காப்பிலியர்

எனப்படுவோர் கன்னட மொழி பேசும் குஞ்சடிக ஒக்கலிகர்களைக் குறிக்கும்

காப்பிலியர் எனப்படுவோர் கன்னட மொழி பேசும் குஞ்சடிக ஒக்கலிகர்களைக் குறிக்கும். இவர்கள் இஷ்வாகு வம்ச அல்லது கங்க குல சத்திரிய வம்சத்தை சேர்ந்தவர்களாவர். காப்பிலியர் என்று சொல்லும் இனத்தவர்கள் தென்னிந்தியாவில் அதிக அளவில் உள்ள சாதியினர். இவர்கள் ஒன்பது கம்பளத்தில் ஒரு கம்பளமாக கருதபடுகின்றனர். இவர்களுக்கும் ஏனைய 8 கம்பள மக்களுக்கும் ஒரே வரலாறும், பாரம்பரியமும் கொண்டு வாழ்கின்றனர். [1] [2]

காப்பு இனம்

மொத்த மக்கள்தொகை
1.7 கோடி [சான்று தேவை]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ் நாடு, கர்நாடகம், ஆந்திரா,
மொழி(கள்)
தமிழ், கன்னடம், தெலுங்கு
சமயங்கள்
இந்து சமயம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
திராவிடர்

இவர்கள் கர்நாடகத்தில் பெரும்பான்மையாகவும், தமிழகத்தில் அதிக அளவிலும், ஆந்திராவில் கணிசமான அளவில் வாழ்கிறார்கள். மேலும் ஒரிசா, மராட்டியம் , சத்திஸ்கர், இலங்கை போன்ற இடங்களிலும் வாழ்கிறார்கள். பயிர்த்தொழில், விவசாயம் போன்றவற்றை பெரும்பாலான மக்கள் செய்து வருகின்றனர். இவர்கள் தங்களை கவுண்டர் அல்லது கவுடர் போன்ற பெயர்களில் அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். காப்பு என்றால் காவல்காரர் என்ற பொருள் கொள்ளப்படுகிறது.

இவர்கள் கன்னடம் மொழியினை பேசுபவர்கள் எனினும் இவர்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்ததால் தமிழ், தெலுங்கு, ஒரியா, மராத்தி போன்ற மொழிகளைத் தாங்கள் வாழும் பகுதிக்கு ஏற்ப பேசி வருகின்றனர்.[3]

வரலாறு

தொகு

காப்பிலியர்கள் துவாபர யுகத்தில் காமதேனுவினுடைய பால் சிவலிங்கத்தின் மீது பட்டு அதிலிருந்து 48 குலங்களாக தோன்றியவர்கள், அக்காலத்தில் இமாலயத்தில் உள்ள சிவலிங்கத்தை காவல் காத்த இனத்தவர்கள் என்று சிலர் கூறுகின்றனர்.[4] இவர்கள் இஷ்வாகு வம்சா வழிகள் இராமாயணம் மற்றும் மகாபாரத காலத்தில் அரச வம்சத்தினராகவும், போர் படை வீரர்களாகவும் இருந்தவர்கள் என்று சிலர் கூறுகின்றனர்.[சான்று தேவை] இவர்கள் குஞ்சடிகர் என்றும் அழைக்கப்படுகிறார்கள், இதற்கு கிரீக்க மொழியில் குஞ்ச + ட்டி என்றால் ஈட்டியுடைய மனிதன் என்றும் குஞ்ச என்பது அரசரின் தலையில் இருக்கும் கிரீடத்தில் உள்ள வீரத்தின் அடையாளத் தூரிகை என்று பொருள் என்றும் சிலர் சொல்வதுண்டு.[சான்று தேவை]

காப்பிலியரின் 48 உட்பிரிவுகள் [கிளை (அல்லது) பெடகு]

தொகு

தாங்கள் செய்யும் தொழிலை கொண்டு தாங்களுடைய கிளைகளை அக்காலத்தில் வகுத்து கொண்டனர்.

