சனவரி 14
நாள்
(14 ஜனவரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | சனவரி 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMXXIV |
சனவரி 14 (January 14) கிரிகோரியன் ஆண்டின் 14 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 351 (நெட்டாண்டுகளில் 352) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1236 – இங்கிலாந்து மன்னர் மூன்றாம் என்றி புரோவென்சு இளவரசி எலனோரைத் திருமணம் செய்தார்.
- 1301 – அங்கேரி மன்னர் மூன்றாம் அன்ட்ரூ இறந்தார்.
- 1539 – எசுப்பானியா கியூபாவை இணைத்துக் கொண்டது.
- 1690 – கிளாரினெட் இசைக்கருவி செருமனியில் வடிவமைக்கப்பட்டது.
- 1724 – எசுப்பானிய மன்னன் ஐந்தாம் பிலிப் முடி துறந்தான்.
- 1761 – இந்தியாவில் மூன்றாம் பானிபட் போர் அகமது ஷா துரானி தலைமையிலான ஆப்கானியர்களுக்கும் மராட்டியர்களுக்கும் இடையில் இடம்பெற்றது. ஆப்கானியர்களின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
- 1784 – அமெரிக்கப் புரட்சிப் போர்: ஐக்கிய அமெரிக்கா பெரிய பிரித்தானியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.
- 1814 – கீல் உடன்பாடு: நோர்வேயை டென்மார்க் மேற்கு பொமிரானியாவுக்காக சுவீடனுக்கு விட்டுக்கொடுத்தது.
- 1858 – பிரான்சு மன்னன் மூன்றாம் நெப்போலியன் கொலைமுயற்சி ஒன்றிலிருந்து தப்பினான்.
- 1865 – இலங்கையில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர்.[1]
- 1907 – ஜமெய்க்காவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
- 1913 – கிரேக்கம் துருக்கியரை பிசானி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் வென்றனர்.
- 1932 – தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி இசை நடன சபை சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: பிராங்கிளின் ரூசவெல்ட், வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோர் கசபிளாங்காவில் சந்தித்து போரின் அடுத்தகட்ட நகர்வுக்கான தீர்மானங்களை எடுத்தனர்.
- 1950 – சோவியத் ஒன்றியத்தின் மிக்-17 போர் விமானம் வெள்ளோட்டம் விடப்பட்டது.
- 1953 – யோசிப் டீட்டோ யுகோசுலாவியாவின் 1-வது அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.
- 1969 – அவாயிற்கு அருகில் எண்டர்பிரைசு என்ற அமெரிக்கக் கடற்படைக் கப்பல் ஒன்றில் தற்செயலாக இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 27 பேர் கொல்லப்பட்டனர்.
- 1972 – டென்மார்க் அரசியாக இரண்டாம் மார்கிரெத் முடிசூடினார். 1412 இற்குப் பின்னர் முடிசூடும் முதலாவது டென்மார்க் மகாராணி இவராவார்.
- 1974 – திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
- 1993 – போலந்தில் பயணிகள் கப்பல் ஒன்று மூழ்கியதில் 55 பேர் உயிரிழந்தனர்.
- 1994 – ஐக்கிய அமெரிக்கத் தலைவர் பில் கிளிண்டன் மற்றும் உருசியத் தலைவர் போரிஸ் யெல்ட்சின் கிரெம்ளினில் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டனர்.
- 1995 – சந்திரிகா அரசு - விடுதலைப் புலிகள் 3ம் கட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.
- 1996 – உலகின் முதலாவது 24 மணி முழு நேர தமிழ் வானொலி ஒலிபரப்பு, கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் டொராண்டோ நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1998 – ஆப்கானித்தானின் சரக்கு விமானம் ஒன்று பாக்கித்தானில் மலை ஒன்றில் மோதியதில் 50 பேர் உயிரிழந்தனர்.
- 2000 – 1993 இல் நூற்றுக்கும் அதிகமான பொசுனிய முசுலிம்களைப் படுகொலை செய்தமைக்காக ஐந்து பொசுனிய பொசுனிய குரொவாசியர்களுக்கு ஐக்கிய நாடுகள் அவை 25 ஆன்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது.
- 2005 – சனிக் கோளின் டைட்டான் நிலாவில் ஐரோப்பாவின் இயூஜென் விண்கலம் இறங்கியது.
- 2011 – துனீசியப் புரட்சி: தூனிசியாவின் அரசுத்தலைவர் பென் அலி சவூதி அரேபியாவிற்குத் தப்பி ஓடினார். அரேபிய வசந்தம் ஆரம்பமானது.
- 2015 – திருத்தந்தை பிரான்சிசு யோசப் வாசு அடிகளை கொழும்பில் புனிதராகத் திருநிலைப்படுத்தினார்.
