அமுதசுரபி (இதழ்)
நூல்
அமுதசுரபி 1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கலை-இலக்கிய மாத இதழ். "சொல்லின் செல்வர்" என வழங்கப்படும் ரா. பி. சேதுப்பிள்ளையால் இப்பெயர் சூட்டப்பட்டது. எழுத்தாளர் விக்கிரமன் 54 ஆண்டுகள் அமுதசுரபியின் ஆசிரியராக இருந்தார்.[1] 2005 ஆம் ஆண்டு முதல் டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் ஆசிரியராக இருந்து வருகிறார். 1976 ஆம் ஆண்டிலிருந்து ஸ்ரீராம் குழுமத்தின் அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் இதழ். தீபாவளி மலர் வெளியிடும் இதழ்களில் அமுதசுரபியும் ஒன்று. [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ [கூளம் கதை குறித்தான் அறிமுகத்தில் எழுத்தாளர் விக்கிரமன் அமுதசுரபி இதழுக்காக கோரிய கதை இடம் பெற்றுள்ளது. -மோகன்ஜி பொன்வீதி சிறுகதைகள் நூல் - அக்ஷரா பிரசுரம்]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-02-28. பார்க்கப்பட்ட நாள் 2021-08-13.