தமிழ்நாடு நீர்வளத் துறை

நீர்வளத் துறை (ஆங்கிலம்:Water Resources Department) என்பது தமிழ் நாட்டின் நீர்வளத்தை மேலாண்மை செய்யும் அரசு துறையாகும். 2021 ஆம் ஆண்டு பொதுப் பணித்துறையிலிருந்து நீர்வளத் துறை தனியாகப் பிரிக்கப்பட்டு, பாசன திட்டங்களான அணைகள், கால்வாய்கள், ஏரிகள், ஆறுகள், நிலத்தடி நீராதாரங்கள் ஆகியவற்றை ஏற்படுத்தி பராமரிக்கும் பணிகளை இத்துறை செய்துவருகிறது.[1][2] இத்துறையின் அமைச்சராக துரைமுருகன் உள்ளார்.

நீர்வளத் துறை
துறை மேலோட்டம்
ஆட்சி எல்லைதமிழ்நாடு
தலைமையகம்சென்னை
அமைச்சர்
மூல அமைப்புதமிழ்நாடு அரசு

பிரிவுகள் தொகு

நீர்வளத் துறையில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நான்கு மண்டலங்களும் ஏழு பிரிவுகளும் உள்ளன.[3] சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையுடன் மாநில நீர்வள மேலாண்மை முகமையும் இணைக்கப்பட்டு 2018 இல் தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகள் சீரமைப்பு கழகம் உருவாக்கப்பட்டது.[4]

அலுவலகங்கள் தொகு

  1. இயக்கம் மற்றும் பராமரிப்பு[5]
  2. திட்ட உருவாக்கம்
  3. மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார விவர குறிப்பு மையம்
  4. வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் கட்டுமான ஆதாரம்
  5. நீர் ஆய்வு நிறுவனம்
  6. அலுவலர் பயிற்சி நிலையம்
  7. கொதிகலன்கள் இயக்ககம்
அமைப்புகள் பணிகள் வலைத்தளம்
நீர்ப்பாசன மேலாண்மை பயிற்சி நிறுவனம் http://www.tamilnaduimti.org/
மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார விபர குறிப்பு மையம் மாவட்டம்தோறும் ஆய்வுக் கிணறுகள் அமைத்து, நிலத்தடி நீர்மட்டத்தைக் கண்காணிக்கிறது http://www.nilaneer.in/
தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களைப் பாதுகாத்தல் மற்றும் நதிகள் சீரமைப்பு கழகம் ஆறுகள் புனரமைப்புப் பணிகளை இக்கழகம் செய்கிறது.
அணை பாதுகாப்பு இயக்குநரகம்[6] அணைகளின் பாதுகாப்பினைக் கண்காணிக்கிறது
நீர் ஆய்வு நிறுவனம், தரமணி, சென்னை[7] நீர் தொடர்பான ஆய்வுகளைச் செய்கிறது

குறிக்கோள்கள் தொகு

இத்துறையின் மூலம் செய்யப்படும் பணிகள்.

  • பாசன அமைப்புகளின் கட்டுமானம் மற்றும் கட்டுமானமில்லாத பகுதிகளை மேம்படுத்தி பராமரித்தல்.
  • புதிய பாசன ஆதாரங்களை மேம்படுத்தல், நீர்வழிப் பாதைகள் மற்றும் வடிகால் வசதிகளை பராமரித்தல்.
  • சாத்தியமான பாசன திட்டங்களை ஆய்ந்து மதிப்பிட்டுக் கண்டறிதல்.
  • கட்டுமானப் பொருட்கள், நீரியல் மற்றும் நீர்நிலையியல் தொடர்பான பரிசோதனை மற்றும் ஆய்வுகளைச் செய்தல், நிலத்தடி நீரின் இருப்பு மற்றும் அதன் தரத்தை பரிசீலித்தல்


மேற்கோள்கள் தொகு

  1. "பொதுப்பணி, நீர்வளத் துறை பிரிப்பு அரசாணை வெளியிடுவது தாமதம்". தினமலர். https://www.dinamalar.com/news_detail.asp?id=2849946. பார்த்த நாள்: 26 October 2023. 
  2. "தமிழக அரசின் பொதுப்பணித்துறை;நீர்வளத்துறை இரண்டாக பிரிப்பு - அரசாணை வெளியீடு!". பிடிஎஸ்நியூஸ். https://ptsnews.in/story/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81. பார்த்த நாள்: 26 October 2023. 
  3. "ஒரே இடத்தில் பணிபுரியும் நீர்வளத்துறையினர்". தினமலர். https://www.dinamalar.com/news_detail.asp?id=3432335. பார்த்த நாள்: 26 October 2023. 
  4. "தமிழ்நாடு நீர்வள ஆதாரங்கள் பாதுகாத்தல், நதிகள் சீரமைப்பு கழகம் உருவாக்கம் தமிழக அரசு அரசாணை வெளியீடு". தினத்தந்தி. https://www.dailythanthi.com/News/State/2018/10/10023327/Tamil-Nadu-Water-Resources-Conservation-Creation-of.vpf. பார்த்த நாள்: 26 October 2023. 
  5. "தொடர்புகள்". நீர்வளத்துறை. பார்க்கப்பட்ட நாள் 26 October 2023.
  6. "அணை பாதுகாப்பு அரசாணை" (PDF). தமிழக அரசு. பார்க்கப்பட்ட நாள் 26 October 2023.
  7. "நீர் ஆய்வு நிறுவனம்" (PDF). நீர்வளத்துறை. பார்க்கப்பட்ட நாள் 26 October 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்நாடு_நீர்வளத்_துறை&oldid=3816127" இலிருந்து மீள்விக்கப்பட்டது