பிறப்புகள்
- 1551 – அபுல் ஃபசல், பேரரசர் அக்பரின் ஆலோசகர் (இ. 1602)
- 1741 – பெனடிக்ட் ஆர்னோல்டு, அமெரிக்க-பிரித்தானிய இராணுவத் தளபதி (இ. 1801)
- 1866 – ஜார்ஜ் குர்ச்சீயெவ், ஆர்மீனிய ஆன்மீகவாதி (இ. 1949)
- 1875 – ஆல்பர்ட் சுவைட்சர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பிரான்சிய-காபோனிய மருத்துவர், மெய்யியலாளர் (இ. 1965)
- 1887 – கோ. நடேசய்யர், இலங்கை மலையகத் தமிழறிஞர், பதிப்பாளர், அரசியல்வாதி, இதழாசிரியர், எழுத்தாளர் (இ. 1947)
- 1915 – ஹொன்னப்ப பாகதவர், தென்னிந்திய கருநாடக இசைக் கலைஞர், நாடக, திரைப்பட நடிகர், பாடகர், இசை அமைப்பாளர், இயக்குநர் (இ. 1992)
- 1917 – க. வெள்ளைவாரணனார், தமிழகத் தமிழறிஞர், தமிழிசை அறிஞர் (இ. 1988)
- 1918 – கே. முத்தையா, தமிழக விடுதலைப் போராட்ட வீரர், இடதுசாரி, எழுத்தாளர் (இ. 2003)
- 1920 – ஆர். கே. ஸ்ரீகண்டன், தென்னிந்தியக் கருநாடக இசைப் பாடகர் (இ. 2014)
- 1926 – மகாசுவேதா தேவி, வங்காள எழுத்தாளர் (இ. 2016)
- 1934 – நா. சோமகாந்தன், ஈழத்து எழுத்தாளர் (இ. 2006)
- 1936 – ம. பார்வதிநாதசிவம், ஈழத்துப் புலவர், பத்திரிகையாளர் (இ. 2013)
- 1937 – சோபன் பாபு, தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (இ. 2008)
- 1938 – டி. செல்வராஜ், தமிழக எழுத்தாளர் (இ. 2019)
- 1938 – சுருளி ராஜன், தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் (இ. 1980)
- 1943 – ரால்ஃப் ஸ்டைன்மன், கனடிய நோய்த்தடுப்பாற்றல் மருத்துவர், உயிரியலாளர் (இ. 2011)
- 1946 – க. அருணாசலம், ஈழத்து தமிழறிஞர், பேராசிரியர் (இ. 2015)
- 1950 – ச. முருகானந்தன், இலங்கை எழுத்தாளர், மருத்துவர்
- 1950 – ராமபத்ராச்சார்யா, இந்திய மதகுரு
- 1951 – ஓ. பன்னீர்செல்வம், தமிழக அரசியல்வாதி, அரசியல்வாதி
- 1960 – ஜெ. வீரநாதன், தமிழக எழுத்தாளர்
- 1960 – சு. கமலா, மலேசிய எழுத்தாளர்
- 1963 – இசுட்டீவன் சோடர்பர்க், அமெரிக்க இயக்குநர்
- 1965 – ஷமீல் பசாயெவ், செச்சினியப் போராளி (இ. 2006)
- 1967 – எமிலி வாட்சன், ஆங்கிலேய நடிகை
இறப்புகள்
- 1742 – எட்மண்டு ஏலி, ஆங்கிலேய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1656)
- 1752 – தேவசகாயம் பிள்ளை , இந்தியக் கத்தோலிக்க அருளாளர் (பி. 1712)
- 1753 – ஜியார்ஜ் பெர்க்லி, ஆங்கிலேய-ஐரிய மெய்யியலாளர் (பி. 1685)
- 1833 – ஹரியட் வின்சுலோ, அமெரிக்க-இலங்கை மறைப்பணியாளர், உடுவில் மகளிர் கல்லூரியின் நிறுவனர் (பி. 1796)
- 1867 – ஜீன் ஆகஸ்டே டொமினிக் இன்கிரெஸ், பிரான்சிய ஓவியர் (பி. 1780)
- 1892 – அப்துல்லா இப்னு உமர் பாதீப் அல்யமானி, யெமனிய-இலங்கை இசுலாமிய சூபி அறிஞர் (பி. 1825)
- 1898 – லூயிஸ் கரோல், ஆங்கிலேய எழுத்தாளர், கவிஞர், கணிதவியலாளர் (பி. 1832)
- 1901 – ஹெர்மைட், பிரான்சியக் கணிதவியலாளர் (பி. 1822)
- 1937 – ஜெய்சங்கர் பிரசாத், இந்தியக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1889)
- 1957 – ஹம்பிறி போகார்ட், அமெரிக்க நடிகர் (பி. 1899)
- 1976 – அப்துல் ரசாக் உசேன், மலேசியாவின் 2வது பிரதமர் (பி. 1922)
- 1978 – கியேடல், ஆத்திரிய-அமெரிக்க கணிதவியலாளர், மெய்யியலாளர் (பி. 1906)
- 2000 – எம். வி. வெங்கட்ராம், தமிழக எழுத்தாளர் (பி. 1920)
- 2016 – அலன் ரிக்மான், ஆங்கிலேய நடிகர் (பி. 1946)
- 2017 – சூ யூக்வாங், சீன சமூகவியலாளர் (பி. 1906)
- 2017 – சுர்சித் சிங் பர்னாலா, இந்திய அரசியல்வாதி (பி. 1925)
சிறப்பு நாள்
- தாய்நாட்டைக் காத்தவர்களுக்கான நாள் (உசுபெக்கிசுத்தான்)
- புரட்சி மற்றும் இளைஞர் நாள் (தூனிசியா)
- தைப்பொங்கல் (சனவரி 14 அல்லது சனவரி 15)
- மகி (பஞ்சாப் (இந்தியா), அரியானா, இமாச்சலப் பிரதேசம்)
- மகர சங்கராந்தி (இந்தியா), நேபாளம்)
- உத்தராயணம் (உத்தராகண்டம், குசராத்து, இராசத்தான்)
மேற்கோள்கள்
- ↑ "Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.