சு. கமலா
சு. கமலா, (பிறப்பு: சனவரி 14 1960) மலேசியாவின் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
தொகுஇவர் 1982 முதல் எழுத்துத்துறையில் ஈடுபாடு காட்டி வருகிறார். சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், வானொலி நாடகங்கள் என தமிழ் படைப்பிலக்கியத் துறையிலும் இலக்கிய ஆய்வுத்துறையிலும் தனது பங்களிப்பினைத் தொடர்ச்சியாக வழங்கிவருகிறார். மலேசிய தேசிய பத்திரிகைளிலும் இதழ்களிலும் இவரின் இத்தகைய ஆக்கங்கள் பிரசுரமாகியுள்ளன. மேலும் தமிழக இதழான "அமுதசுரபி" யிலும் இவரின் கதை பிரசுரமாகியுள்ளது.
மலாய மொழியில்
தொகுமலாய் மொழியிலும் இவர் சிறுகதைகளை எழுதி வருகின்றார். சில மலாய் மொழித் தொகுப்புகளிலும் இவரது கதைகள் இடம் பெற்றுள்ளன.
இதழியல்துறை
தொகுமலேசியாவிலிருந்து வெளிவரும் "உங்கள் குரல்" இதழின் துணையாசிரியராக தற்போது பணியாற்றி வருகின்றார்.
நூல்கள்
தொகு"தீ மலர்" (வரலாற்றுக் குறுநாவல் 1986)
பரிசுகளும் விருதுகளும்
தொகு- சா. அன்பானந்தன் இலக்கியப் பரிசு வாரியத்தின் குறுநாவல் பரிசு (1986)
- டத்தோ கு. பத்மநாதன் பரிசு (1987)
- தேவான் பஹாசா டான் புஸ்தகாவின் மலாய்ச் சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு (1987)
- பாரதிதாசன் நூற்றாண்டு விழாச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு (1991)
- பினாங்கு மாநில அரசு, வை.ரீ.எல் (YTL) நிறுவனம், பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கம் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு (1997);
- பினாங்கு மாநில அரசு, வை.ரீ.எல் (YTL) நிறுவனம், பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கம் இணைந்து நடத்திய ஓரங்க நாடகப் போட்டியில் முதல் பரிசு (1999)
- மலேசியத் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு (1999).