  1. பசலேனவரு.
  2. ஜனகல்லுனவரு.
  3. அரசனவரு.
  4. ஜலெடனவரு.
  5. ராகெனவரு.
  6. ஹவினவரு.
  7. அட்டேனவரு.
  8. ஆலுவனவரு.
  9. தான்யாடவரு.
  10. எரடுகீரேயவரு.
  11. கரடெனவரு.
  12. ஹாலனவரு.
  13. சூரியனவரு.
  14. உண்டேனவரு.
  15. எம்மேனவரு.
  16. யாரேனவரு.
  17. ஹுலியாரு.
  18. செட்டேனவரு.
  19. கொநேனவரு.
  20. அல்பேனவரு.
  21. பெல்லேனவரு.
  22. அண்டேனவரு.
  23. ஜீரிகேனவரு.
  24. கட்டாரடவரு.
  25. வனமனவரு.
  26. காக்கேனவரு.
  27. மெனுசேனவரு.
  28. கம்பளியவரு.
  29. இழையவரு.
  30. மைனவரு.
  31. அரலேனவரு.
  32. கரிகேரு.
  33. சாரங்கடவரு.
  34. ராவுத்தடவரு.
  35. ஹுத்தடவரு.
  36. கொடியாவரு.
  37. ஜாரியவரு.
  38. காலேனவரு.
  39. படவனவரு.
  40. தசலேனவரு.
  41. உருளியெனவரு.
  42. அஷ்டேனவரு.
  43. சாஷ்ட்ரடவரு.
  44. தமகுதியவரு.
  45. கொக்கேனவரு.
  46. கள்ளேதேவரு.
  47. மீஷ்லேனவரு.
  48. வொலகள்ளேரரு.

இது தவிர தமிழகத்தில் உள்ள மற்ற கிளைகள்.

  1. கள்ளகன்டெயவரு.
  2. ஜக்கேலதேவரு.
  3. தான்டடவரு.
  4. கொட்டகெரினவரு.
  5. சாக்குவல்லேரு.
  6. கொடெஹல்லியவரு.
  7. கரவனவரு.
  8. ஹுட்டெனவரு.
  9. அரமணாரு.
  10. நிம்பேனவரு.
  11. தேவனவரு.
  12. ஹாலகட்டானவரு.
  13. உறவினவரு.
  14. கன்னசேர்வை.
  15. சௌந்திரியாரு
  16. லோக்கனவாரு

மக்களின் இயல்பு மற்றும் வாழ்கைமுறை

தொகு

இவர்களுடைய கிளைகளை வைத்து இவர்களுள் உறவுமுறையை வகுத்து உள்ளனர், எனவெ ஒரே கிளை மற்றும் சகோதர கிளைகளில் மணம் முடிப்பது கிடையாது. இந்து மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்கள், இயற்கை, விலங்குகள் மற்றும் பறவைகளுடன் ஒன்றி வாழ்பவர்கள். இவர்கள் சமுதாயத்தில் மிக உயர்ந்த இடத்தில் உள்ளனர். இவர்களுள் போர்த்தொழில் செய்பவர்கள்,விவசாயம் செய்பவர்கள் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் என்று பிரித்துக் கொள்கின்றனர். இவர்கள் விவசாயம் மற்றும் போர் செய்வதில் திறமைசாலிகள் என்று எட்கர் தர்ஸ்டன் தனது தென் இந்திய குலங்கள் பற்றிய நூலில் தெரிவித்துள்ளார்.

இடப்பெயர்ச்சி

தொகு

தொழில், ஆட்சி மாற்றம், முகலாயர் படையெடுப்பு போன்ற பல்வேறு காரணங்களினால் இவர்களில் பல குழுவினர் தாங்கள் அதிகமாக வசித்து வந்த கர்நாடக மாநிலத்திலிருந்து, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் வேறு சில இடங்களுக்கும் இடம் பெயர்ந்தனர். தமிழ்நாட்டுக்கு இடம் பெயர்ந்தவர்கள் வொக்கலிகர், வொக்கலிக கவுடா, காப்பிலியக் கவுண்டர், ஒக்கலிகக் கவுண்டர் போன்று பல பிரிவுகளாக வசித்து வருகின்றனர். இதுபோல் ஆந்திராவிற்குக் குடிபெயர்ந்தோர் அங்கு திலகா, ரெட்டி என்ற பெயரில் வசித்து வருகின்றனர்.

காப்பிலியரின் பிரிவு

தொகு

' நான்கு பிரிவுகளாக உள்ளனர் '

  • வொக்கலிகர் - விவசாயம் செய்பவர்கள்
  • மூறு பாலயநூறு - மூன்று வளையல் மக்கள்(மூன்று வளைய ஒக்கலிகர்).
  • பொட்டு கட்டொரு - பொட்டு(தாலி) அணிபவர்கள்.
  • வெக்குலத்தொடு - போர் தொழில் செய்பவர்கள்.

