயராக வைத்துக் கொள்கின்றனர். வெளிப்பழக்கத்திற்கென புதுப் பெயர்களை இரண்டாம் பெயராக வைத்துக் கொள்கின்றனர்..[சான்று தேவை]
ஊஞ்சல் ஆட்டம்
குழந்தை பிறந்த மூன்றாம் மாதத்தில் ஊஞ்சல் ஆட்டம் எனும் ஒரு சடங்கு நடத்தப்படுகிறது. இதில் குழந்தைகளில் எதிர்காலம் எப்படியிருக்க வேண்டும் என்பதற்காக குலப் பெருமை, வீரக்கதை போன்றவற்றை தெலுங்கில் பாடலாகப் பாடுகிறார்கள். குழந்தைக்கு ஒரு வயதில் மொட்டை இடும் பழக்கம் பிற சாதியினரைப் போல் இவர்களிடமும் உள்ளது. குல தெய்வக் கோவிலுக்கு சென்று ஆடு, சேவல் பலியிட்டு, பொங்கல் வைத்து, குழந்தைக்கு மொட்டையிட்டு, குழந்தையின் தாய் மாமனைச் சிறப்பித்து அவருக்குக் கப்பம் பணம் செலுத்தி அதன் பிறகு தெய்வ வழிபாடு செய்யும் வழக்கம் உள்ளது.
இறப்பு சடங்கு
சுடுகாடு வரையில் பெண்களை அனுமதிக்கும் வழக்கம் இவர்களிடம் உள்ளது . இதற்கு பல காரணம் சொல்கிறார்கள் அக்கால கட்டத்தில் கம்பளத்து சமுதாய மக்களால் சதி என்னும் உடன் கட்டை ஏறும் வழக்கம் இருந்து வந்ததாலும், பெண்களை மதித்து அவர்களும் சுடுகாடு வரை வரலாம் என்றும் பல்வேறு கருத்துக்கள் சொல்லப்படுகிறது. இவர்களின் உடல் எரிக்கப்படும். இறந்த மூன்றாம் நாள் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் நடுக்கல் நடுகின்றனர். இந்த நடுக்கலில் அவரின் பெயர், பிறந்த மற்றும் இறந்த நாள் குறித்த தகவல் அவர்கள் செய்த சாதனை போன்ற தகவல்களும் இடம் பெறுகிறது.[சான்று தேவை]
பிற சாதிகளில், இறந்தவர்களின் பிள்ளைகள் மொட்டை போட்டுக் கொள்ளும் வழக்கம் உள்ளது. இவர்களிடம் இவ்வழக்கம் இல்லை. அதே போல இறப்பு நிகழ்வில் பெரும்பாலும் இவர்கள் அழுவது கிடையாது. சக்கிலியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இம்மக்களின் இறப்பில் வந்து ஒப்பாரி வைத்து அழுவர்.[9] தற்போது இந்த நடைமுறை மாறி வருகிறது. அதே போல இவர்களின் இறுதி ஊர்வலம் மிக ஆடம்பரமாக நடக்கும் , பறை மேளம், உருமி, உடுக்கை, பம்பை போன்ற இசைக்கருவிகள் இசைக்க, முன்னே பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், போன்றவை ஆடிக்கொண்டு இறப்பு நிகழ்ச்சியை கூட இம்மக்கள் விமரிசையாக நடத்துவர். இறப்புக்கு மொய் எழுதும் வழக்கம் இவர்களிடம் உள்ளது.
