ரா. ராஜேந்திரன்

ரா. ராஜேந்திரன் (R. Rajendran) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[1] இவ்ர் அவர் சேலம் வடக்கு தொகுதியின் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[2][3]மேலும் தற்போது தமிழ்நாடு அமைச்சரவையில் சுற்றுலாத் துறை அமைச்சராகப் பணியாற்றுகிறார்.[4] இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் சேலம் வடக்கு தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

ரா. ராஜேந்திரன்
சுயவிவரம்
தமிழ்நாடு அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
29 செப்டம்பர் 2024
முன்னையவர்கா. இராமச்சந்திரன்
தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2021
தொகுதிசேலம் வடக்கு
பதவியில்
மே 2016 – மே 2021
தொகுதிசேலம் வடக்கு
பதவியில்
மே 2006 – ஏப்ரல் 2011
தொகுதிபனமரத்துப்பட்டி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 சூன் 1959 (1959-06-03) (அகவை 65)
சேலம், இந்தியா
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்சுசீலா ராஜேந்திரன்
பிள்ளைகள்1 மகள்
கல்விஇளங்கலை, இளங்கலைச் சட்டம்
பணிஅரசியல்வாதி, வழக்கறிஞர்

இளமை வாழ்க்கை

தொகு

ரா. ராஜேந்திரன் 3 ஜூன் 1959இல் தமிழ்நாட்டில் பிறந்தார்.[5] இவர் வேளாண்மையைப் பின்னணியாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். சேலத்தில் அரசுப் பள்ளியில் தனது தொடக்கக் கல்வியையும், சேலம், சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பையும் முடித்தார். கல்லூரி நாட்களில் அரசியலில் நுழைந்து 1990களின் முற்பகுதியில் இருந்து இன்றுவரை தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

அரசியல்

தொகு

1985 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு. கருணாநிதி அவர்களால் மாணவர் பிரிவு மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். 1992 ஆம் ஆண்டு தற்போதைய திமுகவின் இளைஞர் அணியின் செயலாளராக இருந்த மு. க. ஸ்டாலின் அவர்களால் திமுகவின் இளைஞர் பிரிவில் மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். 1999 ஆம் ஆண்டு மு. க. ஸ்டாலினால் மாநில இளைஞர் பிரிவு துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2004 ஆம் ஆண்டு அரசு தொழிலாளர் முற்போக்கு கூட்டமைப்பின் மாநிலத் தலைவராக செயல்பட்டார்.

2006 ஆம் ஆண்டு பனமரத்துப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)யின் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் வீரபாண்டி எஸ். ஆறுமுகம் இறந்த பிறகு, கட்சியின் தலைவரால் சேலம் வடக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டு சேலம் வடக்கு (சட்டமன்றத் தொகுதி)யின் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6][2] 2021 ஆம் ஆண்டில், சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு] இரண்டாவது முறையாக சட்டப்பேர்வை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][7][3][8][9]

அமைச்சரவை

தொகு

29.09.2024 அன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டு, தமிழக அரசின் சுற்றுலாத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். இதன்மூலம் சேலம் மாவட்டத்திற்கான திமுகவின் இரண்டாவது அமைச்சராக உள்ளார்.[10][11][12]

சட்டமன்ற உறுப்பினராக

தொகு
தேர்தல் தொகுதி கட்சி முடிவுகள் வாக்கு % தோல்வியடைந்தவர் தோல்வியடைந்த கட்சி தோல்வியடைந்தவர் பெற்ற ஓட்டு % குறிப்பு
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021 சேலம் வடக்கு திமுக வெற்றி 46.52% கோ. வெங்கடாசலம் அதிமுக 42.74% [13]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 சேலம் வடக்கு திமுக வெற்றி 45.14% கே. ஆர். எஸ். சரவணன் அதிமுக 39.99% [14]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011 Salem West|சேலம் மேற்கு அதிமுக தோல்வி 36.48% கோ. வெங்கடாசலம் அதிமுக 54.46% [15]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006 [[பனமரத்துப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)|பனமரத்துப்பட்டி] துமுக வெற்றி 44.57% ஆர். இளங்கோவன் அதிமுக 42.20% [16]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001 ஓமலூர் அதிமுக தோல்வி 30.89% எஸ். செம்மலை அதிமுக 59.39% [17]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Members of Legislative Assembly, Govt. of Tamil Nadu". Govt. of Tamil Nadu.
  2. 2.0 2.1 2.2 "2016 MLA".
  3. 3.0 3.1 3.2 "2021 MLA".
  4. https://www.tn.gov.in/ministerslist
  5. "Rajendran Padayatchi Rayar". ourneta.com.
  6. "Will Stalin reward lone DMK winner from Salem?". Indian Express. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/May/04/will-stalin-reward-lone-dmk-winner-from-salem-2298104.html/. 
  7. "Tamil Nadu 2021 - R. RAJENDRAN (Winner) - SALEM NORTH (SALEM) MLA". myneta.info.
  8. "Salem District - Elected Representatives". Government of Tamil Nadu.
  9. "R Rajendran". News 18 இம் மூலத்தில் இருந்து 14 November 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211114144322/https://www.news18.com/assembly-elections-2021/tamil-nadu/r-rajendran-salem-north-candidate-s22a089c001/. 
  10. Karthikeyan, K. (2024-09-29). "Govi Chezhian to be TN's next higher edu minister, Senthilbalaji likely to return to 'power'". www.dtnext.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-11-07.
  11. "Tamil Nadu Cabinet reshuffle: Senthilbalaji, three others sworn-in as Ministers" (in en-IN). The Hindu. 2024-09-29. https://www.thehindu.com/news/national/tamil-nadu/tamil-nadu-cabinet-reshuffle-senthilbalaji-three-others-sworn-in-as-ministers/article68697452.ece. 
  12. "Tamil Nadu Cabinet rejig: Senthil Balaji re-inducted, 3 ministers dropped". India Today (in ஆங்கிலம்). 2024-09-28. பார்க்கப்பட்ட நாள் 2024-11-07.
  13. "Assembly wise Candidate Valid Votes count 2021, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. பார்க்கப்பட்ட நாள் 30 Apr 2022.
  14. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. பார்க்கப்பட்ட நாள் 30 Apr 2022.
  15. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. பார்க்கப்பட்ட நாள் 9 May 2021.
  16. "FORM20 All AC's Consolidated File-Election 2006.xls" (PDF). www.elections.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 23 Oct 2022.
  17. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரா._ராஜேந்திரன்&oldid=4202952" இலிருந்து மீள்விக்கப்பட்டது