1724
1724 (MDCCXXIV) ஒரு சனிக்கிழமையில் துவங்கிய ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆண்டு ஆகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது புதன்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1724 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1724 MDCCXXIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1755 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2477 |
அர்மீனிய நாட்காட்டி | 1173 ԹՎ ՌՃՀԳ |
சீன நாட்காட்டி | 4420-4421 |
எபிரேய நாட்காட்டி | 5483-5484 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1779-1780 1646-1647 4825-4826 |
இரானிய நாட்காட்டி | 1102-1103 |
இசுலாமிய நாட்காட்டி | 1136 – 1137 |
சப்பானிய நாட்காட்டி | Kyōhō 9 (享保9年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1974 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4057 |
நிகழ்வுகள்
தொகு- சனவரி 14 - எசுப்பானியாவின் மன்னர் ஐந்தாம் பிலிப்பு பதவி துறந்தார். அவரது 16-வயது மகன் முதலாம் லூயிசு புதிய அரசனானான்.
- மே 29 - பதின்மூன்றாம் பெனடிக்டு 245வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.
- சூன் 23 - பாரசீகத்திற்கும், உதுமானியப் பேரரசு, மற்றும் உருசியாவுக்கும் இடையில் கான்ஸ்டன்டீனப்போல் நகரில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
- ஆகத்து 31 - 7 மாதங்களே பதவியில் இருந்த எசுப்பானியாவின் முதலாம் லூயிசு மன்னன் தனது 17வது அகவையில் பெரியம்மை நோய் கண்டு இறந்தான். அவனது தந்தை ஐந்தாம் பிலிப்பு மீண்டும் மன்னனாக முடிசூடினார்.
- நவம்பர் 16 - உருசியாவின் முதலாம் கேத்தரீன் அரசியின் காதலன் வில்லெம் மொன்சு தூக்கிலிடப்பட்டான்.
- சீனா வெளிநாட்டு மதப்பரப்புனர்களை வெளியேற்றியது.
- ஆப்கானித்தானின் ஷா மன்னர் மகுமுது ஒட்டாக்கி பித்தரானார்.
- இங்கிலாந்தின் மிகப்பழமை வாய்ந்த லோங்மேன் பதிப்பகம் நிறுவப்பட்டது.
- பாரன்ஃகைட் அலகு அறிமுகப்படுத்தப்பட்டது.
- வெள்ளித் தூளும், சுண்ணத் தூளும் கலந்த கலவை, ஒளி படும்போது கரு நிறமாக மாறுகின்றது என்பதை யோகான் ஐன்றிச் சூல்ட்சு கண்டுபிடித்தார்.
பிறப்புகள்
தொகு- ஏப்ரல் 22 - இம்மானுவேல் கண்ட், செருமானிய மெய்யியலாளர் (இ. 1804)