மக்கள் தொகை
இவர்கள் 1850 களில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை அடிப்படையில் தெலுங்கு மொழி பேசுபவர்களில் அதிக மக்கள் தொகை கொண்டுள்ளனர். [சான்று தேவை]குறிப்பாக மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் மக்கள் தொகையில் பெருமளவில் இருந்து வருகின்றனர். மூன்றாவது பெரிய மக்கள் தொகை கொண்டவர்களாக கொல்லா இனத்தவர்களான தொட்டியர் மற்றும் கவரா, காப்பு மட்டுமே இருந்துவருகின்றனர். அதே போல சேலம், ஆத்தூர், கடலூர், நாமக்கல்,கோவை, கரூர், திருச்சி, ஈரோடு, திருப்பூர் போன்ற பகுதிகளில் அதிக அளவில் உள்ளனர். இதுமட்டும் அல்லாது திருநெல்வேலி,ராமநாதபுரம் போன்ற இடங்களிலும் தமிழகம் முழுவதுமே இவர்கள் வாழுகிறார்கள்.[10] .இவர்களின் கிளை சாதியனரான பலிஜா, கவரா, காப்பு போன்றவற்றையும் சேர்த்து மக்கள் தொகை கணக்கெடுத்தால் இவர்கள் தமிழகத்தில் பெரிய மக்கள் தொகை கொண்டு இருப்பர்.[சான்று தேவை]
குல தெய்வங்கள்
ராஜகம்பளம் சாதியினர் தங்களின் குல தெய்வங்களாக கீழ்காணும் தெய்வங்களை வழிபடுகின்றனர்.
- இர்ரி காணி-கெண்டு காட்டம்மா
- கொடையானி பொம்மு-பேரவாடி அக்ககாரு
- காடேரி பொம்மு -ஏறதம்மைய , பொம்மைய,
- குஜ்ஜபொம்மு-வெல்லக்குஞ்சர பொம்மையசாமி
- கம்பராஜு-ரங்கநாதர்
- எரமாசி -காமட்டவ்வாள்
- மங்கராஜு-கெட்டவைய்ய
- கலிமிசோமு-டத்தலூட்டி கண்ணகாரு
- பல்லகாணி-லகுவம்மா
- குரிமாசி-பைட்டம்ம
- சில்லண்ண-சீப்பாலம்ம
- தொழுவ நாயக்கர் - ஜக்கம்மாள்
இவ்வாறாக இவர்கள் குல தெய்வங்களை வழிபட்டாலும் ஜக்கம்மா தேவி, பொம்மக்கா போன்ற தெய்வத்தினை சாதியின் பொது தெய்வமாகக் கொண்டுள்ளனர்.ராஜகம்பளம் இனத்தில் உள்ளவர்கள் அனைவருமே வைணவ கோத்திரத்தை உடையவர்கள் . இருந்தாலும் சைவ வழிபாடு , குலதெய்வ வழிபாடுகளை செய்வர் . அனுப்பகவுடா இன பொது தெய்வம் ஒன்னம்மாள் தொட்டராயர் ஆகும் மேலும் குல தெய்வங்கள் உத்தண்டராயர் அழகர் மாலமுத்து பொம்மையசாமி பொம்மக்காள் பொன்னர்சங்கர் கருப்பராயன் கொண்டம்மாள் கொண்டப்பன் கொண்டத்துகாளி கொண்டுராம் வையம்மாள் சங்கையாசாமி ஆகும்.
குழு வாழ்க்கை
இந்த சாதியினர் ஒரு குழுவாகத் தங்களுக்கென ஒரு பகுதியை உருவாக்கிக் கொண்டு அங்கு தனியாக வசித்து வந்தனர். இதனால் இவர்கள் பிற சாதியினரை தங்கள் ஊருக்குள் அனுமதிக்காமல் இருந்து வந்தனர். இச்சாதிப் பெண்களை மாத விலக்கு காலத்தில் ஊரின் ஒரு பகுதியில் தனியாகத் தனிமைப்படுத்தி வைக்கும் வழக்கமும் இச்சாதியினரிடம் இருந்தது. தற்போது இந்த நிலை மாறியுள்ளது. கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள இவர்கள் அக மண முறையை தீவீரமாகப் பின்பற்றுகின்றனர்..[சான்று தேவை].
