தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தமிழ்நாடு அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் அமைக்கப்பட்ட ஒரு அரசு நிறுவனமாகும். 1947 ஆம் ஆண்டில் சென்னை நகரில் வீடுகளின் தேவைக்காக "நகர் மேம்பாட்டு அறக்கட்டளை" (City Improvement Trust)எனும் பெயரில் தொடங்கப்பட்ட அமைப்பு 1961 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் எனும் பெயருக்கு மாற்றமாகி உள்ளது. இந்த நிறுவனத்தின் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் வீட்டு மனைகள், வீடுகள் அமைக்கப்பட்டு இந்த நிறுவனம் நிர்ணயிக்கும் விலையில் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வீட்டு மனைகள், வீடுகள் நான்கு பிரிவுகளின் கீழ் அளிக்கப்பட்டு வருகின்றன.

  1. பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர்
  2. குறைந்த வருவாய்ப் பிரிவினர்
  3. நடுத்தர வருவாய்ப் பிரிவினர்
  4. உயர் வருவாய்ப் பிரிவினர்.

வெளி இணைப்புகள்

தொகு