தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை

இந்தியாவில் தமிழ்நாடு மாநில அரசு துறை

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை (ஆங்கிலம்: Department of Housing and Urban Development) என்பது தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி மேலாண்மை மற்றும் நகர்ப்புறத்தின் வளர்ச்சிக்கான துறையாகும். இத்துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், கூட்டுறவு வீட்டு வசதி சங்கம், நகர் ஊரமைப்பு இயக்ககம் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ஆகிய துறைகள் இயங்குகின்றன. இத்துறையின் அமைச்சராக சு. முத்துசாமி உள்ளார்.[1][2]

தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
துறை மேலோட்டம்
அமைப்பு1811
ஆட்சி எல்லைதமிழ்நாடு
தலைமையகம்சென்னை
அமைச்சர்
அமைப்பு தலைமை
  • தர்மேந்திர பிரதாப் யாதவ் இ.ஆ.ப., செயலாளர்
மூல அமைப்புதமிழ்நாடு அரசு


கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகள் தொகு

பெயர் குறிப்பு இணையத்தளம்
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குறைந்த வருவாய்ப் பிரிவு, மத்திய வருவாய்ப் பிரிவு, உயர் வருவாய்ப் பிரிவு ஆகிய மக்களின் வீட்டு வசதி தேவையை, தனது சுயநிதித் திட்டம், தவணைமுறை திட்டம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் வாடகை குடியிருப்புத் திட்டம் ஆகிய திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டில் நிறைவேற்றல் https://www.tnhb.tn.gov.in/
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் தனது பல்வேறு திட்டங்களின் மூலம் குடிசைப் பகுதி மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டு ஏழை மற்றும் கீழ்த்தட்டு மக்களுக்கு வீட்டு வசதியை அளிக்கிறது. http://www.tnscb.org/
கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையம் முதன்மை வீட்டு வசதிச் சங்கங்களின் மூலம் ஏழை மக்களுக்கு வீட்டுக்கடன் அளிக்கிறது. https://tnchf.tn.gov.in/
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் http://www.cmdachennai.gov.in/
நகர் ஊரமைப்பு இயக்ககம் https://tcp.tn.gov.in/home

முன்னாள் அமைச்சர்கள் தொகு


இவற்றையும் பார்க்கலாம் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Manual of Housing and Urban Development Department" (PDF). tn.gov.in/rti. p. 25. Archived from the original (PDF) on 2023-03-29.
  2. "Information Hand book of Town and Country Planning Department" (PDF). tn.gov.in/rti. Archived from the original (PDF) on 2021-05-01.