நாட்டு புற பாடல்களில்
தமிழில் வழங்கும் பல நூல்களில் குறிப்பாக குறுதெய்வ வழிபாடுகளில் கம்பளத்து மக்களின் பெருமைகள் மற்றும் அவர்களின் பழக்கவழக்கம் பொறிக்கப்பட்டுள்ளன . குறிப்பாக கொங்குநாட்டில் வழங்கப்படும் பொன்னர் சங்கர் உடுக்கை அடி பாடல்களில் கம்பளத்தார் மக்களின் பெருமைகளை அறியலாம் .[11] அதே போல காத்தவராயன் கதையில் வரும் சின்னானும் தொட்டியர் இனத்தவர் அவர் தாழ்த்தப்பட்ட பெண்ணை காதலித்தால் அவரை கொலை செய்துவிடுகின்றனர் .[12] அதே போல சக்கிலியர் இனத்தை சேர்ந்த மதுரை வீரன் கம்பளத்து இன பெண்ணான பொம்மியை காதலித்தால் அவரை திருமலை நாயக்கர் கொலைசெய்து விடுகிறார் .[13]
தேவராட்டம்
கம்பளத்து நாயக்கர்கள் எனும் இச்சமுதாயத்தினர் தேவராட்டம் எனும் ஒரு வகை நடனம் ஆடுகின்றனர். இவர்கள் வீட்டு விழாக்களில் இந்த நடனம் ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கிறது. இதுதவிர சேவயாட்டம் அல்லது சேர்வை ஆட்டம், எக்காளக் கூத்து, கும்மியாட்டம் போன்ற கலைகளில் கைதேர்ந்தவர்களாக உள்ளனர்.[14]
ராஜபாளையம் நாய்
தமிழ்நாட்டில் குடியேறிய ராஜகம்பளம் இனத்தினை சேர்ந்தவர்கள் வேட்டையாடுவதை விருப்பமாக கொண்டு இருக்கும் இனத்தவர்கள் , இவர்கள் தமிழ்நாட்டிற்கு வரும் நிலையில் தங்களோடு ஒரு வகையான வேட்டை நாய்களை கொண்டு வந்தனர். இவர்கள் அதிக அளவில் இராஜபாளையம் பகுதிக்கு அருகில் உள்ள சிப்பிப்பாறை என்னும் ஊரில் இருந்து வந்ததால் இவர்கள் வளர்க்கும் நாய் ராஜபாளையம் நாய் என்று அழைக்கபடுகின்றது. இந்த வகையான நாய்கள் வேட்டைக்கு மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தபடும். இந்த வகையான நாய்கள் தமிழ்நாட்டில் புகழ் அடைந்த ஒரு வகையான நாய் இனத்தினை சேர்ந்ததாக கருதபடுகிறது .[15][16]
குறிப்பிடத்தக்க நபர்கள்
சரித்திர காலத்தவர்கள்
- வீரப்பாண்டிய கட்டபொம்மன்- சுதந்திர போராட்ட வீரர்
- ஊமைத்துரை- கெட்டி பொம்முலுவின் தம்பி மற்றும் விடுதலை வீரர்
- விருப்பாச்சி கோபால நாயக்கர்- பாளையகார் படை அமைத்து ஆங்கிலேயரை எதிர்த்தவர்.
- எட்டப்ப நாயக்கர் - தமிழ்ப் பற்று கொண்ட தெலுங்கரவார்[சான்று தேவை]
- ஒன்னம்மாள் தொட்டராயர் - விஜயநகர பேரரசில் தென்னாட்டை நீதியுடனும். நேர்மையுடனும், தெய்வீக சக்தியுடனும் ஆண்டு பல விருதினை பெற்றவர்கள். குறிப்பாக ராயர். பாண்டியர் ஆகிய பட்டம். {(பொட்டிய தொட்டய்யன் ஒன்னுக்கை ராமு]இவர் பெரும் மாவீரனாவார் யாராலும் வெல்லமுடியாத வானாதிராயனையே வென்று வானாதிக்கோட்டையை பரிசாகப் பெற்றவர் இவர் ஒன்னம்மாள் தொட்டராயரின் புதல்வர் ஆகும். இவர்கள் ராஜகம்பள அல்லிகுல அனுப்பகவுண்டர் வம்சமாகும், மதுரை கள்ளழகர் ஆபரணங்களை மன்னர் காலத்திலிருந்து இன்றுவரை பாதுகாத்து வருவது வெள்ளியங்குன்றம் ஜமீன்தார் அனுப்பக்கவுண்டரே ஆகும்[சான்று தேவை]
குறிப்பிடத்தக்க அமைப்புகள்
- வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம்
- இராஜகம்பள மேன்மக்கள் கல்வி அறக்கட்டளை
- கம்பள விருட்சம் அறக்கட்டளை
அரசியல்
- க.சுப்பு - முன்னாள் அமைச்சர்
- விடுதலை களம் - தொட்டிய நாயக்கர்களுகான கட்சி
- கம்பளத்தார் சத்ரியர் சங்கம் - கம்பளத்தார் சமூக முன்னேற்ற சங்கம் .