குல தெய்வங்கள்

தொகு

காப்பிலியர்கள் தங்கள் குலத்தில் பிறந்த பெண்களையேக் குல தெய்வங்களாகக் கொண்டு அவர்களுக்குக் கோயில்கள் அமைத்து வணங்கி வருகின்றனர்.

  • வெள்ளமாலை வீருமாரம்மன்
  • வீருபொம்மக்கா
  • வீருமுத்தம்மா
  • வீருமல்லம்மா
  • சவுடம்மா
  • வீருநாகம்மா
  • வீருகண்ணம்மா
  • சேவியம்மா
  • மதுமுத்தம்மா
  • வீருமாத்தியம்மா
  • எரசிக்கம்மா
  • வீருதம்மா
  • சிக்கஜ்ஜியம்மா
  • அக்கமகாதேவி மற்றும் பல

பழமொழிகள்

தொகு

காப்பு அனைவரையும் காப்பான் (காவல் செய்வான்) , காப்பு கோட்டைக்கு போக மாட்டன் (அரசரிடம் சென்று முறையிட மாட்டான்), காப்புவைப் போல விவசாயம் செய்ய முடியாது போன்ற பழமொழிகளை ஆந்திரா போன்ற பகுதிகளில் பிற இனத்தவர்களால் அறியபடுகின்றன .[5]

குறிப்பிடத்தக்கவர்கள்

தொகு
  • பேரரசர் கெம்பெ கவுடா
  • டி.பானுமைய கவுடர் (நிறுவனர்- பானுமையா கலை,அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி - மைசூர்
  • வி.கே.கணபதி.B.A.,B.T.,- முன்னாள் தமிழ்நாடு ஒக்கலிகர் மகா ஜனசங்க தலைவர்
  • என்.எஸ்.கே.பொன்னையா கவுடர் (முன்னாள் ஒக்கலிகர் ஜாதித்தலைவர் கூடலூர்)
  • ர.முத்துராம்கவுடர் (பெரிய நாட்டாண்மைக்காரர், ஒக்கலிகர் ஜாதித்தலைவர் பூதிப்புரம்)
  • வி.பி. பாலசுப்பிரமணியன், தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் துணை சபாநாயகர்
  • நீதியரசர் முருகேசன், உயர்நீதிமன்ற நீதிபதி
  • டாக்டர் சிவசாமி கவுண்டர் (தலைவர்,தமிழக விவசாயிகள் சங்கம்)
  • கவியரசு.நா. காமராசன் (முன்னாள் கதர் வாரிய துணைத்தலைவர் போடி-மீனாட்சிபுரம்.)
  • ஒ.ஆறுமுகசாமி (விஜயலட்சுமி அறக்கட்டளை கோவை.)

இதையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. http://books.google.co.in/books?id=kXHiAAAAMAAJ&q=nine+kambalam&dq=nine+kambalam&hl=ta&sa=X&ei=vAoyUvDaHsfYrQfS9YHIBg&ved=0CDIQ6AEwAQ
  2. http://books.google.co.in/books?id=cqAlHNTOWJgC&pg=PA109&dq=kappiliyan&hl=ta&sa=X&ei=MAsyUoq6GYGKrQeApoDYBA&ved=0CCwQ6AEwAA#v=onepage&q=kappiliyan&f=false
  3. http://books.google.co.in/books?id=lYSd-3yL9h0C&pg=PA306&dq=kapu+caste&hl=en&ei=DxHiTt_QBYTJrAfqpdHaAQ&sa=X&oi=book_result&ct=result&resnum=5&ved=0CFYQ6AEwBA#v=onepage&q=kapu%20caste&f=false
  4. https://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/199378/3/chapter%201.pdf
  5. http://books.google.co.in/books?id=u8vvtDI9kt0C&pg=PA229&dq=kapu+caste&hl=en&ei=DxHiTt_QBYTJrAfqpdHaAQ&sa=X&oi=book_result&ct=result&resnum=6&ved=0CFwQ6AEwBQ#v=onepage&q=kapu%20caste&f=false
"https://ta.wikipedia.org/w/index.php?title=காப்பிலியர்&oldid=3919401" இலிருந்து மீள்விக்கப்பட்டது