- இராஜகம்பள மேன்மக்கள் கல்வி அறக்கட்டளை
- நாயக்கர் நாயுடு பேரவை
மேற்கோள்கள்
- ↑ "List of Backward Classes approved by Government of Tamil Nadu".
- ↑ "Castes and Tribes of Southern India/Tottiyan – Wikisource, the free online library". en.m.wikisource.org. பார்க்கப்பட்ட நாள் 2019-12-11.
- ↑ http://www.ebooksread.com/authors-eng/madras-india--state/madura-volume-1-rda/page-35-madura-volume-1-rda.shtml
- ↑ http://www.scribd.com/doc/57090866/ch-2
- ↑ http://books.google.co.in/books?id=u8vvtDI9kt0C&pg=PA229&dq=kapu+caste&hl=en&ei=DxHiTt_QBYTJrAfqpdHaAQ&sa=X&oi=book_result&ct=result&resnum=6&ved=0CFwQ6AEwBQ#v=onepage&q=kapu%20caste&f=false
- ↑ பக்தவத்சல பாரதி, பாரதி (2003). தமிழகத்தில் நாடோடிகள் சங்ககாலம் முதல் சமகாலம் வரை. p. 147. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788177202700.
- ↑ http://www.ebooksread.com/authors-eng/edgar-thurston/castes-and-tribes-of-southern-india-volume-7-ala/page-15-castes-and-tribes-of-southern-india-volume-7-ala.shtml
- ↑ [1]
- ↑ http://books.google.co.in/books?id=-QpN1BDaS4cC&pg=RA1-PA83&lpg=RA1-PA83&dq=tottiyan+population&source=bl&ots=-Juhhw4iRy&sig=DZ2tMrolCnR_kfE9OCztlpgeK3k&hl=ta&ei=psHCTq6oBsa3rAeA_uDvCw&sa=X&oi=book_result&ct=result&resnum=7&ved=0CDcQ6AEwBg#v=onepage&q=population&f=false
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2012-09-14. பார்க்கப்பட்ட நாள் 2014-04-06.
- ↑ http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=237&pno=512
- ↑ http://books.google.co.in/books?id=iw7SL2QrgcQC&pg=PA106&lpg=PA106&dq=tottiyan&source=bl&ots=RR_u_8yGZk&sig=rntUtIOFWMOz2Hq7otz0cY4vRH0&hl=ta&ei=gLHCTuaCDIrWrQfxt4nECw&sa=X&oi=book_result&ct=result&resnum=8&ved=0CEgQ6AEwBw#v=onepage&q=tottiyan&f=false
- ↑ http://www.cmi.ac.in/gift/Surveys/surv_deities.htm
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2005-05-30. பார்க்கப்பட்ட நாள் 2014-04-06.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-03-13. பார்க்கப்பட்ட நாள் 2014-04-06.
- ↑ http://www.thehindujobs.com/thehindu/mp/2007/02/12/stories/2007021201310300.htm
- ↑ http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Edition-Coimbatore&artid=272757&SectionID=136&MainSectionID=136&SEO=&Title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://www.nakkheeran.in/users/frmNews.aspx?PVN=4737[தொடர்பிழந்த இணைப்பு]